சலிப்பு
சலிப்பு (Boredom) என்பது பொதுவாக ஒருவர் எந்த ஒரு செயலினையும் செய்ய வேண்டிய நிலை இல்லாத போது உண்டாகும் உணர்வு. பயனுள்ள செயலை செய்யும் போது வரும் திருப்தியின் எதிர்மறை என்றும் கொள்ளலாம்.
வகைகள்
[தொகு]மூன்று வகைகளாக சலிப்பினை பிரிக்கலாம், எனினும் எல்லாமே வேலையில்லாததாலோ கவனத்தை தன்பால் இழுப்பதற்காகவோ எழுகின்றன[1]:
- பிடித்தமான செயல்களை செய்வதிலிருந்து தடுக்கப்பட்டால்
- பிடிக்காத செயலைச் செய்ய வலுக்கட்டாயப் படுத்தினால்
- எந்தவொரு காரணமும் இல்லாது ஒரு காரியத்தில் கவனம் செலுத்த இயலாது போகும் போது
ஆராய்ச்சிகளும் முடிவுகளும்
[தொகு]மனவியல் வல்லுநர்கள் இதனை ஒரு அளவுகோள் கொண்டு ஒரு மனிதன் எந்த அளவிற்கு சலிப்பாகக்கூடும் என அறிய முடியும் என்கின்றனர்[2]. கவனக்குறைப்பாட்டாலே தான் சலிப்பு ஏற்படும் என பல ஆராய்ச்சிகள் தெரியப்படுத்துகின்றன[3]. சலிப்பும் சலிப்புருவாகும் தன்மையும் ஒருவரின் மன அழுத்தத்தின் அடையாளமாகவும் கூறுகின்றனர்[4][5][6]. பலவகையான மனம்சார்ந்த, உடல்சார்ந்த, கல்வி சார்ந்த, சமூகம் சார்ந்த பிரச்சனைகளும் இதற்கு வித்திடுவதாக கண்டறிந்துள்ளனர்.
ஆங்கிலத்தில் முதல் பயன்பாடு
[தொகு]சார்லஸ் டிக்கென்ஸ் (Charles Dickens) என்பவர் முதன்முறையாக "boredom" என்ற சலிப்பிற்கான ஆங்கிலச்சொல்லை உபயோகப்படுத்தியுள்ளார். பின்னர் இது பொதுவாக ஏற்கப்பட்டது[7][8].
உசாத்துணை
[தொகு]- ↑ Cheyne, J. A., Carriere, J. S. A., Smilek, D. (2006). "Absent-mindedness: Lapses in conscious awareness and everyday cognitive failures". Consciousness and Cognition 15 (3): 578–592. doi:10.1016/j.concog.2005.11.009. பப்மெட்:16427318. http://www.arts.uwaterloo.ca/~oops/article.php?src=yccog798. பார்த்த நாள்: 2013-04-12.
- ↑ Farmer, R., Sundberg, N. D. (1986). "Boredom proneness: The development and correlates of a new scale". Journal of Personality Assessment 50 (1): 4–17. doi:10.1207/s15327752jpa5001_2. பப்மெட்:3723312. https://archive.org/details/sim_journal-of-personality-assessment_spring-1986_50_1/page/4.
- ↑ Fisher, C.D. (1993). "Boredom at work: A neglected concept". Human Relations 46 (3): 395–417. doi:10.1177/001872679304600305. https://archive.org/details/sim_human-relations_1993-03_46_3/page/395.
- ↑ Carriere, J. S. A., Cheyne, J. A., Smilek, D. (September 2008). "Everyday Attention Lapses and Memory Failures: The Affective Consequences of Mindlessness" (PDF). Consciousness and Cognition 17 (3): 835–847. doi:10.1016/j.concog.2007.04.008. பப்மெட்:17574866. http://arts.uwaterloo.ca/~oops/publish/yccog-06-149.pdf.
- ↑ Sawin, D. A., Scerbo, M. W. (1995). "Effects of instruction type and boredom proneness in vigilance: Implications for boredom and workload". Human Factors 37 (4): 752–765. doi:10.1518/001872095778995616. பப்மெட்:8851777.
- ↑ Vodanovich, S. J., Verner, K. M., Gilbride, T. V. (1991). "Boredom proneness: Its relationship to positive and negative affect". Psychological Reports 69 (3 Pt 2): 1139–46. doi:10.2466/PR0.69.8.1139-1146. பப்மெட்:1792282.
- ↑ Oxford Old English Dictionary
- ↑ Online Etymology Dictionary