தாண்டலம்(V) புரோமைடு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
தாண்டலம் பெண்டாபுரோமைடு
| |
இனங்காட்டிகள் | |
13451-11-1 TaBr5 17786-61-7 Ta2Br10 | |
EC number | 236-618-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 83480 |
| |
பண்புகள் | |
Ta2Br10 | |
வாய்ப்பாட்டு எடை | 580.468 கி/மோல் |
தோற்றம் | மஞ்சள் நிற திண்மம் |
அடர்த்தி | 4.99 கி/செ.மீ³, திண்மம் |
உருகுநிலை | 265 °C (509 °F; 538 K) |
கொதிநிலை | 349 °C (660 °F; 622 K) |
நீராற்பகுப்பு அடையும் | |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | பட்டியலிடப்படவில்லை |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தாண்டலம்(V) புரோமைடு (Tantalum(V) bromide) என்பது Ta2Br10 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கனிம வேதியியல் சேர்மம் ஆகும் [1]. குறுக்குக் காந்தவிசை எனப்படும் டயா காந்தப்பண்பைக் கொண்ட இச்சேர்மம் மஞ்சள் நிறத்தில் உள்ளது. எளிதில் நீராற்பகுப்பு அடைகிறது. விளிம்பில் பகிர்ந்து கொள்ளும் ஈரெண்முகக் கட்டமைப்பை தாண்டலம்(V) புரோமைடு ஏற்கிறது. அதாவது இரண்டு சதுரசாய்தளக் கோபுர TaBr5 துணை அலகுகள் புரோமைடு ஈந்தணைவி பாலத்தால் இணைக்கப்பட்ட்டுள்ளது என்பது இதன் பொருளாகும். நையோபியம் மற்றும் தாண்டலம் பெண்டாகுளோரைடுகளும், பெண்டா அயோடைடுகளும் இதே கட்டமைப்பு நோக்குருவை பகிர்ந்து கொள்கின்றன [2].
தயாரிப்பு
[தொகு]உயர் வெப்பநிலைகளில் ஒரு குழல் உலையில் புரோமின் உடன் தாண்டலம் உலோகம் அல்லது தாண்டலம் கார்பைடு சேர்த்து வினைபுரியச் செய்யும் முறையில் வழக்கமாக தாண்டலம்(V) புரோமைடு தயாரிக்கப்படுகிறது. டாண்ட்டலத்திற்கு முன்னதாக இடம்பெறும் தனிமங்களின் புரோமைடுகளுக்குப் பதிலாக சில சமயங்களில் குளோரைடுகள் விரும்பப்படுகின்றன. ஏனெனில் நீர்ம நிலை புரோமினைக் காட்டிலும் வாயுநிலை குளோரினைக் கையாளவது எளிமையாக இருக்கும். மற்ற மூலக்கூற்று ஆலைடுகளைப் போல தாண்டலம்(V) புரோமைடும் கார்பன் டெட்ராகுளோரைடு போன்ற முனைவற்ற கரைப்பான்களில் கரைகிறது. (1.465 கி/100 மி.லி 30 °செல்சியசில்) ஆனால் இது பல கரைப்பான்களுடன் வினைபுரிகிறது [3].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Greenwood, N. N.; & Earnshaw, A. Chemistry of the Elements (2nd Edn.), 1997, Oxford:Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7506-3365-4.
- ↑ K. Habermehl, I. Pantenburg, G. Meyer "Redetermination of Tantalum Pentabromide, (TaBr5)2" Acta Crystallogr. 2010, E66, i67. எஆசு:10.1107/S1600536810032538
- ↑ D. H. Nowicki, I. E. Campbell "Tantalum(V) Bromide" Inorganic Syntheses 1953, volume IV, p. 130. எஆசு:10.1002/9780470132357.ch44