எதிர்பார்ப்பு (உணர்ச்சி)
எதிர்பார்ப்பு (anticipation) என்பது பற்றுதலுடன் இன்பம் தரும் அல்லது பரவசமளிக்கும் சில நிகழ்வுகளை எதிர்காலத்தில் நடக்கும் என்னும் எண்ணங்களைக் குறிக்கும் உணர்வு. இது நல்லதிற்கு ஏங்குதலாகக்கூட இருக்கலாம்.
எதிர்ப்புணர்வாக
[தொகு]ஜார்ஜ் எமான் வைல்லாண்ட் என்பவர் மன உளைச்சலையும் மன அழுத்தத்தினையும் எதிர்கொள்ளும் ஒரு நம்பகமான உணர்வாக எதிர்பார்ப்பினை கூறுகிறார். ஒரு கடினமான பணியினை அது எவ்வாறிருக்கும் என்ற எதிர்பார்ப்பினைக் கொண்டு எளிதில் எதிர்கொண்டு வெல்ல இயலும் என்றும் கூறுகிறார்[1]. அகவை கூடக்கூட இவ்வாறான நேர்மறை எதிர்பார்ப்புக்கள் கூடும் மற்றும் அதனால் உளவியல் நன்மைகள் விளையும் என்பதனையும் ஆய்வு கொண்டு கண்டறிந்துள்ளார்[2].
ஆசையாக
[தொகு]"எதிர்பார்க்கும் உணர்வு என்பது பாலியல் ரீதியான ஆவலாகவும் கருதப்படுகிறது[3]" புணர்ச்சி என்பது ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்வாதலால் அதனை மனம் எதிர்பார்ப்பது இயல்பே[4]. இது அதிகபட்ச மன எழுச்சியையும் அளிக்க உள்ளது.
பொதுவாக எதிர்பார்ப்பு என்பது தினசரி நிகழ்வுகளின் உள்ளூர உந்துதல் எனவும் கூறலாம். இது பொதுவான எதிர்பார்ப்பு மற்றும் என்ன நிகழும் என்ற கணிப்புமாகும்[5]. ஒருவர் தன் வாழ்வினை ரசிக்கவும் மகிழவும் வலிகளிலிருந்து மீளவும் எதிர்பார்ப்பு முக்கியம் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்[6].
உசாத்துணை
[தொகு]- ↑ Robin Skynner/John Cleese, Life and how to survive it (London 1994) p. 55
- ↑ Hope R.Conte/Robert Plutchik, Ego Defenses (1995) p. 127
- ↑ Barry and Emily McCarthy, Rekindling Desire (2003) p. 89
- ↑ McCarthy, p. 12
- ↑ Clon Campbell, The Romantic Ethic and the Spirit of Modern Consumerism (2005) p. 83
- ↑ Adam Phillips, On Flirtation (London 1994) p. 47