பதகளிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தவிப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தவிப்பான முகத்துடன் வேலை தேடி வந்தவர்

பதகளிப்பு அல்லது தவிப்பு (anxiety) என்பது ஒருவர் நெருக்கடிக்குள்ளாகின்ற அல்லது சங்கடமான சந்தர்ப்பங்களை முகம்கொடுக்க நேரிடும்போது ஏற்படும் சாதாரண மனநிலை எழுச்சியைக் குறிக்கின்றது. இது தன்னாட்சியாக, உணர்வுநிலை, அறிநிலை மற்றும் நடத்தக் கோலங்களில் நிகழும் உடல் மற்றும் உள ரீதியான மாற்றம் ஆகும்[1]. இது பயம் மற்றும் தன்னுணர்வு காரணமான இடர்நிலையாகும்[2].

தவிப்பு மனதாலோ அல்லது உடலாலோ அடையும் உணர்வாகும்[1]. இது ஏதாவது ஒன்று நடக்கும் என்று எதிர்பார்க்கும் போதோ, ஏதோ ஒன்று நடக்கக்கூடாது என்று ஆவல் கொள்ளும் போதோ தோன்றும் அக்கறை அல்லது அச்சம் எனக்கூறலாம்[3]. தவிப்பு வந்து விட்டால் ஏதோ பிரச்சினை என்றும் ஒருவருக்கு பயம், கவலை, நம்பிக்கையின்மை, என்று பல உணர்வுகளை தோற்றுவிக்கும்[4]. பயம் என்பது தவிப்பல்ல. தவிப்பினும் மேலோங்கிய உணர்வு பயம், அது மனிதரை மொத்தமாக செயலிழக்க செய்ய இயலும்.[5].

பதகளிப்பு ஏன் ஏற்படுகின்றது[தொகு]

  • வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தத்தை உருவாக்கவல்ல சந்தர்ப்பங்களும் (குடும்பத்தில், தொழிலில், அல்லது அன்றாட வாழ்கையில் ஏற்படும் உறவுப்பிரச்சினைகள், அழுத்தங்கள்)
  • மூளையில் நடக்கின்ற உயிரிரசாயன மாற்றங்கள்.
  • வேறு ஏதாவது நோய் அறிகுறியாக தைராய்டு சுரப்பியின் அதிகரித்த தொழிற்பாடு.

கட்டுப்படுத்தும் முறைகள்[தொகு]

  • அமைதியைக் கடைபிடித்தல். பொறுமையாக இருத்தல்
  • யோகாசனம், மனதை சாந்தப்படுத்தும் தொழுகை மற்றும் வணக்கங்களில் ஈடுபடுதல்
  • மனநல ஆலோசனைகள் மூலம்
  • மருந்துகள்

நீங்கள் செய்யக்கூடாதது என்ன?[தொகு]

  • வைத்திய ஆலோசனையின்றி மருந்துகளை உபயோகித்தல் அல்லது மதுபானம் அருந்தல்
  • அவசியமான சந்தர்ப்பங்களில் பொருத்தமான யோசனை; உதவியை நாடாமலிருத்தல்.

பதகளிப்பை உங்களால் கட்டுப்படுத்த முடியாது போகுமிடத்தும் இந்நிலை தொடர்ந்து நீடிக்குமிடத்தும் பொருத்தமான உடல்நல மற்றும் உளநல மருத்துவ உதவியை நாடுங்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Seligman, M.E.P., Walker, E.F. & Rosenhan, D.L. Abnormal psychology, (4th ed.) New York: W.W. Norton & Company, Inc.
  2. Davison, Gerald C. (2008). Abnormal Psychology. Toronto: Veronica Visentin. பக். 154. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-470-84072-6. https://archive.org/details/abnormalpsycholo0000unse_j6d5. 
  3. Davison, Gerald C. (2008). Abnormal Psychology. Toronto: Veronica Visentin. பக். 154. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-470-84072-6. https://archive.org/details/abnormalpsycholo0000unse_j6d5. 
  4. Bouras, n. and Holt, G. (2007). Psychiatric and Behavioural Disorders in Intellectual and Developmental Disabilities 2nd ed. Cambridge University Press: UK.
  5. Robin Marantz Henig, "ANXIETY!", "The New York Times Magazine", August 20, 2012

புற இணைப்புகள்[தொகு]

வகைப்பாடு
வெளி இணைப்புகள்
  • மெடிசின்பிளசு: 003211
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதகளிப்பு&oldid=3778660" இலிருந்து மீள்விக்கப்பட்டது