ஒலியின் விரைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஒலியின் விரைவு ஈரப்பதம் இல்லாத காற்றில் 20 °C (68 °F) வெப்பநிலையில், கடல் மட்டத்தில், செக்கனுக்கு 343 மீட்டர்கள்[1] (1,125 அடி/செக்). இது மணிக்கு 1,234 கிலோமீட்டர் (767 மைல்/மணி), அல்லது ஏறத்தாழ 3 செக்கன்களுக்கு ஒரு கிலோமீட்டர் அல்லது 5 செக்கன்களுக்கு ஒரு மைல் ஆகும். ஒலி காற்றை விட நீரிலும் திண்மங்களிலும் விரைவாகச் செல்லும் தன்மையுடையது.[2] அது எளிதாக விரிந்து சுருங்கக்கூடிய ஊடகங்களில் அதிர்வலைகளை ஒரு அணுக்கூறிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றி அவ்வூடகத்தில் செல்கிறது. இந்த வேகம் குறைந்த வெப்பநிலைகளில் குறைந்தும் வெப்பம் கூடுதலாக இணையாக கூடவும் செய்கிறது.

ஒலியின் விரைவினை இவ்வாறு கணக்கிடலாம்:

இங்கு:

  • என்பது வெப்ப ஏற்பு எண்களின் விகிதம் (காற்றில் 1.4)
  • R என்பது மாறிலி (காற்றில் )
  • T வெப்பநிலை (கெல்வின்களில்)

காற்றில் ஒலியின் விரைவு மாக் 1 என்றும் குறிப்பிடப்படுகிறது.

குறிப்புகள்[தொகு]

  1. Calculation of the Speed of Sound in Air and the effective Temperature (ஆங்கிலத்தில்)
  2. What is Sound? - Definition and Factors Affecting the Speed of Sound 2014 யூன் 24 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலியின்_விரைவு&oldid=2225226" இருந்து மீள்விக்கப்பட்டது