இட்டெர்பியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
70 தூலியம்இட்டெர்பியம்லூட்டேட்டியம்
-

Yb

No
Yb-TableImage.png
பொது
பெயர், குறி எழுத்து,
தனிம எண்
இட்டெர்பியம், Yb, 70
வேதியியல்
பொருள் வரிசை
லாந்த்தனைடுகள்
நெடுங்குழு, கிடை வரிசை,
வலயம்
இல்லை, 6, f
தோற்றம் வெள்ளிபோல் வெண்மை
Yb,70.jpg
அணு நிறை
(அணுத்திணிவு)
173.04(3) g/mol
எதிர்மின்னி
அமைப்பு
[Xe] 4f14 6s2
சுற்றுப்
பாதையிலுள்ள
எதிர்மின்னிகள்
(எலக்ட்ரான்கள்)
2, 8, 18, 32, 8, 2
இயல்பியல் பண்புகள்
இயல் நிலை திண்மம்
அடர்த்தி
(அறை வெ.நி அருகில்)
6.90 கி/செ.மி³
உருகுநிலையில்
நீர்மத்தின் அடர்த்தி
6.21 g/cm³
உருகு
வெப்பநிலை
1097 K
(824 °C, 1515 °F)
கொதி நிலை 1469 K
(1196 °C, 2185 °F)
நிலை மாறும்
மறை வெப்பம்
7.66 கி.ஜூ/மோல்
(kJ/mol)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
159 கி.ஜூ/மோல் kJ/mol
வெப்பக்
கொண்மை
(25 °C)
26.74 ஜூ/(மோல்·K)
J/(mol·K)
ஆவி அழுத்தம்
அழுத் / Pa 1 10 100 1 k 10 k 100 k
வெப். நி / K 736 813 910 1047 (1266) (1465)
அணுப் பண்புகள்
படிக அமைப்பு cubic face centered
ஆக்சைடு
நிலைகள்
2,3
(கார ஆக்சைடு)
எதிர்மின்னியீர்ப்பு ? 1.1 (பௌலிங் அளவீடு)
மின்மமாக்கும்
ஆற்றல்
1st: 603.4 kJ/(mol
2nd: 1174.8 kJ/mol
3rd: 2417 kJ/mol
அணு ஆரம் 175 பிமீ
அணுவின்
ஆரம் (கணித்)
222 pm
வேறு பல பண்புகள்
காந்த வகை no data
மின்தடைமை (அறை.வெநி.) (β, பல்படிகம்)
0.250 µΩ·m
வெப்பக்
கடத்துமை
(300 K) 38.5
வாட்/(மீ·கெ) W/(m·K)
வெப்ப நீட்சிமை (அறை.வெநி) (β, பல்படிகம்)
26.3 மைக்ரோ மீ/(மீ·K)
µm/(m·K)
ஒலியின் விரைவு
(மெல்லிய கம்பி வடிவில்)
(20 °C) 1590 மீ/நொடி
யங்கின் மட்டு (β form) 23.9 GPa
Shear modulus (β form) 9.9 GPa
அமுங்குமை (β form) 30.5 GPa
பாய்சான் விகிதம் (β form) 0.207
விக்கர் உறுதிஎண்
Vickers hardness
206 MPa (மெகாபாஸ்)
பிரிநெல் உறுதிஎண்
Brinell hardness]]
343 MPa (மெகாபாஸ்)
CAS பதிவெண் 7440-64-4
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள்
தனிக்கட்டுரை: இட்டெர்பியம் ஓரிடத்தான்கள்
ஓரி இ.கி.வ அரை
வாழ்வு
சி.மு சி.ஆ
(MeV)
சி.வி
166Yb syn 56.7 h ε 0.304 166Tm
168Yb 0.13% Yb ஆனது 98 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
169Yb syn 32.026 d ε 0.909 169Tm
170Yb 3.04% Yb ஆனது 100 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
171Yb 14.28% Yb ஆனது 101 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
172Yb 21.83% Yb ஆனது 102 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
173Yb 16.13% Yb ஆனது 103 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
174Yb 31.83% Yb ஆனது 104 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
175Yb செயற்கை 4.185 d β- 0.470 175Lu
176Yb 12.76% Yb ஆனது 106 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
177Yb syn 1.911 h β- 1.399 177Lu
மேற்கோள்கள்

இட்டெர்பியம் (Ytterbium, /|ɪˈtɝbiəm/) , Yb என்னும் குறியீடு கொண்ட வேதியியல் தனிமம். இதன் அணுவெண் 70, இதன் அணுக்கருவில் 103 நொதுமிகள் (நியூட்ரான்கள்) உள்ளன. இது லாந்த்தனைடுகள் வரிசையைச் சேர்ந்த வெள்ளி போல் வெண்மையான, கடினமற்ற (மெதுமையான), அரிய கனிமங்கள் குழுவில் உள்ள ஒரு தனிமம். பொதுவாக கடொலினைட்டு (gadolinite), மோனாசைட்டு (monazite), செனொட்டைம் (xenotime) ஆகிய கனிமங்களில் காணப்படும் ஒரு பொருள். இட்டெர்பியம், சிலவிடங்களில் இயிற்றியம் என்னும் தனிமத்தோடும் தொடர்பு படுத்தி எண்ணப்படுகின்றது. எஃகு செய்வதில் இது சேர்க்கப்படுகின்றது. இயற்கையில் கிடைக்கும் இட்டெர்பியம், ஏழு நிலைபெற்ற ஓரிடத்தான்களுடன் கலந்தே கிடைக்கின்றது. இட்டெர்பியந்169 என்னும் ஓரிடத்தான் செயற்கையாகச் செய்யப்பட்டு காமாக்கதிர்கள் வெளிவிடும் (உமிழும்) கருவிகளில் பயன்படுத்தப் படுகின்றது.

