உள்ளடக்கத்துக்குச் செல்

இரிடியம் நான்காக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரிடியம்(VIII) ஆக்சைடு
Iridium(VIII) oxide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
Iridium(VIII) oxide
இனங்காட்டிகள்
474103-25-8
பண்புகள்
IrO4
வாய்ப்பாட்டு எடை 256.215 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இரிடியம் நான்காக்சைடு(IrO4, இரிடியம்((VIII) ஆக்சைடு) (Iridium tetroxide (IrO4, Iridium(VIII) oxide) என்பது ஆக்சிசனேற்ற நிலை +VIII இல் ஆக்சிசனும் இரிடியமும் இணைந்த ஒர் இரட்டைச் சேர்மமாகும்[1] [2]. திடநிலை ஆர்கானில் -267 0 செல்சியசு வெப்பநிலையில் [(η1O2)IrO2] இன் ஒளிவேதியியல் மறுசீரமைப்பு வினையினால் இரிடியம் நான்காக்சைடு உருவாகிறது. உயர் வெப்பநிலையில் இந்த ஆக்சைடு நிலைப்புத் தன்மையுடன் இருப்பதில்லை[3]. இரிடியம் நான்காக்சைடின் நேர்மின் அயனியை அகச்சிகப்பு ஒளிமின்பிரிகை நிறமாலையியல் வழியாக கண்டறிந்தபொழுது இதன் முறையான ஆக்சிசனேற்ற நிலை IX என தெரிவிக்கப்பட்டுள்ளது[4] [5] இரிடியம் டெட்ராக்சைடு என்ற பெயராலும் இச்சேர்மத்தை அழைப்பர். .

மேற்கோள்கள்[தொகு]

  1. Gong, Yu; Zhou, Mingfei; Kaupp, Martin; Riedel, Sebastian (2009). "Formation and Characterization of the Iridium Tetroxide Molecule with Iridium in the Oxidation State +VIII". Angewandte Chemie International Edition 48 (42): 7879. doi:10.1002/anie.200902733. 
  2. 20030138958, Blalock, Guy T., Micron technology, Inc., "Detection of gas phase materials", published 24-07-2003 
  3. Citra, Angelo; Andrew, Lester (1999). "Reactions of Laser-Ablated Iridium Atoms with O2. Infrared Spectra and DFT Calculations for Iridium Dioxide and Peroxo Iridium(VI) Dioxide in Solid Argon". J. Phys. Chem. A 103 (21): 4182–4190. doi:10.1021/jp990388o. 
  4. Himmel, D., Knapp, C., Patzschke, M. & Riedel, S. How far can we go? Quantum-chemical investigations of oxidation state IX. ChemPhysChem 11, 865–869 (2010) எஆசு:10.1002/cphc.200900910
  5. Identification of an iridium-containing compound with a formal oxidation state of IX Guanjun Wang, Mingfei Zhou, James T. Goettel, Gary J. Schrobilgen, Jing Su, Jun Li, Tobias Schlöder & Sebastian Riedel Nature 514, 475–477 (23 October 2014) எஆசு:10.1038/nature13795
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிடியம்_நான்காக்சைடு&oldid=2492303" இலிருந்து மீள்விக்கப்பட்டது