மூளைத் திசு நலிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மூளைச் சிதைவு
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
ஐ.சி.டி.-9331.9

மூளைத் திசு நலிவு (Cerebral atrophy) மூளையை பாதிக்கக்கூடிய நோய்களில் உள்ள ஓர் பொதுவான குணமாகும். திசுக்களின் இழப்பே திசு நலிவு எனப்படுகிறது. இந்நோயில் மூளையிலுள்ள நரம்பணுக்களின் இழப்பும் அவற்றிற்கிடையேயான தொடர்புகளும் பாதிக்கப்படுகின்றன. இது முழுப்பகுதியையும் தாக்கி மூளையின் அளவு சுருங்கியிருக்கலாம்; அல்லது ஓர் குறிப்பிட்ட பகுதியை மட்டும் தாக்கி அப்பகுதி கட்டுப்படுத்தும் மூளையின் செயற்திறனை மட்டும் குறைக்கலாம். முன்மூளையின் இரு அரைக்கோளங்கும் பாதிப்படைந்தால் தன்னிச்சையான செயல்களை ஆற்றும் திறனும் தன்னுணர்வுள்ள எண்ணங்களும் குறைபடலாம்.

அறிகுறிகள்[தொகு]

மூளைத்திசு நலிவு நோய் ஏற்படுத்தும் தொடர்புடைய நோய்கள் முதுமை மறதி, வலிப்புத்தாக்கம் மற்றும் மொழியாற்றலைக் குறைக்கும் அபேசியா எனப்படும் பேச்சுக்குறை நோய்கள். முதுமை மறதியில் ஞாபக சக்தி குறைவதுடன், சமூக,பணியிட செயல்பாடுகளைக் குறைக்குமளவிலான அறிவுத்திறன் குன்றல் மிகுதியாகக் காணலாம். நினைவுகள்,ஒருமுகப்படுத்தல், நுண்கருத்து, கற்கும் திறன், காட்சி-இடைவெளி உணர்வுகள், திட்டமிடல்,ஒருங்கிணைத்தல் மற்றும் வரிசைப்படுத்துதல் போன்ற தலைமைப்பண்புகள் போன்றவையும் குறைபடலாம்.

வலிப்புத்தாக்கம் பல்வகைகளில் வெளிப்படுகின்றன;ஒருமுகமை இல்லாதிருத்தல், வினோதமான திரும்ப திரும்ப செய்யும் அசைவுகள், தன்னுணர்வில்லாதிருத்தல் மற்றும் தசை வலிப்புகள் இவற்றில் சில வெளிப்பாடுகளாகும்.

அபேசியா என்று மொழியை புரிந்து கொள்ளும் மற்றும் பேசக்கூடிய திறனை பாதிக்கின்ற நோய்கள் குறிப்பிடப்படுகின்றன. உள்வாங்கு அபேசியாவில் புரிதல் குறைபடுகிறது. வெளியீட்டு அபேசியாவின் குணங்களாக சொற்களின் வழமையில்லாத பயன்பாடு, பகுதியான சொற்றொடர்கள், இணைக்கப்படாத வரிகள், முடிக்காத வரிகள் என்பன அடங்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூளைத்_திசு_நலிவு&oldid=1359961" இருந்து மீள்விக்கப்பட்டது