ஆச்சரியம்
ஆச்சரியம் (surprise and shock for positive and negative events, respectively) என்பது தான் எதிர்பாராத நிகழ்வின் போது உண்டாகும் உணர்ச்சியாகும். இது சிறிய அளவிலோ, நன்மையையோ அல்லது தீமையையோ கருதி உருவாகும் உணர்வாகும்.
தோன்றும் காலம்
[தொகு]சில முன்னர் நிர்ணயிக்கப்பட்ட சட்டதிட்டங்களின் படி நிகழ்வுகள் நடக்காவிடில் அது ஆச்சரியத்தினை உண்டாக்கும். இவ்வாறு தான் நடக்கும் என மனம் தீர்மானிக்க, எதிர்பார்த்தபடி நடைபெறாவிடில் உண்டாகும்.[1]
உடலியல் மாற்றங்கள்
[தொகு]- கண்களின் புருவங்கள் மேலுயர்ந்து வளைவாகும்
- சமநிலையான கோடுகள் நெற்றியில் தோன்றும்
- கண்கள் விரிந்து வெள்ளை நிற பகுதி அதிகமாக தெரிய வரும்
- வாய் திறந்து கீழ் தாடை கீழே விழுதல்
தாடைகள் எவ்வளவு கீழே விழுகின்றன என்பதனையும், விழிகள் விரியும் அளவினையும் பொருத்து எவ்வளவு ஆச்சரியம் உண்டாயிருக்கிறதென அறியலாம். சில நேரங்களில் வாய் திறக்காவிடினும், எளிதாக ஆச்சரிய உணர்வை உணரலாம்[2].
ம
[தொகு]
- அற்புதம்
- வியப்பு
- அதிர்ச்சி (தீமை எனில்)
கலைகளில் பங்கு
[தொகு]ஆச்சரியம் என்பதனை அத்புதம் (अद्भुतं) என்று குறிப்பிட்டு ஒன்பது நவரசங்களில் ஒன்றாக பரதம் பழகுவோர் பழகுவர். பல்வேறான உணர்ச்சிகளில் ஒன்றாக வெளிப்படுத்த கற்பர்.