உள்ளடக்கத்துக்குச் செல்

குற்றுணர்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குற்றுணர்வு அல்லது குற்ற உணர்வு (Guilt) என்பது ஒருவர் தான் செய்தது தவறு என்று உணர்தல் ஆகும். இது உளவியல் சம்பந்தப்பட்ட ஓர் உணர்வு.

சுயகட்டுப்பாடு

[தொகு]

தான் தனக்கென்று நிர்ணயிக்கப்பட்ட நடத்தை நெறிகளை மீறும் போதோ அல்லது சமுதாய சட்டங்களுக்குப் புறம்பாக நடக்கும் போதோ இவ்வாறான உணர்வு தோன்றும்[1]. இவ்வாறான எண்ணங்கள் தன் தவற்றினை உணர்ந்து மன்னிப்பு கோரவும், சரிசெய்யவும் ஒருவரைத் தூண்டும் என்பது இவ்வுணர்வின் தனிச்சிறப்பு.

குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது பழமொழி.

பிழைத்தோரின் குற்றவுணர்வு

[தொகு]

பிழைத்தோரின் குற்றவுணர்வு (Survivor guilt / disorder) என்பது ஒரு நபர் ஒரு பேரதிர்ச்சியான அல்லது உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் இருந்து உயிர் பிழைக்கும்போது, அதே நிகழ்வில் மற்றவர்கள் உயிரிழந்ததற்காகத் தான் ஏதோ தவறு செய்துவிட்டது போன்ற ஒரு மனநிலையை அடைவதைக் குறிக்கும் ஒரு உளவியல் நிலையாகும்[2]. இந்த நிலை பெரும்பாலும் போர்கள், இயற்கைச் சீற்றங்கள், பெரும் விபத்துக்கள் அல்லது கொள்ளை நோய்களில் இருந்து உயிர் பிழைத்தவர்களிடம் காணப்படுகிறது. 1961 ஆம் ஆண்டில் வில்லியம் நிடெர்லாண்ட் என்ற மருத்துவர் நாசிச வதை முகாம்களில் இருந்து தப்பியவர்களை ஆய்வு செய்தபோது இந்த நிலையை முதன்முதலில் விவரித்தார்.

உசாத்துணை

[தொகு]
  1. "Guilt." Encyclopedia of Psychology. 2nd ed. Ed. Bonnie R. Strickland. Gale Group, Inc., 2001. eNotes.com. 2006. 31 December 2007
  2. "பிழைத்தோரின் குற்றவுணர்வு as per tandfonline.com". Retrieved 2018-02-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குற்றுணர்வு&oldid=4530304" இலிருந்து மீள்விக்கப்பட்டது