சீரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
58 இலந்தனம்சீரியம்பிரசியொடைமியம்
-

Ce

Th
Ce-TableImage.png
பொது
பெயர், குறி எழுத்து,
தனிம எண்
சீரியம், Ce, 58
வேதியியல்
பொருள் வரிசை
லாந்த்தனைடுகள்
நெடுங்குழு, கிடை வரிசை,
வலயம்
இல்லை, 6, f
தோற்றம் வெள்ளிபோன்ற வெண்மை
Ce,58.jpg
அணு நிறை
(அணுத்திணிவு)
140.116(1) g/mol
எதிர்மின்னி
அமைப்பு
[Xe] 4f1 5d1 6s2
சுற்றுப்
பாதையிலுள்ள
எதிர்மின்னிகள்
(எலக்ட்ரான்கள்)
2, 8, 18, 19, 9, 2
இயல்பியல் பண்புகள்
இயல் நிலை திண்மம்
அடர்த்தி
(அறை வெ.நி அருகில்)
6.770 கி/செ.மி³
உருகுநிலையில்
நீர்மத்தின் அடர்த்தி
6.55 g/cm³
உருகு
வெப்பநிலை
1068 K
(795 °C, 1463 °F)
கொதி நிலை 3716 K
(3443 °C, 6229 °F)
நிலை மாறும்
மறை வெப்பம்
5.46 கி.ஜூ/மோல்
(kJ/mol)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
398 கி.ஜூ/மோல் kJ/mol
வெப்பக்
கொண்மை
(25 °C)
26.94 ஜூ/(மோல்·K)
J/(mol·K)
ஆவி அழுத்தம்
அழுத் / Pa 1 10 100 1 k 10 k 100 k
வெப். நி / K 1992 2194 2442 2754 3159 3705
அணுப் பண்புகள்
படிக அமைப்பு cubic face centered
ஆக்சைடு
நிலைகள்
3, 4
(மென்கார ஆக்ஸைடு)
எதிர்மின்னியீர்ப்பு 1.12 (பௌலிங் அளவீடு)
மின்மமாக்கும்
ஆற்றல்
1st: 534.4 kJ/(mol
2nd: 1050 kJ/mol
3rd: 1949 kJ/mol
அணு ஆரம் 185 பிமீ
வேறு பல பண்புகள்
காந்த வகை no data
மின்தடைமை (அறை வெ. நி.) (β, poly) 828 nΩ·m
வெப்பக்
கடத்துமை
(300 K) 11.3
வாட்/(மீ·கெ) W/(m·K)
வெப்ப நீட்சிமை (அறை வெ. நி.) (γ, பல்படிகம்)
6.3 மைக்ரோ மீ/(மீ·K)
µm/(m·K)
ஒலியின் விரைவு
(மெல்லிய கம்பி வடிவில்)
(20 °C) 2100 மீ/நொடி
யங்கின் மட்டு (γ வடிவம்) 33.6 GPa
Shear modulus (γ வடிவம்) 13.5 GPa
அமுங்குமை (γ வடிவம்) 21.5 GPa
பாய்சான் விகிதம் (γ வடிவம்) 0.24
மோவின்(Moh's) உறுதி எண் 2.5
விக்கர் உறுதிஎண்
Vickers hardness
270 MPa (மெகாபாஸ்)
பிரிநெல் உறுதிஎண்
Brinell hardness]]
412 MPa (மெகாபாஸ்)
CAS பதிவெண் 7440-45-1
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள்
தனிக்கட்டுரை: சீரியம் ஓரிடத்தான்கள்
ஓரி இ.கி.வ அரை
வாழ்வு
சி.மு சி.ஆ
(MeV)
சி.வி
134Ce syn 3.16 days ε 0.500 134La
136Ce 0.185% Ce ஆனது 78 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
138Ce 0.251% Ce ஆனது 80 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
139Ce syn 137.640 days ε 0.278 139La
140Ce 88.450% Ce ஆனது 82 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
141Ce syn 32.501 days β- 0.581 141Pr
142Ce 11.114% > 5×1016 ஆண்டுகள் β-β- unknown 142Nd
144Ce syn 284.893 நாட்கள் β- 0.319 144Pr
மேற்கோள்கள்

சீரியம் (ஆங்கிலம்: Cerium (IPA: /ˈsiːriəm, ˈsɪəriəm/) அணுவெண் 58 கொண்ட ஒரு வேதியியல் தனிமம். இவ்வணுவின் அணுக்கருவில் 82 நொதுமிகள் உள்ளன. தனிம அட்டவணையில் சீரியத்தின் அணுக்குறியீடு Ce ஆகும்.

