பலேடியம்(II) ஆக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பலேடியம்(II) ஆக்சைடு
PdOxide.jpg
பெயர்கள்
வேறு பெயர்கள்
பலேடியம் ஒராக்சைடு
இனங்காட்டிகள்
1314-08-5 Yes check.svgY
ChemSpider 66602 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 73974
பண்புகள்
PdO
வாய்ப்பாட்டு எடை 122.42 கி/மோல்
தோற்றம் பசுமை கலந்த -கருப்புத் துகள்
அடர்த்தி 8.3 கி/செ.மீ3
உருகுநிலை
கரையாது
கரைதிறன் அமிலங்களில் கரையாது
இராச திராவகத்தில் சிறிதளவு கரையும்
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை எளிதாக தீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பலேடியம் சல்பைடு
ஏனைய நேர் மின்அயனிகள் நிக்கல்(II) ஆக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

பலேடியம்(II) ஆக்சைடு (Palladium(II) oxide) என்பது PdO. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நன்கு வரையறை செய்யப்பட்ட பலேடியச் சேர்மம் இது மட்டுமேயாகும்[1]. பலேடியம் உலோகத்துடன் ஆக்சிசன் சேர்த்து வினைப்படுத்தி பலேடியம்(II) ஆக்சைடு தயாரிக்கலாம். 900° செ வெப்பநிலையில் இச்சேர்மம் சிதைந்து மீண்டும் பலேடியம் உலோகம் மற்றும் ஆக்சிசன் வாயுவாக மீள்கிறது. அமிலங்களால் இச்சேர்மம் பாதிக்கப்படுவதில்லை[1]

தயாரிப்பு[தொகு]

பெரும்பாலும் PdO குறைவாகத் தயாரிக்கப்படும் ஒரு பொருளாகக் கருதப்படுகிறது. ஏனெனில் வினையூக்கியாகச் செயல்பட மட்டுமே இது தயாரிக்கப்படுகிறது. ( ஆடம்சு வினையூக்கி ). சிறு பலேடியத்தை ஆக்சிசனுடன் சேர்த்து 350° செ வெப்பநிலைக்குச் சூடுபடுத்தி பலேடியம்(II) ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது.

2 Pd + O2 → 2 PdO

இவ்வாக்சைடு கருப்புநிறத் துகளாகக் கிடைக்கிறது. பலேடியம்(II) குளோரைடு மற்றும் பொட்டாசியம் நைட்ரேட்டு கலவையை சூடுபடுத்தியும் வினையூக்க செயலுக்காகப் பயன்படும் பலேடியம்(II) ஆக்சைடு தயாரிக்க முடியும்.

2 PdCl2 + 4 KNO3 → 2 PdO + 4 KCl + 2 NO2 + O2 (வாய்ப்புள்ள நிகழ்வினை)

அல்லது இராச திராவகத்தில் கரைக்கப்பட்ட பலேடியத்தை சோடியம் நைட்ரேட்டு சேர்த்து 600° செ [2][3] வெப்பநிலைக்குச் சூடுபடுத்தி தயாரிக்கலாம்.

பலேடியம் நைட்ரேட்டை நீராற்பகுப்பு வினைக்கு உட்படுத்தி அல்லது கரையக்கூடிய பலேடியம் சேர்மத்துடன் வலிமையான காரத்தைச் சேர்த்து வினைப்படுத்தி நீரேற்று வடிவ பலேடியம்(II) ஆக்சைடு தயாரிக்கலாம். இந்நீரேற்று வடிவம் அமிலத்தில் கரைகிறது. பழுப்புநிற நீரேற்று ஆக்சைடைச் சூடேற்றி கருப்புநிற நீரிலி ஆக்சைடாக மாற்றலாம். தண்ணீரின் குறைவான அளவிற்கு ஏற்ப ஆக்சைடின் மீதான அமிலத்தாக்கத்தின் ஏற்புத்திறன் குறைகிறது

பலேடியம் நைட்ரேட்டுடன் (Pd(NO3)2) காரக் கரைசலைச் சேர்த்தால் நீரேற்ற ஆக்சைடு அதாவது ஐதராக்சைடு ( PdO.nH2O) அடர் மஞ்சள் நிறத்தில் வீழ்படிவாகிறது[1].

பயன்கள்[தொகு]

கரிமத் தொகுப்பு வினைகளில் வினையூக்க ஐதரசனேற்ற வினைகளில் பலேடியம்(II) ஆக்சைடுகள் வினையூக்கிகளாகப் பயன்படுகின்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1984). Chemistry of the Elements. Oxford: Pergamon Press. பக். 1336–37. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-08-022057-6. http://books.google.co.nz/books?id=OezvAAAAMAAJ&q=0-08-022057-6&dq=0-08-022057-6&source=bl&ots=m4tIRxdwSk&sig=XQTTjw5EN9n5z62JB3d0vaUEn0Y&hl=en&sa=X&ei=UoAWUN7-EM6ziQfyxIDoCQ&ved=0CD8Q6AEwBA. 
  2. 2.0 2.1 Donald Starr and R. M. Hixon (1943). "Tetrahydrofuran". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv2p0566. ; Collective Volume, 2, p. 566
  3. Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1965, NY. Vol. 2. p. 1583.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலேடியம்(II)_ஆக்சைடு&oldid=2052873" இருந்து மீள்விக்கப்பட்டது