மான்செஸ்டர் பல்கலைக்கழகம்
குறிக்கோளுரை | இலத்தீன்: Cognitio, sapientia, humanitas | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | "அறிவு, மதிநுட்பம், மனிதாபிமானம்" | |||||||||||||||||||
உருவாக்கம் | 2004, (மான்செஸ்டர், விக்டோரியா பல்கலைக்கழகம் (தோற்றம் 1851), மான்செஸ்டர் அறிவியல், தொழில்நுட்பக் கல்லூரி (தோற்றம் 1824) ஆகியன இணைப்பு) | |||||||||||||||||||
நிதிக் கொடை | £138மி (2008)[1] | |||||||||||||||||||
நிருவாகப் பணியாளர் | 10,407 | |||||||||||||||||||
மாணவர்கள் | 39,165[2] | |||||||||||||||||||
பட்ட மாணவர்கள் | 27,310[2] | |||||||||||||||||||
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 11,850[2] | |||||||||||||||||||
அமைவிடம் | , | |||||||||||||||||||
வளாகம் | நகர மற்றும் புறநகர் | |||||||||||||||||||
நிறங்கள் | Blue, Gold, Purple | |||||||||||||||||||
இணையதளம் | manchester.ac.uk |
மான்செஸ்டர் பல்கலைக்கழகம் (The University of Manchester) இங்கிலாந்தின் மான்செஸ்டர் மாநகரத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழகம் 2004 ஆம் ஆண்சு அக்டோபர் 1 ஆம் நாள் மான்செஸ்டர் நகரில் இருந்த இரண்டு பல்கலைக்கழகங்களை இணைத்து தோற்றுவிக்கப்பட்டது. அவை மான்செஸ்டர் விக்டோரியா பல்கலைக்கழகம் (தோற்றம் 1851), மான்செஸ்டர் அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரி (தோற்றம் 1824) என்பனவாகும். இப்பல்கலைக்கழகத்திலும் அதன் முன்னைய இணைப்புப் பல்கலைக்கழகத்தும் மொத்தம் 23 நோபல் விருதாளர்கள் மாணவர்களாகவும், ஆசிரியர்களாகவும் இருந்திருக்கிறார்கள். ஐக்கிய இராச்சியத்தில் ஒக்ஸ்போர்ட், மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களுக்கு அடுத்தபடியாக மிக அதிகமான நோபல் பரிசாளர்களை உருவாக்கியது மான்செஸ்டர் பகலைக்கழகம்.
2007/08 காலப்பகுதியில் இப்பல்கலைக்கழகத்தில் 40,000 மாணவர்கள் கிட்டத்தட்ட 500 பாடத்திட்டங்களில் கல்வி பயின்றனர். 10,000 இற்கும் அதிகமான ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். ஆசிரிய-மாணவர் விகிதாசாரத்தின் படி, இது ஐக்கிய இராச்சியத்திலேயே மிகப்பெரும் தனிப்பட்ட பல்கலைக்கழகமாகத் திகழ்கிறது[3]. ஏனைய பல்கலைக்கழகங்களிலும் பார்க்க அதிக எண்ணிக்கையான மாணவர்கள் இங்கு கல்வி பயில விண்ணப்பிக்கிறார்கள். ஆண்டு தோறும் 60,000 இற்கும் அதிகமானோர் பட்டப்படிப்புக்காக மட்டும் விண்ணப்பிக்கிறார்கள். 2007 ஆம் ஆண்டில் இதன் நிகர வருமானம் £637 மில்லியன்.[4].
சில நோபல் பரிசாளர்கள்
[தொகு]- வேதியியல்
- ஏர்னெஸ்ட் ரதர்போர்ட் (1908)
- ஆர்தர் ஹார்டன் (1929)
- வால்ட்டர் ஹவேர்த் (1937)
- ராபர்ட் ராப்ன்சன் (1947)
- அலெக்சாண்டர் டொட் (1957)
- மெல்வின் கால்வின் (1961)
- ஜோன் சார்ல்ஸ் பொலானி (1986)
- மைக்கேல் ஸ்மித் (1993)
- இயற்பியல்
- ஜே. ஜே. தாம்சன் (1906)
- வில்லியம் லாஅரன்ஸ் பிராக் (1915)
- நீல்ஸ் போர் (1922)
- சார்ல்ஸ் வில்சன் (1927)
- ஜேம்ஸ் சாட்விக் (1935)
- ஜார்ஜ் டி ஹெவசி (1943)
- பாட்ரிக் பிளாக்கெட் (1948)
- ஜான் கொக்ரொஃப்ட் (1951)
- ஹான்ஸ் பெத் (1967)
- நெவில் மொட் (1977)
- மருத்துவம்
- ஆர்ச்சிபால்ட் விவியன் ஹில் (1922)
- ஜான் சல்ஸ்டன் (2002)
- பொருளியல்
- ஜான் ஹிக்ஸ் (1974)
- ஆர்தர் லூயிஸ் (1979)
- ஜோசப் ஸ்டீக்லிட்ஸ், (2001)
குறிப்புகள்
[தொகு]- ↑ The University of Manchester, Financial statements for the year ended 31 July 2008, p18. [1]
- ↑ 2.0 2.1 2.2 Table 0a - All students by institution, mode of study, level of study, gender and domicile 2006/07
- ↑ http://news.bbc.co.uk/1/hi/england/manchester/3706094.stm Largest single site university BBC.
- ↑ "Finances" (PDF). The University of Manchester. பார்க்கப்பட்ட நாள் 2008-01-24.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Official page of the University of Manchester".