நிக்கல்(II) ஐதராக்சைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
நிக்கல்(II) ஐதராக்சைடு
| |
வேறு பெயர்கள்
நிக்கல் ஐதராக்சைடு, தியோபிராசைட்டு
| |
இனங்காட்டிகள் | |
12054-48-7 36897-37-7 (ஒற்றை நீரேற்று) | |
ChemSpider | 55452 |
EC number | 235-008-5 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 61534 |
வே.ந.வி.ப எண் | QR648000 |
| |
UNII | L8UW92NW6J |
பண்புகள் | |
Ni(OH)2 | |
வாய்ப்பாட்டு எடை | 92.724 கி/மோல் (நீரிலி) 110.72 கி/மோள் (ஒற்றை நீரேற்று) |
தோற்றம் | பச்சை நிறப் படிகங்கள் |
அடர்த்தி | 4.10 கி/செ.மீ3 |
உருகுநிலை | 230 °C (446 °F; 503 K) (நீரிலி, சிதைவடையும்) |
0.0015 கி/லி[1] | |
கரைதிறன் பெருக்கம் (Ksp)
|
5.48×10−16[2] |
+4500.0·10−6 செ.மீ3/மோல் | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | அறுகோணம், hP3 |
புறவெளித் தொகுதி | P3m1, No. 164 |
Lattice constant | a = 0.3117 நானோமீட்டர், b = 0.3117 நானோமீட்டர், c = 0.4595 நானோமீட்டர் |
படிகக்கூடு மாறிலி
|
|
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−538 கிலோயூல்·மோல்−1[3] |
நியம மோலார் எந்திரோப்பி S |
79 யூல்·மோல்−1·K−1[3] |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External SDS |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H302, H332, H315, H334, H317, H341, H350, H360, H372 | |
P260, P284, P201, P280, P405, P501 | |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
1515 மி.கி/கி.கி (வாய்வழி, எலி) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
நிக்கல்(II) ஐதராக்சைடு (Nickel(II) hydroxide) என்பது Ni(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். எலுமிச்சை-பச்சை நிறத்தில் ஒரு திண்மப் பொருளாகக் காணப்படுகிறது. அம்மோனியா மற்றும் அமீன்களில் சிதைவுடன் கரைகிறது. அமிலங்களால் தாக்கப்படுகிறது. மின் உணரியான இச்சேர்மம் , இதனால் Ni(III) ஆக்சி-ஐதராக்சைடாக மாற்றப்படுகிறது. இப்பண்பு மறுமின்னூட்ட மின்கலன்களில் பரவலான பயன்பாடுகளுக்கு வழிவகுக்கிறது.[5]
பண்புகள்
[தொகு]நிக்கல்(II) ஐதராக்சைடு சேர்மம் α மற்றும் β ஆகிய இரண்டு நன்கு வகைப்படுத்தப்பட்ட பல்லுருவங்களைக் கொண்டுள்ளது. α அமைப்பு Ni(OH)2 அடுக்குகளை ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்ட அயனிகள் அல்லது தண்ணீருடன் கொண்டுள்ளது.[6][7] β வடிவம் Ni2+ மற்றும் OH− அயனிகளின் ஓர் அறுகோண நெருக்கப் பொதிவு கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது.[6][7] நீரின் முன்னிலையில், α வடிவ நிக்கல்(II) ஐதராக்சைடு பொதுவாக β வடிவத்திற்கு மறுபடிகமாகிறது.[6][8] α மற்றும் β வடிவங்களுக்குக் கூடுதலாக, பல γ நிக்கல் ஐதராக்சைடுகள் விவரிக்கப்பட்டுள்ளன. இவை மிகவும் பெரிய இடை-தாள் தூரங்களைக் கொண்ட படிக அமைப்புகளால் வேறுபடுகின்றன.[6]
Ni(OH)2சேர்மத்தின் கனிம வடிவம், தியோபிராசைட்டு 1980 ஆம் ஆண்டில் வடக்கு கிரேக்கத்தின் வெர்மியன் பகுதியில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. ஐடோகிரேசு அல்லது குளோரைட்டு படிகங்களின் எல்லைகளுக்கு அருகில் மெல்லிய தாள்களாக உருவாகி ஒளி ஊடுருவக்கூடிய மரகத-பச்சை படிகமாக இயற்கையாகவே இது காணப்படுகிறது.[9] இக்கனிமத்தின் நிக்கல்-மக்னீசியம் மாறுபாடான (Ni,Mg)(OH)2 கனிமத்தை இசுக்காட்லாந்தில் உள்ள ஒரு தீவில் முன்னதாக கண்டுபிடிக்கப்பட்டது.[10]
வினைகள்
[தொகு]நிக்கல்(II) ஐதராக்சைடு மின்சார கார் மின்கலன்களில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக Ni(OH)2 பெரும்பாலும் ஓர் உலோக ஐதரைடுடனும் ஒரு குறைப்பு வினையுடனும் இணைந்து, நிக்கல் ஆக்சி ஐதராக்சைடாக (NiOOH) ஆக ஆக்சிசனேற்றம் அடைகிறது.[11][12]
வினை 1
- Ni(OH)2 + OH(–) → NiO(OH) + H2O + e(−)
வினை 2
- M + H2O + e(−) → MH + OH(−)
