நெடுங்குழு 9 தனிமங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நெடுங்குழு → 4
↓  கிடை வரிசை
4 Cobalt, electrolytic made, 99,9%
27
Co
5 Rhodium, powder, pressed, remelted 99,99%
45
Rh
6 Pieces of pure iridium
77
Ir
7 109
Mt

நெடுங்குழு 9 உள்ள தனிமங்களை கோபால்ட் தொகுதி தனிமங்கள் என்று அழைக்கப்படுகிறது. இக்குழுவில் வலைக்குழுவின் இடை நிலை உலோகங்களான கோபால்ட்(Co),ரோடியம்(Rh) ,இரிடியம்(Ir) , மெய்ட்னீரியம் (Mt) ஆகிய நான்கும் இருக்கின்றன. இதில் மெய்ட்னீரியமின் எல்லா ஓரிடத்தான்களும் கதிரியக்கப் பண்புகளை கொண்டுள்ளது. இயற்கையாக கிடைக்கப்படாத இவை மிகச் சிறிய அளவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. எல்லா நெடுங்குழுக்களை போலவே இங்கும் எதிர்மின்னி அமைப்பில், இறுதிக் கூட்டில் எல்லா தனிமங்களும் இரண்டு எதிர்மின்னிகளை கொண்டுள்ளது. அனால் அதிசயக்கும் விதமாக ரோடியம் மட்டும் ஒரு எதிர்மின்னியை கொண்டுள்ளது. இவை பெரும்பாலும் மின்னியல் பயன்பாட்டிற்கும் , கலப்புலோகம் தயாரிக்கவும், தொழிற்சாலை வினைவேகமாற்றியாகவும் பயன்படுத்தப்படுகிறது.


அணு எண் தனிமம் ஒரு கூட்டில் உள்ள எதிர்மின்னிகள்
27 கோபால்ட் 2, 8, 15, 2
45 ரோடியம் 2, 8, 18, 16, 1
77 இரிடியம் 2, 8, 18, 32, 15, 2
109 மெய்ட்னீரியம் 2, 8, 18, 32, 32, 15, 2