வெப்பப் பகுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெப்பப் பகுப்பு (Thermolysis) என்பது வெப்பத்தால் ஏற்படுத்தப்படும் ஒரு வேதிப்பகுப்பாகும். வெப்பப் பகுப்பில், எந்த வெப்பநிலையில் ஒரு பொருள் தனது வேதிப்பகுப்புகளாகப் பிரிகின்றதோ, அது சிதைவு வெப்பநிலை எனப்படும்.

வெப்பப் பகுப்பு வினை பொதுவாக வெப்பம் கொள் வினையாக இருக்கும். சேர்மத்தில் இருக்கும் வேதிப்பிணைப்புகளைப் பகுத்துப் பிரிக்க வெப்பம் தேவைப்படும். மாறாக, இது வெப்பம் உமிழ் வினையாக இருக்குமானால், தொடர்ச்சியாக அதிகரித்த வெப்பம் உமிழப்பட்டு வெடிப்பு நேர வாய்ப்புண்டாகும்.

காட்டாக, நீரைச் சூடுபடுத்தும்போது, வெப்பநிலை 2000 °C-க்கு மேல் போகும்போது, சிறிதளவு ஐதராக்சிள் மூலக்கூறும், ஒற்றை ஆக்சிசன் அணுவும், ஒற்றை ஐதரசன் அணுவும், ஆக்சிசன், ஐதரசன் மூலக்கூறுகளாகவும் பிரியும்.[1]

References[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெப்பப்_பகுப்பு&oldid=2748338" இலிருந்து மீள்விக்கப்பட்டது