இருபுரோமின் ஐந்தாக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருபுரோமின் ஐந்தாக்சைடு
Dibromine pentoxide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டைபுரோமின் பென்டாக்சைடு
வேறு பெயர்கள்
புரோமின் ஐந்தாக்சைடு
இனங்காட்டிகள்
58572-43-3 Yes check.svgY
பண்புகள்
Br2O5
வாய்ப்பாட்டு எடை 239.805 கி/மோல்
தோற்றம் நிறமற்ற திண்மம்
உருகுநிலை
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் புரோமின் ஈராக்சைடு
புரோமின் முப்புளோரைடு
புரோமின் ஐம்புளோரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் ஆக்சிசன் இருபுளோரைடு
இருகுளோரின் ஓராக்சைடு
குளோரின் ஈராக்சைடு
அயோடின் ஈராக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N
Infobox references

இருபுரோமின் ஐந்தாக்சைடு (Dibromine pentoxide) என்பது Br2O5. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புரோமின் மற்றும் ஆக்சிசன் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. நிறமற்றுக் காணப்படும் இச்சேர்மம் -20 0 செல்சியசு வெப்பநிலைக்கு கீழ் நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகிறது. இருபுரோமின் ஐந்தாக்சைடு O2Br-O-BrO2 என்ற மூலக்கூறு அமைப்புடனும் வளைந்த Br-O-Br பிணைப்புகளின் பிணைப்புக் கோணம் 121.2° ஆகவும் கொண்ட அமைப்பில் காணப்படுகிறது. ஒவ்வொரு BrO3 குழுவும் உச்சியில் புரோமின் அணுவைக் கொண்ட பட்டைக்கூம்பு வடிவத்துடன் காணப்படுகிறது.[2]

தயாரிப்பு[தொகு]

புரோமின் கரைசலை ஓசோன் கலந்த இருகுளோரோமீத்தேனுடன் தாழ்வெப்பநிலைகளில் வினைபடுத்துவதாலும் புரோப்பியோநைட்ரைலை மீள்படிகமாக்கலாலும் இருபுரோமின் ஐந்தாக்சைடு தயாரிக்க முடியும்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Perry, Dale L.; Phillips, Sidney L. (1995), Handbook of Inorganic Compounds, CRC Press, p. 74, ISBN 0-8493-8671-3, 25 August 2015 அன்று பார்க்கப்பட்டது
  2. 2.0 2.1 Wiberg, Egon (2001). Wiberg, Nils. ed. Inorganic chemistry (1st ). San Diego, Calif.: Academic Press. பக். 464. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780123526519.