உள்ளடக்கத்துக்குச் செல்

இலித்தியம் ஆக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலித்தியம் ஆக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் ஆக்சைடு
வேறு பெயர்கள்
கிக்கெரைட்டு
இனங்காட்டிகள்
12057-24-8 Y
ChemSpider 145811 Y
InChI
  • InChI=1S/2Li.O/q2*+1;-2 Y
    Key: FUJCRWPEOMXPAD-UHFFFAOYSA-N Y
  • InChI=1S/2Li.O/q2*+1;-2
    Key: FUJCRWPEOMXPAD-UHFFFAOYAW
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 166630
வே.ந.வி.ப எண் OJ6360000
  • [Li+].[Li+].[O-2]
பண்புகள்
Li
2
O
வாய்ப்பாட்டு எடை 29.88 கி/மோல்
தோற்றம் வெண்ணிறத் திண்மம்
அடர்த்தி 2.013 கி/செமீ3
உருகுநிலை 1,438 °C (2,620 °F; 1,711 K)
கொதிநிலை 2,600 °C (4,710 °F; 2,870 K)
தீவிரமாக வினைபுரிந்து இலித்தியம் ஐதராக்சைடு
மட. P 9.23
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.644 [1]
கட்டமைப்பு
படிக அமைப்பு புளோரைட்டு எதிர் (கனசதுரம்), cF12
புறவெளித் தொகுதி Fm3m, No. 225
ஒருங்கிணைவு
வடிவியல்
நான்முகி (Li+); கனசதுரம் (O2−)
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-20.01 கிலோயூல்/கி அல்லதுr -595.8 கியூல்/மாேல்
நியம மோலார்
எந்திரோப்பி So298
37.89 யூல்/மாேல் கெல்வின்
வெப்பக் கொண்மை, C 1.8105 யூல்/கிராம் கெல்வின் அல்லது 54.1 யூல்/மாேல் கெல்வின்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் அரிக்கும், நீருடன் கடுமையாக வினைபுரியும்
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாதது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் இலித்தியம் சல்பைடு
ஏனைய நேர் மின்அயனிகள் சாேடியம் ஆக்சைடு
பொட்டாசியம் ஆக்சைடு
ருபீடியம் ஆக்சைடு
சீசியம் ஆக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

இலித்தியம் ஆக்சைடு (Lithium oxide) (Li
2
O) அல்லது இலித்தியா ஒரு  கனிமச் சேர்மம் ஆகும். இலித்தியம் ஆக்சைடானது, இலித்தியம் உலோகம் காற்றில் எரிக்கப்படும் போது ஆக்சிசனுடன் இணைந்து சிறிய அளவு இலித்தியம் பெராக்சைடுடன் கிடைக்கிறது:[2]

4Li + O
2
→ 2Li
2
O
.

துாய்மையான Li
2
O
, 450 ° செல்சியசு வெப்பநிலையில் இலித்தியம் பெராக்சைடின் (Li2O2) வெப்பப் பகுப்பின் மூலமாகப் பெறப்படுகிறது.[2]

2Li
2
O
2
→ 2Li
2
O
+ O
2

அமைப்பு

[தொகு]

திண்ம நிலையில் இலித்தியம் ஆக்சைடு ஒரு கால்சியம் புளோரைடு அமைப்பையொத்த ஆண்டிபுளோரைட்டு அமைப்பை ஏற்றுக் கொண்டது. புளோரைடு எதிரயனிகளுக்குப் பதிலாக பதிலியிடப்பட்ட இலித்தியம் நேரயனிகளுடன் புளோரைட்டு அமைப்பும் மற்றும் கால்சியம் நேரயனிகளுக்காக பதிலியிடப்பட்ட ஆக்சைடு எதிரயனிகளையும் கொண்ட அமைப்பாக இருந்தது.[3] தாழ்-ஆற்றல் வாயு நிலை Li
2
O
மூலக்கூறானது வலிமையான அயனிப் பிணைப்புக்கு ஒத்த பிணைப்பு நீளத்துடன் நேர்கோட்டு வடிவத்தைப் பெற்றுள்ளது.[4][5]

வலுவளவு ஓட்டு இலத்திரன் சோடிகளின் தள்ளுகைக் கொள்கையின்படி இச்சேர்மத்திற்கு நீர் மூலக்கூறு கொண்டிருப்பது போன்ற  வளைந்த வடிவத்தைக் கொண்டிருப்பதாக கணிக்கப்படுகிறது.

பயன்கள்

[தொகு]

இலித்தியம் ஆக்சைடு சுட்டாங்கல் பளபளப்பாக்கத்தில் இளக்கியாகப் பயன்படுகிறது. இது தாமிரத்துடன் நீல மணிகளையும், கோபால்ட்டுடன் இளஞ்சிவப்பு மணிகளையும் தருகிறது. இலித்தியம் ஆக்சைடு நீர் மற்றும் நீராவியுடன் வினைபுரிந்து இலித்தியம் ஐதராக்சைடினை உருவாக்குகிறது. இவ்வாறு உருவாக்கப்பட்ட இலித்தியம் ஐதராக்சைடு உடனுக்குடன் அக்கலவையிலிருந்து பிரித்தெடுக்கப்பட வேண்டும். வெப்ப தடுப்பு பூச்சு அமைப்புகளுக்குள் அழிவு ஏற்படுத்தாத உமிழ்வு நிறமாலையியல் மதிப்பீடு மற்றும் சிதைவு கண்காணிப்பு ஆகியவற்றிற்காக பயன்படுத்துதல் குறித்தும் இச்சேர்மம் ஆய்விடப்பட்டு வருகிறது.

இலித்தியம் ஆக்சைடின் மின்னாற்பகுப்பின் மூலமாகவும் இலித்தியம் உலோகமானது பெறப்படுகிறது. இவ்வினையில் ஆக்சிசன் உபவிளைபொருளாகக் கிடைக்கப்பெறுகிறது.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Pradyot Patnaik. Handbook of Inorganic Chemicals. McGraw-Hill, 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-049439-8
  2. 2.0 2.1 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1984). Chemistry of the Elements. Oxford: Pergamon Press. pp. 97–99. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-08-022057-6. {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help)
  3. Zintl, E.; Harder, A.; Dauth B. (1934). "Gitterstruktur der oxyde, sulfide, selenide und telluride des lithiums, natriums und kaliums". Zeitschrift für Elektrochemie und Angewandte Physikalische Chemie 40: 588–93. 
  4. Wells A.F. (1984) Structural Inorganic Chemistry 5th edition Oxford Science Publications பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-855370-6
  5. A spectroscopic determination of the bond length of the LiOLi molecule: Strong ionic bonding, D. Bellert, W. H. Breckenridge, J. Chem. Phys. 114, 2871 (2001); எஆசு:10.1063/1.1349424
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலித்தியம்_ஆக்சைடு&oldid=2461858" இலிருந்து மீள்விக்கப்பட்டது