பண்புகள்[தொகு]

இட்டெர்பியம், மெதுமையான, வளையக்கூடிய, தட்டிகொட்டி உருப்படுத்தக்கூடிய, வெள்ளி போல் பளபளப்பான, வெண்மை நிறம் கொண்ட தனிமம். கனிமக் காடிகளால் (mineral acids), எளிதாக தாக்க்கப்பட்டு கரையக் கூடியது. நீரில் மெள்ள இயைபு கொள்ளும் தன்மையும், காற்றில் ஆக்சைடாகும் பண்பும் கொண்டது. இட்டெர்பியம் மூன்று மாற்றுருக்கள் (allotropes) கொண்டது. அவை முதல் (ஆல்ஃவா), இரண்டாவது (பீட்டா), மூன்றாவது (காமா) வடிவம் என்று அழைக்கப்படுகின்றன. நிலை மாறும் வெப்பநிலைகள் −13 °C and 795 °C. இரண்டாவது(பீட்டா) வடிவம் அறை வெப்பநிலையில் உள்ளது, அது முக-நடு படிக நிலையில் உள்ளது, ஆனால் அதிக வெப்ப்நிலையில் உருப்பெற்றிருக்கும் மூன்றாவது (காமா) வடிவம் உடல்நடு படிக அமைப்பு கொண்டது. பொதுவாக இரண்டாம் (பீட்டா) வடிவம் மாழை-போன்ற மின்கடத்துமை கொண்டது, ஆனால் உயர் அழுத்த நிலையில் (16,000 மடங்கு வளிமண்டல அழுத்தத்தில் (1.6 கிகாபாஸ்கல்)) குறைக்கடத்திப் பண்பு கொண்டுள்ளது. 39,000 வளிமண்டல அழுத்தத்தில் (3.9 GPa), அதன் தடைமை 10 மடங்காக உயர்கின்றது, ஆனால் 40,000 மடங்கு வளிமண்டல (4 GPa) அழுத்தத்தில் மின் தடைமை திடீர் என்று குறைந்து அறை வெப்பநிலையில் உள்ள தடைமையைப்போல் 10% ஆக மாறுகின்றது. . லாந்த்தனைடுகளில் ஒன்றாகிய இட்டெர்பியம் இரு இணைதிறன் கொண்ட (ஈரியைனியத் தன்மை கொண்ட, divalent) ஒரு தனிமம். ஈரிணை திறன் கொள்ளத்தக்க சமாரியம், யூரோப்பியம் போன்ற லாந்த்தனைடுகளைப் போலவே, இட்டெர்பியமும் சோடிய கலவையைப் (sodium amalgam) பயன்படுத்தி பாத்ரசத்துடன் கலக்கச் செய்து எளிதாக பிரிக்கலாம். ஆனால் இந்த ஈரிணைதிறன் (divalency, ஈரியைனியம்) தன்மை 20 ஆம் நூற்றாண்டில்தான் கண்டறியப்பட்டது. இட்டெர்பியம்-3 (Ytterbium(III)) மின்மவணு( ion) அகசிவப்புக் கதிர்களை பற்றுகின்றது ஆனால் கட்புலன் ஒளியைப் பற்றுவதில்லை. ஆகவே இட்டெர்பியா பார்ப்பதற்கு வெண்மையாக இருக்கின்றன; இட்டெர்பிய உப்புகள் நிறமற்றவையாக உள்ளன.

வரலாறு[தொகு]

இட்டெர்பியத்தை சுவிசு நாட்டு வேதியையலாளர் இழ்சான் சார்லசு காலிசார்டு டி மாரின்யாக் (Jean Charles Galissard de Marignac) (1817 –1894) என்பவர் 1878 இல் கண்டுபிடித்தார். மாரின்யாக் எர்பியா என்னும் கனிமத்தில் ஒரு புதுப் பொருளைக் கண்டுபிடித்தார். அதனைத் தன் சுவீடிசிய நாட்டில் உள்ள இட்டெர்பி (Ytterby) என்னும் ஊரின் பெயரை ஒட்டி இட்டெர்பியா எனப் பெயரிட்டார். அந்த இட்டெர்பியா என்பது இட்டெர்பியம் என்னும் புதுத் தனிமத்தில் இருந்து உருவான ஒரு வேதியியல் கனிமம் என்று கருதினார்.

கார்ல் வான் வெல்சுபாக் என்பவர் ஏறத்தாழ அதே நேரத்தில் இட்டெர்பியாவில் இருந்து பிரித்தெடுத்தார். ஆனால இதனை அவர் ஆல்டெபரேனியம் (aldebaranium) என்றும் காசியோப்பயம் (cassiopeium) என்றும் குறிப்பிட்டார்.

இட்டெர்பியத்தின் வேதியியல், இயற்பியல் பண்புகள் 1953 வரை துல்லியமாய் அறியப்படாமல் இருந்தன. அதன் பின் தான் தூய்மையான இட்டெர்பியத்தை மின்மப் பரிமாற்ற முறையில் (ion-exchange) பெற்றனர். 1953 முதல் 1998 வரை இட்டெர்பியத்தின் விலை சீராக ஒரு கிலோவுக்கு அமெரிக்க டாலர் 1000 என்பதாக இருந்தது.[1]

அடிக்குறிப்புகளும் பேற்கோள்களும்[தொகு]

  1. James B. Hedrick. "Rare-Earth Metals". USGS. http://minerals.usgs.gov/minerals/pubs/commodity/rare_earths/740798.pdf. பார்த்த நாள்: 2009-06-06. 

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்டெர்பியம்&oldid=2083079" இருந்து மீள்விக்கப்பட்டது