சீரியம் நைட்ரைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
சீரியம் மோனோநைட்ரைடு, அசானிலிடைன்சீரியம்
| |
இனங்காட்டிகள் | |
25764-08-3 | |
ChemSpider | 105113 |
EC number | 247-243-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 117625 |
| |
பண்புகள் | |
CeN | |
வாய்ப்பாட்டு எடை | 154.12 g·mol−1 |
தோற்றம் | பழுப்பு நிறத் தூள் |
உருகுநிலை | 2,557 °C (4,635 °F; 2,830 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335 | |
P262, P280, P305, P351, P338, P304, P340, P403, P233, P501 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சீரியம் நைட்ரைடு (Cerium nitride) என்பது CeN என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சீரியமும் நைட்ரசனும் சேர்ந்து இந்த இருமச்சேர்மம் உருவாகிறது.
தயாரிப்பு
[தொகு]850–900 °செல்சியசு வெப்பநிலையில் சீரியமும் நைட்ரசனும் சேர்ந்து வினைபுரிவதால் சீரியம் நைட்ரைடு உருவாகும்.[1][2]
- 2Ce + N2 -> 2CeN
இயற்பியல் பண்புகள்
[தொகு]2557 பாகை செல்சியசு வெப்பநிலையில் சீரியம் நைட்ரைடு உருகும். பழுப்பு நிற தூளாக இது உருவாக்குகிறது. ஓர் அரை உலோகக் கடத்தியாக செயல்படும் இச்சேர்மம் உலர்ந்த காற்றில் நிலையானதாகும்.
பயன்
[தொகு]யுரேனியம் மோனோ நைட்ரைடின் பண்புகளை ஒப்புருவாக்க சீரியம் நைட்ரைடு பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Cerium Nitride Powder, CeN, CAS 25764-08-3 - Heeger Materials" (in அமெரிக்க ஆங்கிலம்). Heeger Materials Inc. பார்க்கப்பட்ட நாள் 2 February 2024.
- ↑ Scientific and Technical Aerospace Reports (in ஆங்கிலம்). NASA, Office of Scientific and Technical Information. 1964. p. 120. பார்க்கப்பட்ட நாள் 2 February 2024.