உள்ளடக்கத்துக்குச் செல்

நம்பிக்கையின்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நம்பிக்கையின்மை அல்லது அவநம்பிக்கை என்பது தான் விருப்பப்பட்டதோ அல்லது எண்ணியதோ நடக்காது என்றெண்ணும் எதிர்மறை சிந்தனையாகும்.

தடை

[தொகு]

இவ்வுணர்ச்சி ஒரு எதிர்மறையான உணர்வென்றும் ஒருவரின் சாதனைக்கு குறுக்கே நிற்கும் என்றும் அறிய வேண்டும். சில நேரங்களில் நம்பிக்கையின்மை நலன் பயக்கிறது. எடுத்துக்காட்டாக தன் நீச்சல் திறமையில் நம்பிக்கை இல்லாதோர் காட்டாற்றிலோ பொங்கும் கடலிலோ குதிக்காது உயிர் பிழைப்பர். எனினும் பெரும்பாலும் இது செயல்களுக்கு தடையாக இருப்பதால் இது தீங்கினையே விளைவிக்கிறது, எடுத்துக்காட்டாக வாகனம் ஓட்ட தெரிந்த நபர் தான் எங்கு இடித்துவிடுவோமோ என வாகனமே ஓட்டாதிருத்தல் போல்.

தொடரும் வாழ்வு

[தொகு]

ஒருவரின் நம்பிக்கையானது அதிகரிக்கவும் குறையவும் இயலும். எனவே இதனை பெரிது படுத்த தேவை இல்லாவிடினும், தொடர்ந்து நிலவும் அவநம்பிக்கைக்கு சிகிச்சை அளித்தல் வேண்டும். எனினும் எவ்வாறான சிரமமான வாழ்வின் பகுதிகளிலும், நன்மை வரும் என எண்ணுவோர் தன் பாதையில் தொடர்ந்து பயனித்து வெற்றி காண்பர்[1].

சிகிச்சை

[தொகு]

இவ்வுணர்வினை எதிர்கொண்டு வெற்றி பெற சரியான வகையிலான மன உந்துதல் தேவை. இது உறவினரிடமோ, நட்பிடமோ, சுற்றத்திடமோ அல்லது மருத்துவ நிபுனர்களிடமோ பெற்று வாழ்வில் வளம்பட வாழ இயலும்[2].

உசாத்துணை

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-01-25. பார்க்கப்பட்ட நாள் 2013-04-18.
  2. http://www.mindtools.com/selfconf.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=நம்பிக்கையின்மை&oldid=3560036" இலிருந்து மீள்விக்கப்பட்டது