அன்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அணில் தாயின் அன்பு கூண்டில் அடைபட்ட தன் பிள்ளை மீது

அன்பு என்பது நெருக்கமான உள்ளப் பிணைப்பு தொடர்பான ஒர் உணர்வும் அநுபவமும் ஆகும். பக்தி, பாசம், நட்பு, காதல் என இவ்வுலகில் அன்பு பல பரிமாணங்களில் உள்ளது. அன்பு என்ற சொல்லை ஆங்கிலத்தின் "love" என்ற சொல்லுக்கு இணையாகக் கருதினாலும், "love" என்னும் சொல் குறிக்கும் எல்லாப் பொருளையும் "அன்பு" என்னும் சொல் குறிப்பதில்லை. "love" என்பதற்கு ஆங்கிலத்தில் பல பொருள்கள் உள்ளன. பொதுவாக ஒரு பொருள் அல்லது செயலின் மீது உள்ள "விருப்பம்" (நான் பாயாசம் "விரும்பி" உண்பேன்), இருவருடையே காணப்படும் பொதுவான அன்பு, மிக நெருக்கமான "காதல்" உணர்வு வரை பல பொருள்களில் அச் சொல் பயன்படுத்தப்படுகின்றது. அன்பு என்ற சொல்லுக்குரிய உணர்வும் எண்ணக்கருவும் தமிழுக்குத் தனித்துவமானது எனலாம். இவ்வாறு மொழிகளிடையே "அன்பு" என்னும் பொருள் தரக்கூடிய சொற்கள் குறிக்கும் உணர்வுகள் பலவாறான வேறுபாடுகளைக் கொண்டவையாக இருப்பதால், அன்புக்கு உலகம் தழுவிய வரைவிலக்கணம் ஒன்றைக் கொடுப்பது கடினமானது.

தமிழிலும் அன்பு என்னும் உணர்வு பல்வேறு மட்டங்களில் வெளிப்படுவதைக் காணலாம். தாய் மீதான அன்புக்குச் சிறப்பான இடம் உண்டு. அன்பு அதன் பல்வேறு வடிவங்களில் மனிதர்களிடையேயான தொடர்புகளை வலுப்படுத்தும் ஒரு காரணியாக உள்ளது. அத்துடன் அன்பின் உளவியல் முக்கியத்துவம் காரணமாக ஆக்கக் கலைகளில் அது ஒரு முக்கியமான கருப்பொருளாக ஆளப்படுகிறது.

அகாப்பே[தொகு]

கிரேக்கப் பதமான αγάπη (Agape) அன்பு எனும் சொல்லுக்கு குறிப்பிட்டளவு பொருத்தமாகவுள்ளது. இந்த அன்பில் பாலியல் தொடர்புபட்ட உணர்வுகளுக்கு இடமில்லை. இது கடவுளுக்கும் மனிதனுக்கும், மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையிலான அன்பை ஒத்தது எனவும் கருதப்படுகின்றது.[1]

உசாத்துணை[தொகு]

  1. "agape." Encyclopædia Britannica. Encyclopædia Britannica Online. Encyclopædia Britannica, 2011. Web. 17 Sep. 2011. <http://www.britannica.com/EBchecked/topic/662884/agape>.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்பு&oldid=2242757" இருந்து மீள்விக்கப்பட்டது