புரோமின் ஈராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரோமின் ஈராக்சைடு
Bromine dioxide
Bromine-dioxide-radical-resonance-hybrid-2D.png
Bromine-dioxide-MP2-CM-3D-balls.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
புரோமின் டையாக்சைடு
இனங்காட்டிகள்
21255-83-4 Yes check.svgY
ChemSpider 4574124 N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 5460629
பண்புகள்
BrO2
வாய்ப்பாட்டு எடை 111.903 g/mol[1]
தோற்றம் நிலையற்ற மஞ்சள் படிகங்கள்
உருகுநிலை
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் புரோமின் ஓராக்சைடு
புரோமின் முப்புளோரைடு
புரோமின் ஐம்புளோரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் ஆக்சிசன் இருபுளோரைடு
இருகுளோரின் ஓராக்சைடு
குளோரின் ஈராக்சைடு
ஐயோடின் ஈராக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

புரோமின் ஈராக்சைடு (Bromine dioxide) என்பது BrO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மம் ஆகும். புரோமினும் ஆக்சிசனும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் மஞ்சள் நிறத்தில் இருந்து மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறத்திற்கு மாறக்கூடியதாக நிலைப்புத் தன்மையற்று காணப்படுகிறது. முதன்முதலில் 1937 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இச்சேர்மம் வளிமண்டலத்தில் உள்ள ஓசோனுடன் ஈடுபடும் வினை முக்கியத்துவம் பெறுமென முன்கணித்துக் கூறப்பட்டது. புரோமின் ஈராக்சைடு , குளோரின் ஈராக்சைடுக்கு இணையான பண்புகளைப் பெற்றுள்ளது. இதற்கு இணையாகக் கருதப்படும் ஆலசனைவிட தனிமவரிசை அட்டவணையில் ஒரு வரிசை அதிகமான இடத்தில் புரோமின் இடம்பெற்றுள்ளது.

தயாரிப்பு மற்றும் வினைகள்[தொகு]

புரோமின் மற்றும் ஆக்சிசன் கலந்த கலவையில் குறைவான வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் மின்சாரத்தைச் செலுத்தினால் புரோமின் ஈராக்சைடு உண்டாகிறது. 50 பாகை செல்சியசு வெப்பநிலையில் முக்குளோரோபுளோரோமீத்தேன் முன்னிலையில் புரோமின் வாயுவுடன் ஓசோனைச் சேர்த்தும் புரோமின் ஈராக்சைடைத் தயாரிக்கலாம். ஒரு காரத்துடன் இச்சேர்மத்தைச் சேர்க்கும் போது புரோமைடும் புரோமேட்டு எதிர் அயனிகளும் உண்டாகின்றன.

6 BrO2 + 6 NaOHNaBr + 5 NaBrO3 + 3 H2O

மேற்கோள்கள்[தொகு]

  1. Perry, Dale L.; Phillips, Sidney L. (1995), Handbook of Inorganic Compounds, CRC Press, p. 74, ISBN 0-8493-8671-3, 17 March 2009 அன்று பார்க்கப்பட்டது
  2. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, p. 447, ISBN 0-8493-0594-2
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோமின்_ஈராக்சைடு&oldid=2438531" இருந்து மீள்விக்கப்பட்டது