தத்தெடுத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தத்தெடுத்தல் என்பது எமக்கு இரத்த உறவு இல்லாத ஒருவருக்கு பெற்றோராக(வளர்ப்புத் தந்தை அல்லது தாய்) செயற்படல் ஆகும். இவ்வாறு செய்வதால், அன்று முதல் தத்தெடுக்கும் குழந்தைக்கு முழு பொறுப்பாளி ஆவதுடன், அப்பிள்ளையின் உண்மையான பெற்றோருக்கு அப்பிள்ளை மேலிருக்கும் உரிமையும் இல்லாமல் செய்யப்படுகிறது. தத்தெடுத்தல் சட்டம் மூலம் செய்யப்படுவதே, பிற்காலத்தில் உரிமையை தக்கவைத்துக்கொள்ளவும், வேறு சிக்கல்களிலிருந்து விடுபடவும் வழியாகும்.

பொதுவாக, குழந்தைப் பேறு இல்லாதவர்களே பிள்ளைகளை தத்தெடுக்கும் வழக்கம் உண்டு. சில வேளைகளில், உடன்பிறந்தோர் பிள்ளைகளை தத்தெடுக்கும் வழமையும் உண்டு. ஆயினும், சில பணம்படைத்தோர் வசதியற்றோரை தத்தெடுக்கும் வழக்கம் உண்டு. சில இடங்களில், ஒரு ஊரை தத்தெடுத்தல், பாடசாலையை தத்தெடுத்தல் என்பனவும் உலக வழக்கில் உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தத்தெடுத்தல்&oldid=1461553" இருந்து மீள்விக்கப்பட்டது