பிரசியோடைமியம்(III) புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரசியோடைமியம்(III) புரோமைடு
Praseodymium(III) bromide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
முப்புரோமோபிரசியோடைமியம்
முறையான ஐயூபிஏசி பெயர்
பிரசியோடைமியம்(III) புரோமைடு
இனங்காட்டிகள்
13536-53-3
ChemSpider 75391
EC number 236-893-0236-893-0
InChI
  • InChI=1S/3BrH.Pr/h3*1H;/q;;;+3/p-3
    Key: PLKCYEBERAEWDR-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83561
SMILES
  • Br[Pr](Br)Br
பண்புகள்
PrBr3
வாய்ப்பாட்டு எடை 380.62 கி/மோல்
தோற்றம் பச்சை நிறப் படிகத் திண்மம்
அடர்த்தி 5.28 கி/செ.மீ3
உருகுநிலை 691 °C (1,276 °F; 964 K)[2] சில மூலங்கள் 693 °செல்சியசு என்கின்றனC[1]
கொதிநிலை 1,547 °C (2,817 °F; 1,820 K)[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு மூவுச்சி முக்கோணப் பட்டகம்
ஒருங்கிணைவு
வடிவியல்
9
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் எரிச்சலூட்டும்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H315, H319
P261, P280, P305+351+338
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பிரசியோடைமியம்(III) புரோமைடு (Praseodymium(III) bromide) PrBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். ஒரு பிரசியோடைமியம் அணுவும் மூன்று புரோமின் அணுக்களூம் சேர்ந்து இந்தப் படிக்ச்சேர்மம் உருவாகிறது.

பண்புகள்[தொகு]

தோற்றம்[தொகு]

பிரசியோடைமியம்(III) புரோமைடு அறை வெப்பநிலையில் ஒரு பச்சை நிற திண்மமாகக் காணப்படுகிறது.[2][1] பொதுவாக இச்சேர்மம் தூளாக கையாளப்படுகிறது.

இயற்பியல் பண்புகள்[தொகு]

பிரசியோடைமியம்(III) புரோமைடின் மூலக்கூறு எடை 380.62 கிராம் ஆகும்.[2][3][4][5] இதன் அடர்த்தி 5.28 கி/செ.மி2 என அளவிடப்பட்டுள்ளது.[6][5]

UCl3 சேர்மத்தின் படிக அமைப்பை பிரசியோடைமியம்(III) புரோமை ஏற்றுக்கொள்கிறது.[7] பிரசியோடைமியம் அயனிகள் 9-ஒருங்கிணைப்புகளுடன் முக்கோணப் பட்டக வடிவவியலைப் பின்பற்றுகின்றன. பிரசியோடைமியம்-புரோமின் பிணைப்புகளீன் பிணைப்பு நீளம் 3.05 Å மற்றும் 3.13 ஆக உள்ளன.[8] [9]

வேதிப் பண்புகள்[தொகு]

பிரசியோடைமியம்(III) புரோமைடு நீருறிஞ்சும் தன்மை கொண்ட சேர்மமாகும்.[4] சேர்மங்களில் 3 என்ற ஆக்சிசனேற்ற நிலை எண்ணில் பிரசியோடைமியம்(III) புரோமைடு வினையில் ஈடுபடுகிறது.[1]

தீங்குகள்[தொகு]

பிரசியோடைமியம்(III) புரோமைடு தோல் எரிச்சல் (H315/R38), கண் எரிச்சல் (H319/R36) ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. பிரசியோடைமியம்(III) புரோமைடு கலந்துள்ள காற்று, தூசி , புகை,வாயு, மூடுபனி போன்றவற்றை தவிர்த்தல் வேண்டும். இதைப் பயன்படுத்தும்போது கையுறைகளைப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்திய பின்னர் கைகளை நன்கு கழுவி தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும். கண்களில் பட நேர்ந்தால் கண்களை பலமுறை கழுவ வேண்டும்.[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Winter, Mark. "Praseodymium»praseodymium tribromide [WebElements Periodic Table]". www.webelements.com. பார்க்கப்பட்ட நாள் 20 December 2016.
  2. 2.0 2.1 2.2 Elements, American. "Praseodymium Bromide". American Elements. பார்க்கப்பட்ட நாள் 20 December 2016.
  3. "Praseodymium bromide Br3Pr - PubChem". pubchem.ncbi.nlm.nih.gov. பார்க்கப்பட்ட நாள் 20 December 2016.
  4. 4.0 4.1 Chambers, Michael. "ChemIDplus - 0013536533 - PLKCYEBERAEWDR-UHFFFAOYSA-K - Praseodymium bromide (PrBr3) - Similar structures search, synonyms, formulas, resource links, and other chemical information". chem.nlm.nih.gov. பார்க்கப்பட்ட நாள் 20 December 2016.
  5. 5.0 5.1 Phillips, edited by Dale L. Perry, Sidney L. (1995). Handbook of inorganic compounds. Boca Raton: CRC Press. பக். 323. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780849386718. https://archive.org/details/handbookofinorga0000unse. 
  6. "Information on praseodymium bromide: Etacude.com". chemicals.etacude.com. பார்க்கப்பட்ட நாள் 20 December 2016.
  7. Wells, A. F. (1984). Structural Inorganic Chemistry (5th ). Oxford University Press. பக். 421. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-965763-6. https://archive.org/details/structuralinorga0000well_m8i1. 
  8. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth–Heinemann. பக். 1240–1241. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
  9. Schmid, B.; Hälg, B.; Furrer, A. (1987). "Structure and crystal fields of PrBr3 and PrCl3: A neutron study". J. Appl. Phys. 61: 3426–3428. doi:10.1063/1.338741. 
  10. "Praseodymium Bromide | ProChem, Inc". prochemonline.com. பார்க்கப்பட்ட நாள் 20 December 2016.