அணுக்கரு உலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அணு உலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுவிட்சர்லாந்தில் "குரோக்கஸ்" என்ற சிறு அணுக்கரு உலை

அணுக்கரு உலை (Nuclear reactor) என்பது முழுமையான கட்டுப்பாட்டோடு அணுக்கரு தொடர்வினை நிகழும் ஒரு அமைப்பாகும். இதற்கு எதிர்மாறாக அணுகுண்டு ஒன்றில் கட்டுப்பாடற்ற முறையில் மிகக்குறைந்த நேரத்தில் தொடர்வினை ஏற்படுத்தப்படுவதால் வெடிப்பு ஏற்படுகிறது.

அணுக்கரு உலைகள் மின்னாற்றலை உருவாக்க முக்கியமாகப் பயன்படுத்தப்படுகின்றன. அணுக்கரு உலையில் இருந்து வெளியேறும் ஆற்றல் வெப்ப வடிவில் வெளிவருகின்றது. இது பின்னர் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது. அணுக்கரு உலையில் வெளிவரும் வெப்ப ஆற்றல் கப்பல்களிலும் நீராவிச்சுழலிகளை இயக்கவும் பயன்படுகிறது.

முதலாவது அணுக்கரு உலை ஐக்கிய அமெரிக்காவின் சிக்காகோ பல்கலைக்கழகத்தின் உலோகவியல் ஆய்வகத்தில் CP1 என்ற சிக்காகோ பைல்-1 (Chicago Pile-1) என்ற பெயரில் 1942 இல் என்ரிக்கோ பெர்மியின் தலைமையில் உருவாக்கப்பட்டது.

உலகம் முழுவதிலும் வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு அமைப்புகளில் அணுக்கரு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை பொதுவான பொதுப்பண்புகளைக் கொண்டுள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அணுக்கரு_உலை&oldid=1350466" இருந்து மீள்விக்கப்பட்டது