லால்குடி ஜி. ஜே. ஆர். கிருஷ்ணன்
Appearance
இலால்குடி ஜி. ஜே. ஆர். கிருஷ்ணன் தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைக் கலைஞர் ஆவார். இவர் ஒரு வயலின் கலைஞர் மற்றும் பாடகர்.
பிறப்பும், இசைப் பயிற்சியும்
[தொகு]இவர், வயலின் மேதை இலால்குடி ஜெயராமனுக்கு மகனாக 1960 ஆம் ஆண்டில் பிறந்தார். இளம் வயதில் தனது தாத்தா வீ. ஆர். கோபால ஐயரிடமிருந்து கருநாடக இசை வயலின் பயின்றார். பின்னர் தனது தந்தை இலால்குடி ஜெயராமனிடம் கற்றுத் தேர்ந்தார்[1]. கிருஷ்ணனின் சகோதரியாகிய இலால்குடி விஜயலக்ஷ்மியும் ஒரு வயலின் கலைஞர் ஆவார்[2].
இசை வாழ்க்கை
[தொகு]ஒரு வயலின் கலைஞராக 1973 ஆம் ஆண்டு தனது இசைப் பயணத்தை தொடங்கினார். தனது சகோதரியுடன் இணைந்து வயலின் வாசித்து இசை நிகழ்ச்சிகள் நடத்துகிறார். கருநாடக இசைப் பாடகர்களுக்கு பக்க வாத்தியமாகவும் வயலின் வாசித்து வருகிறார்.
பெற்ற விருதுகள்
[தொகு]- சிறந்த வயலின் கலைஞர் விருது, 1986 ; வழங்கியது: மெட்ராஸ் மியூசிக் அகாடமி, சென்னை
- யுவ கலா பாரதி விருது, 1987 ; வழங்கியது: பாரத் கலாச்சார்
- சங்கீத சூடாமணி விருது, 1998 வழங்கியது: ஸ்ரீ கிருஷ்ண கான சபா, சென்னை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-05-27. பார்க்கப்பட்ட நாள் 2014-08-06.
- ↑ http://www.saigan.com/heritage/music/garlndk2.htm