கோபால்ட்(II) புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபால்ட்(II) புரோமைடு
இனங்காட்டிகள்
7789-43-7 Y
ChemSpider 23012 Y
InChI
 • InChI=1S/2BrH.Co/h2*1H;/q;;+2/p-2 Y
  Key: BZRRQSJJPUGBAA-UHFFFAOYSA-L Y
 • InChI=1/2BrH.Co/h2*1H;/q;;+2/p-2
  Key: BZRRQSJJPUGBAA-NUQVWONBAJ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24610
வே.ந.வி.ப எண் GF9595000
 • [Co](Br)Br
பண்புகள்
CoBr2, CoBr2.6H2O, CoBr2.2H2O
வாய்ப்பாட்டு எடை 218.7412 கி/மோல் (நீரிலி)
326.74 கி/மோல் (அறுவைதரேட்டு)
தோற்றம் பிரகாசமான பச்சை படிகங்கள் (நீரிலி)
செம்பழுப்பு படிகங்கள் (அறுவைதரேட்டு)
அடர்த்தி 4.909 கி/செ.மீ3 (நீரிலி)
2.46 கி/செ.மீ3 (அறுவைதரேட்டு)
உருகுநிலை 678 °C (1,252 °F; 951 K) (நீரிலி)
47 °செ (அறுவைதரேட்டு)
நீரிலி:
66.7 கி/100மி.லி (59 °செ)
68.1 கி/100மி.லி (97 °செ)
அறுவைதரேட்டு:
113.2 கி/100மி.லி(20 °செ)
கரைதிறன் 77.1 கி/100 மி.லி (எத்தனால், 20 °செ)
58.6 கி/100 மி.லி (மெத்தனால், 30 °செ)
மெத்தில் அசிட்டேட்டு, ஈதர், ஆல்ககால், அசிட்டோன்ஆகியன்வற்றில் கரையும்
கட்டமைப்பு
படிக அமைப்பு சாய்சதுரம், hP3, SpaceGroup = P-3m1, No. 164
ஒருங்கிணைவு
வடிவியல்
எண்முகம்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Fisher Scientific
R-சொற்றொடர்கள் R36, R37, R38
S-சொற்றொடர்கள் S26, S37, S39, S45, S28A
தீப்பற்றும் வெப்பநிலை சுடர் விடாது
Lethal dose or concentration (LD, LC):
406 mg/kg (oral, rat)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் கோபால்ட்(II)புளோரைடு
கோபால்ட்(II) குளோரைடு
கோபால்ட்(II)ஐயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் இரும்பு(II)புரோமைடு
நிக்கல்(II)புரோமைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

கோபால்ட்(II) புரோமைடு (Cobalt(II) bromide) என்பது CoBr2 என்ற மூலக்கூறு வாய்ப்பாடுடன் கூடிய ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சிவப்புநிறத்தில் திண்மமாக காணப்படும் இச்சேர்மம் தண்ணீரில் கரைகிறது. சில செயல்முறைகளில் இது வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.

பண்புகள்[தொகு]

நீரற்ற கோபால்ட்(II) புரோமைடு பச்சைநிற படிகங்களாகக் காணப்படுகிறது. 100 பாகை செல்சியசு வெப்ப நிலையில் கோபால்ட்(II) புரோமைடின் அறுநீரிலியானது நான்கு நீர்ப்படிக மூலக்கூறுகளை இழந்து கோபால்ட் இருஐதரேட்டாக உருவாகிறது.

CoBr2.6H2O → CoBr2.2H2O + 4 H2O

மேலும் 130 பாகை செல்சியசு வெப்பநிலை வரை சூடாக்கும்போது நீரற்ற கோபால்ட்(II) புரோமைடு உற்பத்தியாகிறது.

CoBr2.2H2O → CoBr2 + 2 H2O

நீரற்ற கோபால்ட்(II) புரோமைடு 678 பாகை செல்சியசு வெப்பநிலையில் உருகுகிறது. உயர் வெப்பநிலைகளில் இச்சேர்மம் ஆக்சிசனுடன் வினை புரிந்து கோபால்ட்(II, III) ஆக்சைடு மற்றும் புரோமின் ஆவியாக உருவாகிறது[1][2].

தயாரிப்பு[தொகு]

கோபால்ட் ஐதராக்சைடுடன் ஐதரோபுரோமிக் அமிலத்தைச் சேர்த்து வினைப்படுத்துவதன் மூலம் நீரேறிய கோபால்ட்(II) புரோமைடைத் தயாரிக்க முடியும்.

Co(OH)2(s) + 2HBr(aq) → CoBr2.6H2O(aq)

தனிம கோபால்ட்டுடன் திரவ புரோமினை நேரடியாக வினைபுரியச் செய்து நீரற்ற கோபால்ட்(II) புரோமைடைத் தயாரிக்க முடியும்[3][4][5].

வினைகள் மற்றும் பயன்கள்[தொகு]

நீர்த்த அமோனியாவில் கோபால்ட்(II) புரோமைடின் கரைசலைச் சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்வதன் மூலம் மரபார்ந்த ஒருங்கிணைப்புச் சேர்மம் புரோமோபென்டமின் கோபால்ட்(III) புரோமைடு தயாரிக்க முடிகிறது[6].

2 CoBr2 + 8 NH3 + 2 NH4Br + H2O2 → 2 [Co(NH3)5Br]Br2 + 2 H2O

கோபால்ட்(II) புரோமைடின் முப்பீனைல்பொசுபீன் அணைவுச்சேர்மங்கள் கரிமத்தொகுப்பு வினைகளில் வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகின்றன,

முன்பாதுகாப்பு[தொகு]

கோபால்ட்(II) சேர்மங்களுடன் அதிக நேரம் இருக்க நேர்ந்தால் கோபால்ட் நச்சால் பாதிப்பு உண்டாக வாய்ப்புகள் உண்டு. புரோமைடுகளும் கூட சிறிதளவு நச்சுத்தன்மை கொண்டவை என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும்[7] Bromide is also mildly toxic.


மேற்கோள்கள்[தொகு]

 1. Cobalt Bromide Supplier & Tech Info American Elements
 2. WebElements Periodic Table of the Elements
 3. WebElements Periodic Table of the Elements | Cobalt | Essential information
 4. "Chemical Properties and Reaction Tendencies". Archived from the original on 2008-02-19. பார்க்கப்பட்ட நாள் 2015-07-19.
 5. "Pilgaard Solutions: Cobalt". Archived from the original on 2009-01-22. பார்க்கப்பட்ட நாள் 2015-07-19.
 6. Diehl, Harvey; Clark, Helen; Willard, H. H.; Bailar, John C. (1939). "Bromopentamminocobalti Bromide". Inorganic Syntheses. Inorganic Syntheses. Vol. 1. p. 186. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132326.ch66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-13232-6.
 7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2007-06-25. பார்க்கப்பட்ட நாள் 2015-07-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபால்ட்(II)_புரோமைடு&oldid=3946336" இலிருந்து மீள்விக்கப்பட்டது