உள்ளடக்கத்துக்குச் செல்

கோபால்ட்(II) ஐதராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபால்ட்(II) ஐதராக்சைடு

கோபால்ட்(II) ஐதராக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கோபால்ட்(II) ஐதராக்சைடு
வேறு பெயர்கள்
கோபால்ட்டசு ஐதராக்சைடு, கோபால்ட் ஐதராக்சைடு, β-கோபால்ட்(II) ஐதராக்சைடு
இனங்காட்டிகள்
21041-93-0 Y
ChemSpider 8305419 Y
InChI
 • InChI=1S/Co.2H2O/h;2*1H2/q+2;;/p-2 Y
  Key: ASKVAEGIVYSGNY-UHFFFAOYSA-L Y
 • InChI=1/Co.2H2O/h;2*1H2/q+2;;/p-2
  Key: ASKVAEGIVYSGNY-NUQVWONBAS
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10129900
 • [Co+2].[OH-].[OH-]
பண்புகள்
Co(OH)2
வாய்ப்பாட்டு எடை 92.948 கி/மோல்
தோற்றம் ரோசா சிவப்பு தூள் அல்லது நீலப் பச்சை தூள்
அடர்த்தி 3.597 கி/செ.மீ3
உருகுநிலை 168 °C (334 °F; 441 K) (சிதைவடையும்)[1]
3.20 மி.கி/லி
1.0×10-15
கரைதிறன் அமிலங்களில், அமோனியாவில் கரையும்; நீர்த்த காரங்களில் கரையாது.
கட்டமைப்பு
ஒருங்கிணைவு
வடிவியல்
சாய்சதுரம்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-539.7 கியூ•மோல்−1
நியம மோலார்
எந்திரோப்பி So298
79.0 யூல்•மோல்−1•K−1[1]
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Oxford University
ஈயூ வகைப்பாடு ஊறு விளைவிக்கும் Xn
R-சொற்றொடர்கள் R20 R21 R22 R36 R37 R38 R43
S-சொற்றொடர்கள் S24 S26 S36 S37 S39[2]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் கோபால்ட்(II) குளோரைடு
கோபால்ட்(II) புரோமைடு
கோபால்ட்(II) அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் இரும்பு(II) ஐதராக்சைடு
நிக்கல்(II) ஐதராக்சைடு
தாமிர(II) ஐதராக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

கோபால்ட்(II) ஐதராக்சைடு (Cobalt(II) hydroxide) என்பது Co(OH)2.என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இதை கோபால்ட்டசு ஐதராக்சைடு என்ற பெயராலும் அழைக்கிறார்கள். ரோசா சிவப்பு நிறத் தூளாக இது காணப்படுகிறது. α-Co(OH)2, என்ற வாய்ப்பாட்டுடன் கூடிய நீல நிற நிலைப்புத்தன்மையற்ற வடிவமும் அறியப்படுகிறது [3]. மிளிரிகள், மைகள், சாயங்களில் உலர்த்தும் முகவராக கோபால்ட்(II) ஐதராக்சைடு பயன்படுத்தப்படுகிறது. பிற கோபால்ட் சேர்மங்கள் தயாரித்தலிலும், மின்கல அடுக்கு மின்முனைகளை பேரளவில் தயாரிக்கும்போது ஒரு வினையூக்கியாகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள்.

தயரிப்பும் வினைகளும்[தொகு]

கார உலோக ஐதராக்சைடுடன் நீரிய Co2+ உப்புக் கரைசலைச் சேர்க்கும்போது கோபால்ட்(II) ஐதராக்சைடு திண்மமாக வீழ்படிவாகிறது :[4]

Co2+ + 2 NaOH → Co(OH)2 + 2 Na+.

