தொழில்சார் சுகநலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தொழில்சார் சுகநலம் பணியிடத்தில் சுகநலம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான அம்சங்களுடன் தொழில் சார் ஆபத்துக்களைத் தடுப்பதற்கான முதன்மை முறைகள் பற்றியும் வலுவான கவனம் செலுத்துகிறது. தொழில் தளத்தில் இருக்கும் ஆபத்தினை உண்டுபண்ணும் காரணிகளால் ஏற்படும் புற்றுநோய்கள், விபத்துக்கள், என்பு சார் நோய்கள் மற்றும் சுவாச நோய்கள் தொடர்பான விடயங்களும் காது கேளாமை, இரத்த ஓட்ட நோய்கள், மன அழுத்தம் மற்றும் தொற்றுநோய்களும் தொழில்சார் சுகநலத்தின் பிரதான அம்சங்கள் ஆகும்.

வேலைவாய்ப்பு, வேலைத் தளச் சூழல், வேலை நேரம், சம்பளம், மகப்பேறு விடுப்பு பற்றிய பணியிட கொள்கைகள், சுகநலம் ஊக்குவிப்பு மற்றும் பாதுகாப்பு விதிகள் முதலியனவும் ’தொழில்சார் சுகநலம்’ என்னும் விடயத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொழில்சார்_சுகநலம்&oldid=1379843" இருந்து மீள்விக்கப்பட்டது