கல்குதிரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கல்குதிரை ஒரு தமிழ் இலக்கியச் சிற்றிதழ். 1990 ஆம் ஆண்டு முதல் வெளிவருகின்றது. இதன் ஆசிரியர் கோணங்கி.

கல்குதிரை பருவ இதழாகும். பனிக்காலம், இளவேனிற்காலம், முதுவேனிற்காலம் என பருவங்களுக்கு ஒரு முறை கல்குதிரை இதழ்கள் வெளியாகின்றன. ஜூன் 2015 வரை மொத்தம் 25 கல்குதிரை இதழ்கள் வெளிவந்துள்ளன. சமகால தமிழ் இலக்கியப் படைப்புகளுடன், பிறமொழி இலக்கியப் படைப்புகளின் மொழிபெயர்ப்புகளும் கல்குதிரையில் இடம்பெறுகின்றன. பியோதர் தஸ்தயெவ்ஸ்கி, கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் போன்ற எழுத்தாளர்களைக் கருப்பொருட்களாகக் கொண்டு கல்குதிரை சிறப்பிதழ்கள் வெளியாகியுள்ளன.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்குதிரை&oldid=1884003" இருந்து மீள்விக்கப்பட்டது