கோபால்ட்(II) ஐதராக்சைடு 168 ° செல்சியசு வெப்பநிலையில் வெற்றிடத்தில் சூடுபடுத்தும்போது கோபால்ட்(II) ஆக்சைடாக சிதைவடைகிறது. காற்றில் ஆக்சிசனேற்றமும் அடைகிறது. 300 ° செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சிதைவடையும்போது Co3O4 உருவாகிறது [5][6]. இரும்பு(II) ஐதராக்சைடு போலவே கோபால்ட்(II) ஐதராக்சைடும் ஓர் அடிப்படை ஐதராக்சைடாகும். இது அமில நீரிய கரைசல்களில் [Co(H2O)6]2+ என்ற அணைவுச் சேர்மமாக உருவாகிறது. வலிமையான காரங்களில் கூடுதல் ஐதராக்சைடு அயனிகளைக் ஏற்றுக் கொண்டு [Co(OH)4]2− மற்றும் [Co(OH)6]4−போன்ற அடர் நீல கோபால்டேட்டு(II) அணைவுகளாக உருவாகிறது.

கட்டமைப்பு[தொகு]

புருசைட்டு படிகக் கட்டமைப்பில் கோபால்ட்(II) ஐதராக்சைடு படிகமாகிறது. இதன்படி, எதிர்மின் அயனிகளும், நேர்மின் அயனிகளும் காட்மியம் அயோடைடில் உள்ளது போல பொதிந்துள்ளன. அதில் காட்மியம் எண்முக மூலக்கூற்று வடிவியலை ஏற்றுள்ளது [7]. முன்னதாகக் கூறப்பட்ட α-Co(OH)2 சேர்மம் β-Co(OH)2 சேர்மத்துடன் கிட்டத்தட்ட நெருங்கிய தொடர்பைக் கொண்டது ஆகும். ஆனால் இது ஐதரோடால்சைடு கட்டமைப்பை ஏற்கிறது. இக்கட்டமைப்பின்படி எதிர்மின் அயனிகள் உள்ளடுக்குகளில் காணப்படுகின்றன. எனவே இதை ஒரு பல்லுறுத் தோற்றமாக கருதமுடியாது. β-Co(OH)2 சேர்மத்திற்கு α-Co(OH)2 சேர்மம் ஒரு முன்னோடிச் சேர்மம் எனலாம் [8]

கோபால்ட் ஐதராக்சைடு நுண்குழாய்கள்: (a,b) 500 நானோமீட்டர், உள்படம் 200  நானோமீட்டர்; (c,e) 50  நானோமீட்டர்; (d) 100 நானோமீட்டர்.[9]

.

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 Lide, David R. (1998). Handbook of Chemistry and Physics (87 ed.). Boca Raton, FL: CRC Press. p. 513. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2.
 2. "Safety (MSDS) data for cobalt (II) hydroxide". Oxford University. Archived from the original on 2009-03-09. பார்க்கப்பட்ட நாள் 2009-03-27.
 3. Lide, David R. (1998). Handbook of Chemistry and Physics (87 ed.). Boca Raton, FL: CRC Press. p. 454. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2.
 4. O. Glemser "Cobalt(II) Hydroxide" in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 1. p. 1521.
 5. Jayashree, R. S.; Kamath, P. Vishnu (1999). "Electrochemical synthesis of a-cobalt hydroxide". Journal of Materials Chemistry 9 (4): 961–963. doi:10.1039/A807000H. 
 6. Xu, Z. P.; Zeng, H. C. (1998). "Thermal evolution of cobalt hydroxides: a comparative study of their various structural phases". Journal of Materials Chemistry 8 (11): 2499–2506. doi:10.1039/A804767G. 
 7. Wiberg, Nils; Wiberg, Egon; Holleman, A. F. (2001). Inorganic Chemistry. Academic Press. pp. 1478–1479. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5. பார்க்கப்பட்ட நாள் 2009-03-27.
 8. Liu, Zhaoping; Ma, Renzhi; Osada, Minoru; Takada, Kazunori; Sasaki, Takayoshi (2005). "Selective and Controlled Synthesis of α- and β-Cobalt Hydroxides in Highly Developed Hexagonal Platelets". Journal of the American Chemical Society 127: 13869–13874. doi:10.1021/ja0523338. 
 9. Ni, Bing; Liu, Huiling; Wang, Peng-Peng; He, Jie; Wang, Xun (2015). "General synthesis of inorganic single-walled nanotubes". Nature Communications 6: 8756. doi:10.1038/ncomms9756. பப்மெட்:26510862. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபால்ட்(II)_ஐதராக்சைடு&oldid=3946345" இலிருந்து மீள்விக்கப்பட்டது