பொது உடல்நலவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொது நலம் அல்லது பொதுச் சுகாதாரம் (Public Health) என்பது ஒரு சமூகத்தின் நலத்தையும், அதை ஏற்படுத்தித் தரும் நல முறைமையையும் குறிக்கிறது. தொற்றுநோயை கட்டுப்படுத்தல், மருத்துவ சேவை, உணவு, நீர் தரக் கட்டுப்பாடு, சுற்றுச்சூழலைப் பேணல், அரசியல் பண்பாட்டு பொருளாதார நலத்தைப் பேணல் என பல பொது நலக் கூறுகள் ஒரு தனிநபரின் உடல் உள நலத்தைத் தீர்மானிக்கின்றன.


பொது நலத்தைப் பேண வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு அணுகுமுறைகளை கையாளுகின்றன. அவற்றின் தரமும் பெரிய வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. கனடா, சுவீடன் போன்ற நாடுகளில் அரசு பொது நலம் தொடர்பான முழுமையான பொறுப்பையும் செலவையும் ஏற்று நடைமுறைப்படுத்துகிறது. பிற பல மேற்கு நாடுகளிலும், சீனா, கியூபா ஆகிய நாடுகளிலும் பொது நலத்தைப் பேணுவதில் அரசு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியா, மற்றும் ஆப்பிரிக்கா நாடுகள் பலவற்றில் தனியாரே மருத்துவ சேவைகளைப் பெரிதும் வழங்குகின்றனர். இங்கே தனிப்பட்ட நபரின் பொருளாதார வலிமைக்கு ஏற்ப மருத்துவ சேவைகள் கிடைக்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொது_உடல்நலவியல்&oldid=3389756" இலிருந்து மீள்விக்கப்பட்டது