உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு பேச்சு:தனிம வரிசை அட்டவணை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


கருத்தும் திருத்தங்களும்[தொகு]

  • இது நல்லதோர் தனிம வரிசை அட்டவணை. பாராட்டுகள்! முன்னர், ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்கு முன்பு 2004 இல் மயூரநாதன் உருவாக்கிய தனிம அட்டவனையைப் போன்றதே இதுவும் எனினும், இன்னும் சற்று எடுப்பாக உள்ளது.
  • உள்ளிணைப்புகளில் சில திருத்தங்கள் செய்துள்ளேன். ஏற்கனவே உள்ள கட்டுரைகளின் பெயர்களை இணைப்பாக இட்டிருக்கின்றேன். வேறு பல பெயர்களுக்கும் வழிமாற்றுகள் வேண்டியவாறு அமைத்துக்கொள்ளலாம். இன்னும் கட்டுரைகள் ஏதும் எழுதப்படாத தனிமங்களின் பெயர்கள் சிலவற்றையும் மாற்றியுள்ளேன். எ.கா. இரதர்ஃபோர்டியம் (Rf), பிரான்சீயம் (Fr).
  • சில குழுக்களின் பெயர்களையும் இரண்டு விதமாகவும் குறித்துள்ளேன். உப்பீனிகள் என்பதோடு ஆலசன் என்பதும் பிறைக்குறிகளுக்குள் தரலாம் என்பது என் கருத்து.

--செல்வா 16:13, 15 பெப்ரவரி 2012 (UTC)