காட்மியம் ஐதரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காட்மியம் ஐதரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
காட்மியம்(II) ஐதரைடு
காட்மியம் டையைதரைடு
இனங்காட்டிகள்
72172-64-6 N
ChemSpider 29331616 N
யேமல் -3D படிமங்கள் Image
பண்புகள்
CdH
2
வாய்ப்பாட்டு எடை 113.419 கி மோல்−1
தீங்குகள்
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
[1910.1027] TWA 0.005 மி.கி/மீ3 (Cd) ஆக [1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
Ca[1]
உடனடி அபாயம்
Ca [9 மி.கி/மீ3 (Cd) ஆக][1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

காட்மியம் ஐதரைடு (Cadmium hydride) என்பது (CdH2)n என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வேதியியல் முறைப்படி இச்சேர்மத்தை காட்மியம் டையைதரைடு என்று அழைக்கிறார்கள். இச்சேர்மத்தின் மூலக்கூற்று வாய்ப்பாடானது CdH2])n அல்லது CdH2 என்றும் எழுதப்படுகிறது. வெண்மை நிறத்தூளாக திண்மநிலையில் காணப்படும் இச்சேர்மம் நீரில் கரையாது. வெப்பநிலையியலில் இச்சேர்மம் நிலைத்தன்மையற்று காணப்படுகிறது.

பெயரிடல்[தொகு]

முறையான வேதிமுறைப் பெயரான காட்மியம் டையைதரைடு ஐயுபிஏசி முறையில் இதன் உட்கூறுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய மூலக்கூற்று சேர்மங்களான டையைட்ரிடோகாட்மியம் மற்றும் அதன் சில்படிமங்களை குறிப்பிட்டுச் சொல்லவும் காட்மியம் டையைதரைடு என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது. இரண்டு சேர்மங்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை உணர்ந்து இபெயரை கவனமுடன் பயன்படுத்த வேண்டும். CdH என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட சேர்மத்தைக் குறிப்பிடவும் காட்மியம் ஐதரைடு உட்கூறு அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஐயுபிஏசி பெயர் பயன்படுத்தப்படுகிறது.

வரலாறு[தொகு]

1950 ஆம் ஆண்டில் கிளென் டி.பார்பராசு தலைமையிலான ஆய்வுக்குழு முதன்முதலாக தொகுப்பு முறையில் காட்மியம் ஐதரைடை தயாரித்தது.

வேதிப்பண்புகள்[தொகு]

அகச்சிவப்பு நிறமாலையின் அடிப்படையில் திண்ம நிலை காட்மியம் ஐதரைடில் ஐதரசன் – பால பிணைப்புகள் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது[2]. மற்ற கீழ்நிலை உலோக ஐதரைடுகள் இதே முறையில் பலபடிகளாகின்றன. -20° செல்சியசு வெப்பநிலைக்கு கீழாக குளிர்விக்கப்பட்டால் காட்மியம் ஐதரைடு விரைவாக சிதைவடைந்து காட்மியமாகவும் ஐதரசனாகவும் மாறுகிறது: [3]

(CdH
2
)
n
n Cd + n H
2

டையைதரிடோகாட்மியம் போன்ற ஐதரிடோகாட்மியங்களிலுள்ள இரண்டு ஒருங்கிணைவு ஐதரிடோகாட்மியம் குழுக்கள் (-CdH) ஒரு எலக்ட்ரான் இணையை வழங்கும் ஈனியை ஒடுக்கம் மூலம் மூலக்கூறாக மாற்றுகின்றன.

[CdH
2
] + L → [CdH
2
L]

எலக்ட்ரான் இணையைப் வழங்கும் ஈனியை பெற்றுக் கொள்ளும் பண்பினால் டையைதரிடோகாட்மியம் ஒரு இலூயிக் அமிலமாக கருதப்படுகிறது. டெட்ராயைதரிடோகாட்மேட்டு (2−) எதிர்மின் அயனி (CdH2−4) போல ஈனிகளிலிருந்து டையைதரிடோகாட்மியம் இரண்டு எலக்ட்ரான் இணைகளை பெற்றுக் கொள்ள இயலும்[2]

சீசியம் ஐதரைடும் காட்மியம் உலோகத்தூளும் வினைபுரிவதால் தயாரிக்கப்படும் Cs3CdH5 சேர்மத்தில் சீசியம் நேர்மின் அயனிகளுடன் CdH42− அயனிகளும் ஐதரைடு H− அயனிகளும் காணப்படுகின்றன. நான்முக எதிர்மின் அயனி CdH2 ஒருங்கினைவுச் சேர்மத்திற்கு உதாரணமாகும். CdH42− அயனியில் Cd-H பிணைப்பின் சராசரி பிணைப்பு நீளம் 182 பைக்கோமீட்டர்களாகும். வாயுநிலை டையைதரிடோகாட்மியத்தில் மூலக்கூறுகள் வாண்டர் வால்சு விசையால் இணைந்து மும்மைகளாக உருவாகின்றன. இருமையுடைய பிரிகை என்தால்பி 8.8 கிலோயூல்மோல்−1 என மதிப்பிடப்படுகிறது.

டையைதரிடோகாட்மியம்[தொகு]

டையைதரிடோகாட்மியம் என்பது ஓருறுப்பாலான மூலக்கூற்று வடிவமாகும். இதன் வேதி வாய்ப்பாடு CdH2 ஆகும். [CdH2 என்ற முறையிலும் இது குறிப்பிடப்படுவதுண்டு. நிறமற்ற வாயுவான இது கிளர்வுற்ற காட்மியம் அணுக்கள் ஐயைதரசனுடன் வாயுநிலை வினையால் உருவாக்கப்படுகிறது. அகச்சிவப்பு உமிழ்வு நிறமாலையால் இதன் கட்டமைப்பு உறுதி செய்யப்படுகிறது. நேரியல் மூலக்கூறான இது 168.3 பைக்கோமீட்டர் பிணைப்பு நீளம் கொண்டுள்ளது[4].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0087". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. 2.0 2.1 Wang, Xuefeng; Andrews, Lester (December 2004). "Infrared Spectra of Zn and Cd Hydride Molecules and Solids". The Journal of Physical Chemistry A (ACS Publications) 108 (50): 11006–11013. doi:10.1021/jp046414m. 
  3. Barbaras, Glenn D.; Dillard, Clyde; Finholt, A. E.; Wartik, Thomas; Wilzbach, K. E.; Schlesinger, Hermann I. (October 1951). "The Preparation of the Hydrides of Zinc, Cadmium, Beryllium, Magnesium and Lithium by the Use of Lithium Aluminum Hydride". Journal of the American Chemical Society (ACS Publications) 73 (10): 4585–4590. doi:10.1021/ja01154a025. 
  4. Shayesteh, Alireza; Yu, Shanshan; Bernath, Peter F. (2005). "Gaseous HgH2, CdH2, and ZnH2". Chemistry: A European Journal 11 (16): 4709–4712. doi:10.1002/chem.200500332. பன்னாட்டுத் தர தொடர் எண்:0947-6539. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்மியம்_ஐதரைடு&oldid=2377958" இருந்து மீள்விக்கப்பட்டது