தைட்டானியம்(III) புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தைட்டானியம்(III)புரோமைடு
Titanium(III) bromide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டிரைபுரோமோதைட்டானியம்
வேறு பெயர்கள்
தைட்டானியம் முப்புரோமைடு
இனங்காட்டிகள்
13135-31-4
ChemSpider 120705 Y
InChI
  • InChI=1S/3BrH.Ti/h3*1H;/q;;;+3/p-3
    Key: MTAYDNKNMILFOK-UHFFFAOYSA-K
பப்கெம் 123104
பண்புகள்
TiBr3
வாய்ப்பாட்டு எடை 287.579 கி/மோல்
தோற்றம் நீலம்-கருப்பு கலந்த திண்மம்
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தைட்டானியம்(III) புரோமைடு (Titanium(III)bromide) என்பது TiBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும். சிவப்பு நிறத்தைப் பிரதிபலிக்கும் நீலக்கருப்பு அயக்காந்தத் திடப்பொருளாக இது காணப்படுகிறது. ஆல்க்கீன்களை பல்லுறுப்பிகளாக்கும் வினைக்கு வினையூக்கியாக இருந்தபோதிலும் இது மிகக்குறைவான பயன்பாட்டையே கொண்டுள்ளது.

தயாரிப்பு மற்றும் அமைப்பு[தொகு]

வளிமண்டல ஐதரசனுடன் தைட்டானியம் நாற்புரோமைடை சேர்த்து சூடாக்குவதால் தைட்டானியம்(III) புரோமைடு உற்பத்தியாகிறது:[3]

2 TiBr4 + H2 → 2 TiBr3 + 2 HBr

தைட்டானியம் உலோகமும் தைட்டானியம் நாற்புரோமைடும் இணைவீதமாதல் வினையின் மூலமாக இணைந்தும் இச்சேர்மம் உருவாகிறது[4]

Ti + 3 TiBr4 → 4 TiBr3

எண்முக தைட்டானிய உலோக மையங்கள் கொண்ட இரண்டு பல்லுருவ அமைப்புகள் இச்சேர்மத்தில் காணப்படுகின்றன[4]

வினைகள்[தொகு]

தைட்டானியம்(III) புரோமைடை சூடுபடுத்தினால் அது தைட்டானிய மிருபுரோமைடுடன் ஆவியாகும் தைட்டானியம் நாற் புரோமைடையும் தருகிறது:[3]

TiBr3 → 2 TiBr4 + TiBr2

பிரிடின் மற்றும் நைட்ரல் போன்ற வழங்கி கரைப்பான்கள் (L) உடன் வினைபுரிந்து 3:1 விகிதத்தில் கூட்டுப்பொருட்களைத் தருகிறது.

TiBr3 + 3 L → 2 TiBr3L3

மேற்கோள்கள்[தொகு]

  1. http://pubchem.ncbi.nlm.nih.gov/summary/summary.cgi?cid=136975
  2. http://www.webelements.com/compounds/titanium/titanium_tribromide.html
  3. 3.0 3.1 Sherfey, J. M. "Titanium(III) chloride and titanium(III) bromide" Inorganic Syntheses 1960, vol. 6, pp 57-61.
  4. 4.0 4.1 Troyanov, S. I.; Rybakov, V. B.; Ionov, V. M. "Preparation and crystal structure of titanium tetrabromide, titanium tribromide and titanium(2+) tetrabromoaluminate(1-)" Zhurnal Neorganicheskoi Khimii 1990, vol. 35, 882-7.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தைட்டானியம்(III)_புரோமைடு&oldid=2051926" இலிருந்து மீள்விக்கப்பட்டது