மனநலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிமுகம்[தொகு]

வில்லியம் கானல் என்னும் கல்வியாளர் 150 ஆண்டுகளுக்கு முன்னர் மனநலம் என்னும் தொடரைப் பயன்படுத்தினார். கிளிப்போர்ட் பியர்ஸ் என்னும் அமெரிக்கர் இதனை உலக இயக்கமாக மாற்றினார். மாணவர் மாண்பினை வெளிக்கொணர்ந்து தம் பணியினை நிலை நிறுத்த ஆசிரியர்களுக்கு மன்நலம் பற்றிய அறிவு மிகவும் இன்றியமையாததாகிறது.

மனநலம்-வரையறை[தொகு]

உடல்நலமும் மனநலமும் சீரான வாழ்க்கைக்கு இன்றியமையாதனவாகும். பயனுள்ள ஒரு கல்வி முறை, மாணவர்களுடைய உடல் நலம், அறிவு வளர்ச்சி முதலியவற்றிற்குத் துணை செய்வதுடன் அவர்கள் வாழ்க்கையினை முறையாக எதிர் கொள்ளுவதற்குரிய வழிகளைக் காட்டும்.

மனநலத்தின் பண்புகள்[தொகு]

நம்மால் மாற்றவியாதபடி வாழ்க்கையில் எழும் உண்மை நிலைமைகளை மனநலம் பெற்றவர் ஏற்பார்.

மனநலம் பெற்றவர் கற்பனை உலகில எப்போதும் வாழ்வதில்லை.

மனநலம் பெற்றுள்ள குழந்தைகள் எவ்வாறு நடந்து கொள்வர் என்பது பற்றி வாட்டன்பர்க் என்னும் அறிஞரது கருத்துக்கள் பயனுள்ளவை, மனநலம் பெற்றுள்ள குழந்தைகள் பொதுவாக மகிழ்ச்சியோடு காணப்படுவர்.

ஆதாரம்[தொகு]

[1]

  1. ஆசிரியர் அருமையும் மாணவர் மாண்பும்(கல்வி உளவியல்).பேராசிரியர் இரத்தின சபாபதி.பக்.170-173.வனிதா பதிப்பகம்,சென்னை-600017
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனநலம்&oldid=2722885" இருந்து மீள்விக்கப்பட்டது