தைட்டானியம்(II) ஆக்சைடு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
தைட்டானியம் ஓராக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
12137-20-1 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 61685 |
| |
பண்புகள் | |
TiO | |
வாய்ப்பாட்டு எடை | 63.866 கி/மோல் |
தோற்றம் | வெண்கல படிகங்கள் |
அடர்த்தி | 4.95 கி/செ.மீ3 |
உருகுநிலை | 1,750 °C (3,180 °F; 2,020 K) |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம் |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாது. |
தொடர்புடைய சேர்மங்கள் | |
தைட்டானியம் ஆக்சைடுகள் தொடர்புடையவை |
தைட்டானியம்(III) ஆக்சைடு தைட்டானியம்(III,IV) ஆக்சைடு தைட்டானியம்(IV) ஆக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தைட்டானியம்(II) ஆக்சைடு (Titanium(II) oxide) என்பது TiO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் தைட்டானியம் மற்றும் ஆக்சிசன் சேர்ந்து உருவாகும் இச்சேர்மத்தை தைட்டானியம் ஈராக்சைடு மற்றும் தைட்டானியம் உலோகத்தை 1500°செல்சியசு வெப்பநிலையில்[1] சேர்த்து தயாரிக்கலாம். TiO0.7 அளவுக்கு TiO1.3 என்ற வீச்சில் சமமற்று விகிதவியலுக்கு ஒவ்வா சேர்மமாக இது காணப்படுகிறது. குறைபாடுள்ள பாறை உப்பு படிகref name = "Wiberg&Holleman"/> அமைப்பில் தைட்டானியம் அல்லது ஆக்சிசனால் ஏற்பட்ட காலியிடத்தால் இந்நிலை தோன்றுகிறது. தூய்மையான தைட்டானியம்(II) ஆக்சைடில் 15% தைட்டானியம் மற்றும் ஆக்சிசன் தளங்கள் இரண்டும் காலியிடங்களாக உள்ளன[1]. கவனமாகக் காய்ச்சி குளிரவைக்கும் போது ஒற்றைச்சரிவு படிகம் உற்பத்தியாகி காலியிடங்களை நிரப்புகிறது. இவ்வடிவில் உயர் தடுப்புத் திறனை வெளிப்படுத்தும் மூலசெல்களில் 5 TiO அலகுகள் உள்ளன[2]. உயர் வெப்பநிலை வடிவத்தில் முக்கோணப் பட்டக ஒருங்கிணைப்பு அறியப்படுகிறது. தைட்டானியம்(II) ஆக்சைடின் அமிலக் கரைசல்கள் குறுகிய காலத்திற்கு நிலைப்புத் தன்மையுடன் இருந்து பின்னர் சிதைவடைந்து ஐதரசன் வாயுவைக் கொடுக்கின்றன:[1].
- Ti2+ + H+ → Ti3+ + ½ H2
விண்மீன்களிடை[3] ஊடகத்தில் தைட்டானியம்(II) ஆக்சைடின் ஈரணு மூலக்கூறுகள் இருப்பதற்கான ஆதாரங்கள் அறியப்படுகினன. TiO குளிர் (எம் வகை) நட்சத்திரங்களில் ஒளியியல் நிறமாலையில் வலுவான பட்டைகளைக் காட்டுகிறது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Holleman, A. F.; Wiberg, E. (2001), Inorganic Chemistry, San Diego: Academic Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5
- ↑ Electrical and Magnetic Properties of TiO and VO, Banus M. D., Reed T. B., Strauss A. J., Phys. Rev. B 5, 2775 - 2784, (1972)எஆசு:10.1103/PhysRevB.5.2775
- ↑ Dyck, H. M.; Nordgren, Tyler E. "The effect of TiO absorption on optical and infrared angular diameters of cool stars" Astronomical Journal (2002), 124(1), 541-545. எஆசு:10.1086/341039
- ↑ http://www.stsci.edu/~inr/ldwarf.html