இட்டெர்பியம்(III) சல்பைடு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
இட்டெர்பியம் சல்பைடு, ஈரெட்டெர்பியம் முச்சல்பைடு, இட்டெர்பியம் செசுக்கியூசல்பைடு
| |
இனங்காட்டிகள் | |
12039-20-2 | |
ChemSpider | 145470 |
EC number | 234-888-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 166022 |
| |
பண்புகள் | |
S3Yb2 | |
வாய்ப்பாட்டு எடை | 442.29 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள் நிறப் படிகங்கள் |
அடர்த்தி | 6.02 கி/செ.மீ3 |
கரையாது | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | rhombic |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இட்டெர்பியம்(III) சல்பைடு (Ytterbium(III) sulfide) Yb2S3 என்ற என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இட்டெர்பியமும் கந்தகமும் சேர்ந்து இந்த இருமச்சேர்மம் உருவாகிறது.[1]
தயாரிப்பு
[தொகு]மந்த வாயுச் சூழலில் தூயநிலை இட்டெர்பியமும் கந்தகமும் 450 முதல் 800 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரிவதால் இட்டெர்பியம்(III) சல்பைடு உருவாகிறது
- 2Yb + 3S → Yb2S3
ஐதரசன் சல்பைடு வாயுவை சூடான இட்டெர்பியம்(III) ஆக்சைடு மீது செலுத்தி வினைபுரியச் செய்தாலும் இட்டெர்பியம்(III) சல்பைடு கிடைக்கிறது.
- Yb2O3 + 3H2S → Yb2S3 + 3H2O
இயற்பியல் பண்புகள்
[தொகு]சாய்சதுரச் சமச்சீரில் a = 0.678 நானோமீட்டர், b = 0.995 நானோமீட்டர், c = 0.361 நானோமீட்டர் என்ற செல் அளவுருக்களுடன் மஞ்சள் நிறத்தில் இட்டெர்பியம்(III) சல்பைடு படிகமாகிறது.[2]
பயன்கள்
[தொகு]இட்டெர்பியம்(III) சல்பைடு மட்பாண்டங்கள் உற்பத்தியிலும் ஒரு வினையூக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "YTTERBIUM SULFIDE (YB2S3) POWDER". albmaterials.com. பார்க்கப்பட்ட நாள் 4 April 2023.
- ↑ El Fadli, Z.; Lemoine, P.; Guittard, M.; Tomas, A. (19 August 2010). "ChemInform Abstract: Structure of the Ytterbium Sulfide Yb2S3." (in en). ChemInform 25 (23): no–no. doi:10.1002/chin.199423005. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/chin.199423005. பார்த்த நாள்: 4 April 2023.
- ↑ "Ytterbium Sulfide Powder Yb2S3, CAS No 12039-20-2" (in ஆங்கிலம்). CG MATERIAL. பார்க்கப்பட்ட நாள் 4 April 2023.