பாக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வெட்டுப் பாக்கு
பாக்கு மரத்தில் தொங்கும் பாக்குக் காய்
பாக்குக்காய்

பாக்கு எனபது பாக்கு மரத்திலிருந்து பெறப்படும் கொட்டையாகும். ஒருகாலத்தில் வெற்றிலை போடும் வழக்கம் நிறைய இருந்தது. விருந்துகளின்போது கட்டாயமாக வெற்றிலை பாக்கு உண்டு. அப்போது வெற்றிலை போட்டுக்கொள்வது ஒரு மரியாதை.

பண்பாட்டுப் பழக்கம்[தொகு]

திருமணத்துக்கு அழைக்கும்போதுகூட பணம் பாக்கு வைத்தே அழைப்பது வழக்கம். நல்லது கெட்டது எல்லாவற்றிலும் வெற்றிலை பாக்கு இருக்கும்.பல சம்பிரதாயங்களில் வெற்றிலை பாக்கு உண்டு.மங்கலகரமான எட்டுப் பொருள்களில் வெற்றிலையும் ஒன்று. இப்போதெல்லாம் வெற்றிலை போடும் வழக்கம் அருகிவிட்டது. சிலர் சிலவேளைகளில் பீடா போடுவார்கள். பீடாவைப் பற்றிய பழைய மடல் அகத்தியத்தில் உண்டு. வெற்றிலையை வெறும் வெற்றிலையாகப் போடுவதில்லை.பாக்கு, சுண்ணாம்புடன் சேர்த்துத்தான் போடவேண்டும். பாக்கைப் பழங்காலத்தில் அடைக்காய் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆங்கில மொழியில் பாக்கை Betel Nut, Areca Nut என்று சொல்கிறோம். அரெக்கா என்பது அடைக்காயின் மருவல். பெட்டல் என்பது வெற்றிலையின் மருவல். ஆக, இரண்டுமே தமிழ்ச்சொற்கள். கடாரத்தின் மிக முக்கிய ஏற்றுமதிப்பொருள்களில் பாக்கும் ஒன்று. இப்போதும்கூட ஆயிரக்கணக்கில் கடாரத்தில் பாக்கு மரங்களைக் காணலாம். பினாங்குத்தீவின் பெயரில் உள்ள பினாங் என்பது பாக்கைக் குறிக்கும் சொல்தான். அங்கு பாக்கு மரங்களும் அதிகம். பாக்கு ஏற்றுமதி மையமாகவும் இருந்தது.பினாங்கு மாநிலத்தின் சின்னமே பாக்கு மரம்தான்.

பாக்கு செய்யப்படும் முறை[தொகு]

பாக்கு மரங்களிலிருந்து முற்றிய பாக்கைப் பறித்து இறக்குவார்கள். அவற்றைப் பெரிய பெரிய தோம்புகளில் ஊறவைப்பார்கள். ஊறியபின்னர் இளநீரின் மட்டையை உரிப்பதுபோல பாக்கைச்சுற்றியிருக்கும் மட்டையை அகற்றுவார்கள். அதன்பின்னரே காயவைப்பது. இவ்வாறு காயவைக்கப்பட்டது கொட்டைப்பாக்கு. பாக்கை அவித்து, அதை ஆறவைத்து, அதை துண்டு துண்டாக வெட்டி, அதன்பின் காய வைப்பார்கள்.இதைக் 'களிப்பாக்கு' என்று குறிப்பிடுவார்கள். இது 'மொறுகுமொறுகு'வென்று இருக்கும். இதன் சுவையும்வித்தியாசமானதுதான்.

பாக்குவெட்டி[தொகு]

கொட்டைப் பாக்கை அப்படியே கடிப்பது என்பது பலருக்கு இயலாத காரியம். ஒருசிலரால் அவ்வாறு கடிக்கமுடியும். பற்களுக்கு இடையில் வைத்து 'நறுக்'கென்று கடித்துவிடுவார்கள்.'டக்'கென்று பாக்குப் பிளக்கும். நொடிப்பொழுதை ஒரு காலத்தில் 'பாக்குக் கடிக்கும் நேரம்' என்று குறிப்பிடும் சொல்வழக்கு ஒன்று இருந்தது.இவ்வளவு சிரமப்படவேண்டாம் என்று பலர் ஒரு கருவியை வைத்திருப்பார்கள். அதனைப் 'பாக்குவெட்டி' என்று அழைப்பார்கள். இரண்டு கைப்பிடிகள். இடுக்கி போல் இருக்கும். ஒரு பிடியில் பதமான கத்தி இருக்கும். பாக்கைவைத்து கைப்பிடிகளை இறுக்கினால் பாக்குப் பிளந்துவிடும். பாக்குகளை மெல்லிய இழைகளாகச் சீவிவைப்பதும் உண்டு.இதைச் சீவல் பாக்கு என்பார்கள். சீவலை நெய்யில் முந்திரிப்பருப்பு, பிஸ்தாப் பருப்பு, தேங்காய்ப்பூ, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றுடன் நெய்யில் வறுத்து வைப்பதும் உண்டு. சிறிய துணுக்குகளாகப் பாக்கைவெட்டி அந்தத் துணுக்குகளையும் பிஸ்தா, குங்குமப்பூ, ஏலக்காய், ஜாதிக்காய் போன்றவற்றைச் சேர்த்து நெய்யில் வறுத்துவைப்பதும் ஒருவகை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்கு&oldid=1834988" இருந்து மீள்விக்கப்பட்டது