உள்ளடக்கத்துக்குச் செல்

சமாரியம்(III) ஆக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Samarium(III) oxide
சமாரியம்(III) ஆக்சைடு Samarium(III) oxide
பெயர்கள்
வேறு பெயர்கள்
சமாரியம் செசுகுயிவாக்சைடு
இனங்காட்டிகள்
12060-58-1 Y
ChemSpider 140199 Y
EC number 235-043-6
InChI
  • InChI=1S/3O.2Sm/q3*-2;2*+3 Y
    Key: FKTOIHSPIPYAPE-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 159425
  • [Sm+3].[Sm+3].[O-2].[O-2].[O-2]
பண்புகள்
Sm2O3
வாய்ப்பாட்டு எடை 348.72 கி/மோல்
தோற்றம் மஞ்சள்-வெள்ளைப் படிகங்கள்
அடர்த்தி 8.347 கி/செ.மீ3
உருகுநிலை 2,335 °C (4,235 °F; 2,608 K)
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம்
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் சமாரியம்(III) குளோரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் புரோமெத்தியம்(III) ஆக்சைடு, ஐரோப்பியம்(III) ஆக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

சமாரியம்(III) ஆக்சைடு (Samarium(III) Oxide) என்பது Sm2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதியியல் சேர்மமாகும்.

பயன்கள்

[தொகு]

ஒளியியல் கருவிகள் மற்றும் அகச்சிவப்புக் கதிர்வீச்சை உறிஞ்சும் அகச்சிவப்புக் கதிர் உறிஞ்சும் கண்ணாடிகள் தயாரிக்க சமாரியம்(III) ஆக்சைடு பயன்படுகிறது. மேலும் அணுக்கரு உலைகளில் உள்ள கட்டுப்பாட்டுக் கழிகளில் நியூட்ரான் உறிஞ்சியாகவும் இது பயன்படுகிறது. வளையமில்லா முதல்நிலை ஆல்ககால்களை ஆல்டிகைடுகள் மற்றும் கீட்டோனாக மாற்றும் வினைகளில் சமாரியம்(III) ஆக்சைடு வினையூக்கியாகப் பயன்படுகிறது. இவை தவிர பிற சமாரியம் உப்புகள் தயாரிப்பிலும் இது பயனாகிறது[1].

தயாரிப்பு

[தொகு]

சமாரியம்(III) ஆக்சைடை இரண்டு வழிகளில் தயாரிக்கலாம்.

  1. சமாரியம்(III) கார்பனேட்டு, ஐதராக்சைடு, நைட்ரேட்டு, ஆக்சலேட்டு அல்லது சல்பேட்டு போன்ற சேர்மங்களை வெப்பச் சிதைவுக்கு உட்படுத்துவதன் மூலமாக சமாரியம்(III) ஆக்சைடைத் தயாரிக்கலாம்.
Sm2(CO3)3 → Sm2O3 + 3 CO2
  1. சமாரியத்தை காற்று அல்லது ஆக்சிசனில் 150 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சூடுபடுத்தினாலும் சமாரியம்(III) ஆக்சைடைத் தயாரிக்கலாம்.
4 Sm + 3 O2 → 2 Sm2O3

வினைகள்

[தொகு]

கனிம அமிலங்களில் சமாரியம்(III) ஆக்சைடு கரைந்து ஆவியாக்குதல் மற்றும் படிகமாக்குதல் வினைகளால் உப்புகளாக உருவாகிறது.

Sm2O3 + 6 HCl → 2 SmCl3 + 3 H2O

ஐதரசன் அல்லது கார்பன் ஓராக்சைடு போன்ற ஆக்சிசன் ஒடுக்கிகளுடன் சமாரியம்(III) ஆக்சைடு உயர் வெப்பநிலைகளில் வினைபுரிவதால் சமாரியம் உலோகமாக ஒடுக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Pradyot Patnaik. Handbook of Inorganic Chemicals. McGraw-Hill, 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-049439-8
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமாரியம்(III)_ஆக்சைடு&oldid=2696825" இலிருந்து மீள்விக்கப்பட்டது