குறிப்பிடத்தக்க பண்புகள்[தொகு]

சீரியம் பார்ப்பதற்கு வெள்ளிபோல் வெண்மையானது. இது லாந்த்தனைடு குழுவைச் சேர்ந்த ஒரு மாழை. இம்மாழை மென்மையானது, எளிதாக வளைந்து நெளியக்கூடியது, தட்டி கொட்டினால் தகடாகவும் வல்லது. சீரியம் 795 °C இல் நீர்மமாகி முதல் 3443 °C வரை நீர்மமாக நீடிக்கின்றது இதுவே கதிரியக்கமில்லா தனிமங்களில் மிகவும் அதிக வெப்பநிலை இடைவெளியில், அதாவது 2648 °C வெப்பநிலை இடைவெளியில், நீர்மமாக உள்ள தனிமம். இது சில காரக்கனிம மாழைக்கலவைகளில் பயன்படுகின்றது.

சீரியம் அரிதில் கிடைக்கும் காரக்கனிம மாழைகள் குழுவில் இருந்தாலும். இது ஈயத்தை விட அதிகமாகவே பரவலாக கிடைக்கும் ஒரு தனிமம். நில உருண்டையின் மேல் ஓட்டில் மில்லியன் பங்கில் 68 பங்கு (68 ppm) என்னும் அளவில் உள்ளது

காரக்கனிம மாழைகளில் ஐரோப்பியம் என்னும் தனிமத்திற்கு அடுத்தாற்போல அதிக வேதியியல் வினையுறுந் தன்மை உடைய தனிமம். காற்று பட்டால் மங்கி விடுகின்றது. மென் காரக் கரைசல்களாலும், மென் மற்றும் கடும் காடிகளாலும் தாக்குறுகின்றது. குளிர்ந்த நீரில் இருந்தால் சீரியம் மெதுவாக ஆக்ஸைடாகும். தூய சீரியத்தை காற்றுபடும் இடத்தில் வைத்து கீறினால் தீப்பிடிக்கக்கூடும்.

சீரியம் (IV) சல்பேட்டு

சீரியம் (IV) (சீரிக் ceric) உப்புகள் மஞ்சள் கலந்த சிவப்பாகவோ மஞ்சளாகவோ காணப்படும், ஆனால் சீரியம் (III) (சீரஸ் cerous) உப்புகள் வெண்மையாகவோ நிறமில்லாமலோ இருக்கும். இரண்டு ஆக்ஸைடாகும் நிலைகளில் உள்ளவையும் புற ஊதாக்கதிர்களை நன்றாக உள்ளேற்கின்றன. கண்ணாடிகளில் சீரியம் (III) சேர்த்தால் கண்ணாடியின் ஒளியூடுருவும் பண்பை மாற்றாமல் புற ஊதாக்கதிர்களை உள்ளேற்று கடத்தாமல் தடுக்க உதவுகின்றது. எனவே புற ஊஉதாக்கதிர்களின் வடிகட்டியாக பயன்படுகின்றது. அரிதாக கிடைக்கும் காரக்கனிம கலவைகளில் சீரியம் இருந்தால் அதனை எளிதாக ஒரு சோதனை மூலம் கண்டுபிடிக்கலாம். அமோனியாவும் ஹைட்ரஜன் பெராக்ஸைடும் லாந்த்தனைடு கரைசலில் சேர்த்து அக்கலவையுடன் கூட்டினால், சீரியம் அதில் இருந்தால் கரும் பழுப்பு நிறம் தோன்றும்.

கிடைக்கும் மலிவு[தொகு]

காரக்கனிம தனிமங்களிலேயே மிக அதிகமாகக் கிடைக்கும் தனிமம் சீரியம்தான். இது நில உருண்டையின் புற ஓட்டின் எடையில் 0.0046% ஆகும். சீரியம் கிடைக்கும் கனிமங்கள்: அல்லனைட் (allanite) அல்லது (ஆர்த்தைட்) என்றழைக்கப்படும் கனிமம் —(Ca, Ce, La, Y)2(Al, Fe)3(SiO4)3(OH), மோ னாசைட் (monazite) (Ce, La, Th, Nd, Y)PO4, பாஸ்ட்னாசைட் (bastnasite) (Ce, La, Y)CO3F, ஹைட்ராக்ஸைல்பாஸ்ட்னாசைட்(hydroxyl)(bastnasite) (Ce, La, Nd)CO3(OH, F), ராப்டொஃவேன்(rhabdophane) (Ce, La, Nd)PO4-H2O, சிர்க்கோன்(zircon) (ZrSiO4), சின்ச்சிசைட் (synchysite) Ca(Ce, La, Nd, Y)(CO3)2F ஆகும்.மோனாசைட்டும் பாஸ்ட்னாசைட்டும் சீரியம் பெறுவதற்கு தற்பொழுது இரண்டு முதன்மையான கனிமங்களாகும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீரியம்&oldid=2083086" இருந்து மீள்விக்கப்பட்டது