காட்மியம் புரோமைடு
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
காட்மியம் (II) புரோமைடு | |
| வேறு பெயர்கள்
காட்மியம் டைபுரோமைடு | |
| இனங்காட்டிகள் | |
| 7789-42-6 13464-92-1 (tetrahydrate) | |
| ChemSpider | 23011 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 24609 |
| வே.ந.வி.ப எண் | EU9935000 |
| |
| UNII | 7726AXS0WH |
| பண்புகள் | |
| CdBr2 | |
| வாய்ப்பாட்டு எடை | 272.22 g/mol |
| தோற்றம் | வெள்ளை நிறம் தொடங்கி இளமஞ்சள் நிற திண்ம படிகம் |
| அடர்த்தி | 5.192 g/cm3, solid |
| உருகுநிலை | 568 °C (1,054 °F; 841 K) |
| கொதிநிலை | 844 °C (1,551 °F; 1,117 K) |
| 56.3 g/100 mL (0 °C) 98.8 g/100 mL (20 °C) 160 g/100 mL (100 °C) | |
| கரைதிறன் | ஆல்ககால், ஈதர், அசிட்டோன் மற்றும் திரவ அம்மோனியா ஆகியவற்றில் கரையும். |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | செஞ் சாய்சதுரம், hr9, SpaceGroup = R-3m, No. 166 |
| தீங்குகள் | |
| Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose) |
225 mg/kg, oral (rat) |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் | காட்மியம் குளோரைடு, காட்மியம் அயோடைடு |
| ஏனைய நேர் மின்அயனிகள் | துத்தநாக புரோமைடு, கால்சியம் புரோமைடு, மக்னீசியம் புரோமைடு |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
காட்மியம் புரோமைடு (Cadmium bromide) என்பது ஐதரோ புரோமிக் அமிலத்தினுடைய காட்மியம் உப்பு ஆகும். இளமஞசள் நிறத்தில் காணப்படும் இவ்வுப்பு நீரில் கரைகிறது. மற்ற காட்மியம் சேர்மங்களுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் நச்சு மிக்கதாக காணப்படுகிறது. இதனுடைய மூலக்கூறு வாய்பாடு CdBr2 என்பதாகும்.
பயன்கள்
[தொகு]ஒளிப்படச் சுருள்கள் தயாரிப்பு , கல் அச்சுக்கலை மற்றும் குடைதல் அல்லது செதுக்குதல் முதலான தொழில்களில் காட்மியம் புரோமைடு பயன்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]காட்மியத்தை புரோமின் ஆவியுடன் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலமாக காட்மியம் புரோமைடு தயாரிக்கப்படுகிறது. உலர் காட்மியம் அசிட்டேட்டை தூய அசிட்டிக் அமிலத்துடன் மற்றும் அசிட்டைல் புரோமைடுடன் சேர்ப்பதன் மூலமாகவும் இச்சேர்மத்தைத் தயாரிக்க இயலும். இம்முறைகள் தவிர காட்மியம் அல்லது காட்மியம் ஆக்சைடை ஐதரோ புரோமிக் அமிலத்துடன் சேர்த்து நீரியம் வாயுச்சூழலில் கரைசலை ஆவியாக்கியும் மாற்றுமுறையில் காட்மியம் புரோமைடு தயாரிக்கப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Patnaik, P. (2002). Handbook of Inorganic Chemicals. McGraw-Hill. ISBN 0-07-049439-8.