நாட்டுப்புற நடனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இங்கிலாந்து நாட்டின் வேல்சு தேவாலய மைதானத்தில் மோரிசு நடனம்

நாட்டுப்புற நடனம் அல்லது கிராமிய நடனம் (folk dance) என்பது குறிப்பிட்ட நாடு அல்லது பகுதி வாழ் மக்களின் வாழ்க்கை முறையை ஆடல் அல்லது அங்க அசைவுகள் மூலமாக பிரதிபலிக்கும் ஒரு வகைக் கலையாகும்.நாட்டுப்புற இசைக்கும் நாட்டுப்புற நடனத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை பண்டைய இலக்கியங்களில் அறியலாம். தொடக்க காலத்தில் தொழில் முறையான ஆட்டக்காரர்கள் என்று எவருமிலர். அனைத்து நடனங்களும் "சமூக நடனம்" என்ற நிலையில் இருந்ததாகக் கருதப்படுகிறது.[1]. அனைத்து இனஞ்சார்ந்த நடனங்களும் நாட்டுப்புறக் கலைகளாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. உதாரணமாக சடங்கு அல்லது மத வழிபாடுகளில் ஆடப்படும் சடங்கு சார்ந்த அல்லது சமயத்தை அல்லது மதத்தை அடிப்படையாகக் கொண்ட நடனங்கள் நாட்டுப்புற நடன வகையில் வராது. சடங்கு மற்றும் சம்பிரதாய நடனங்கள் அவற்றின் நோக்கத்தைக் கருதி சமய நடனங்கள் என்றழைக்கப்படுகின்றன. நடனத்தின் கலாச்சார தொடர்பை வலியுறுத்த "இனம்" மற்றும் "பாரம்பரியம்" என்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பின்னணி[தொகு]

நாட்டுப்புற நடனங்கள் பின்வரும் பண்புகளில் சில அல்லது அனைத்து பகிர்ந்துகொள்ளப்படுகின்றன..

  • வழக்கமாக நாட்டுப்புற நடனக் கூட்டங்கள் அல்லது சமூக நிகழ்வுகளில் சிறிதளவு அல்லது தொழில்முறை பயிற்சி இல்லாத மக்களால் பாரம்பரிய இசைக்கு ஏற்றவாறு இவை நடத்தப்படுகின்றன.
  • பொதுவாக பொது ஆற்றுகை அல்லது மேடை நடனங்களுக்காக வடிவமைக்கப்படாத நடனங்கள், பின்னர் அவை ஒழுங்கமைக்கப்பட்டு, மேடை நிகழ்ச்சிகளுக்காக ஒருங்கமைக்கப்படலாம்.
  • புதுப்பிப்புக்கு மாறாக பல்வேறு சர்வதேசக் கலாச்சாரங்களிலிருந்து வரும் மரபு வழி பாரம்பரியங்கள் நாட்டுப்புற நடனத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது
  • மற்றவர்கள் கவனிப்பதன் மூலமாகவோ அல்லது மற்றவர்களிடமிருந்து உதவி பெறுவதன் மூலமாகவோ புதிய நடனக் கலைஞர்கள் இந்நடனங்களின் நுணுக்கங்களைத் தெரிந்துகொள்கின்றனர்.

தமிழர்களின் நாட்டுப்புற நடனங்கள்[தொகு]

தமிழ்ப் பெண்களின் கரகாட்டம்
கரகாட்டத்தில் பயன்படுத்தப்படும் கரகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாட்டுப்புற_நடனம்&oldid=2849954" இருந்து மீள்விக்கப்பட்டது