இட்டெர்பியம்(III) ஆக்சைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
இட்டெர்பியம்(III)ஆக்சைடு. | |
| வேறு பெயர்கள்
இட்டெர்பியா இருயிட்டர்பியம் மூவாக்சைடு trioxide இட்டெர்பியம் ஒன்ரறையாக்சைடு | |
| இனங்காட்டிகள் | |
| 1314-37-0 | |
| பண்புகள் | |
| Yb2O3 | |
| வாய்ப்பாட்டு எடை | 394.08 g/mol |
| தோற்றம் | வெண்மை நிற திண்மம். |
| அடர்த்தி | 9.17 g/cm3, திடப்பொருள். |
| உருகுநிலை | 2,355 °C (4,271 °F; 2,628 K) |
| கொதிநிலை | 4,070 °C (7,360 °F; 4,340 K) |
| கரையாது | |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | கனசதுரம் |
| ஒருங்கிணைவு வடிவியல் |
எண்முகம் |
| தீங்குகள் | |
| தீப்பற்றும் வெப்பநிலை | சுடர் விட்டு புகையாது. |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் | இட்டெர்பியம்(III) சல்பைடு, இட்டெர்பியம்(III) குளோரைடு |
| ஏனைய நேர் மின்அயனிகள் | தூலியம்(III)ஆக்சைடு இலித்துவேத்தியம்(III) ஆக்சைடு |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
இட்டெர்பியம்(III) ஆக்சைடு (Ytterbium(III) oxide) என்பது Yb2O3. என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மமாகும். பொதுவாகக் காணப்படும் இட்டெர்பியத்தின் சேர்மங்களில் இதுவும் ஒன்றாகும். இட்டெர்பியம் மூவாக்சைடு, அருமண் சி-வகை உலோக ஆக்சிசன் கூட்டு அமைப்பைக் கொண்டு அமைந்துள்ளது. இவ்வமைப்பு நான்கில் ஒரு பங்கு எதிர்மின் அயனிகள் நீக்கப்பட்ட புளோரைடின் அமைப்பை ஒத்திருக்கிறது. இதனால், இட்டெர்பியம் அணுக்கள் இரண்டு வெவ்வேறான ஆறு ஆயவமைப்புச் (எண்முக மூலக்கூறு அல்லாதது) சூழல்களைக் கொண்டுள்ளன.[1]
பயன்கள்
[தொகு]- கண்ணாடிகள் மற்றும் பளபளப்பான மிளிரிகளுக்கு நிறமூட்டியாகப் பயன்படுகிறது.
- சீரொளிகளில் உள்ள கார்னெட் படிகங்களில் பகுதிப் பொருளாக உள்ளது.
- ஒளியிழைகளில் பயனாகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Wells A.F. (1984) Structural Inorganic Chemistry 5th edition Oxford Science Publications பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-855370-6