மூதாதை
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மூதாதை (ancestor) பெற்றோரையும் தொடர்ச்சியாக அவர்களது பெற்றோரையும் (பாட்டன்,பாட்டி,முப்பாட்டன்,முப்பாட்டி....) குறிக்கும் சொல்லாகும். ஒருவர் மற்றவரின் மூதாதையாக இருந்தாலோ அல்லது இருவரின் மூதாதைகளும் பொதுவானவராக இருந்தாலோ ,அந்த இரு நபர்களிடையே மரபுத் தொடர்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. படிவளர்ச்சிக் கொள்கையின்படி, ஒரே படி வளர்ச்சி மூதாதையரைக் கொண்ட இனங்கள் பொது மூலத்திலிருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது. ஆனால் கிடக்கை மரபணு பரிமாற்றம் நிகழும் சில நுண்ணுயிர்களுக்கும் பிற உயிரிகளுக்கும் இது பொருந்தாது.
சில பண்பாடுகளில் வாழும் மற்றும் மறைந்த மூதாதையரை வணங்குவது முறையாகும். திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு முன்னர் மறைந்த மூதாதையரின் ஆசிகளை வேண்டி வழிபாடு நடத்துவதும் உண்டு.