ஒட்டு மொத்த வினை (H2O) இல்
- Ni(OH)2 + M → NiOOH + MH
இரண்டு நிக்கல்(II) ஐதராக்சைடு பல்லுருவ வடிவங்களில் α-Ni(OH)2 அதிக கோட்பாட்டுத் திறனைக் கொண்டுள்ளது, எனவே பொதுவாக மின்வேதியியல் பயன்பாடுகளில் விரும்பத்தக்கதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இது காரக் கரைசல்களில் β-Ni(OH)2 வடிவத்திற்கு மாறுகிறது. இது தொழில்துறை பயன்பாடுகளுக்கு நிலைப்படுத்தப்பட்ட α-Ni(OH)2 மின்முனைகளின் சாத்தியக்கூறுகள் பற்றிய பல ஆய்வுகளுக்கு வழிவகுக்கிறது.[8]
தயாரிப்பு
[தொகு]பொட்டாசியம் ஐதராக்சைடுடன் நிக்கல்(II) உப்புகளின் நீரிய கரைசலைச் சேர்த்து சூடுபடுத்தினால் நிக்கல்(II) ஐதராக்சைடு உருவாகும்.[13]
நச்சுத்தன்மை
[தொகு]Ni2+ அயனியை உள்ளிழுக்க நேர்ந்தால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. இச்சேர்மத்தின் நச்சுத்தன்மை மற்றும் தொடர்புடைய பாதுகாப்புக் கவலைகள், கால்சியம் அல்லது கோபால்ட்டு ஐதராக்சைடுகள் போன்ற ஐதராக்சைடுகளை உடன் சேர்த்து Ni(OH)2 மின்முனைகளின் ஆற்றல் அடர்த்தியை அதிகரிப்பதற்கான ஆராய்ச்சியை உந்தியுள்ளது.[5]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ CRC Handbook of Chemistry and Physics (84 ed.). CRC press. 2003. pp. 4–71. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0849304849.
- ↑ John Rumble (June 18, 2018). CRC Handbook of Chemistry and Physics (in English) (99 ed.). CRC Press. pp. 5–189. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1138561632.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ 3.0 3.1 Zumdahl, Steven S. (2009). Chemical Principles (6 ed.). Houghton Mifflin Company. p. A22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-618-94690-7.
- ↑ "Nickel Hydroxide". American Elements. பார்க்கப்பட்ட நாள் 2018-08-30.
- ↑ 5.0 5.1 Chen, J.; Bradhurst, D.H.; Dou, S.X.; Liu, H.K. (1999). "Nickel Hydroxide as an Active Material for the Positive Electrode in Rechargeable Alkaline Batteries". Journal of the Electrochemical Society 146 (10): 3606–3612. doi:10.1149/1.1392522. Bibcode: 1999JElS..146.3606C. https://ro.uow.edu.au/cgi/viewcontent.cgi?article=1118&context=engpapers.
- ↑ 6.0 6.1 6.2 6.3 Oliva, P.; Leonardi, J.; Laurent, J.F. (1982). "Review of the structure and the electrochemistry of nickel hydroxides and oxy-hydroxides". Journal of Power Sources 8 (2): 229–255. doi:10.1016/0378-7753(82)80057-8. Bibcode: 1982JPS.....8..229O.
- ↑ 7.0 7.1 Jeevanandam, P.; Koltypin, Y.; Gedanken, A. (2001). "Synthesis of Nanosized α-Nickel Hydroxide by a Sonochemical Method". Nano Letters 1 (5): 263–266. doi:10.1021/nl010003p. Bibcode: 2001NanoL...1..263J.
- ↑ 8.0 8.1 Shukla, A.K.; Kumar, V.G.; Munichandriah, N. (1994). "Stabilized α-Ni(OH)2 as Electrode Material for Alkaline Secondary Cells". Journal of the Electrochemical Society 141 (11): 2956–2959. doi:10.1149/1.2059264. Bibcode: 1994JElS..141.2956V. https://archive.org/details/sim_journal-of-the-electrochemical-society_1994-11_141_11/page/2956.
- ↑ Marcopoulos, T.; Economou, M. (1980). "Theophrastite, Ni(OH)2, a new mineral from northern Greece". American Mineralogist 66: 1020–1021. http://www.minsocam.org/ammin/AM66/AM66_1020.pdf.
- ↑ Livingston, A.; Bish, D. L. (1982). "On the new mineral theophrastite, a nickel hydroxide, from Unst, Shetland, Scotland". Mineralogical Magazine 46 (338): 1. doi:10.1180/minmag.1982.046.338.01. Bibcode: 1982MinM...46....1L. http://www.minersoc.org/pages/Archive-MM/Volume_46/46-338-1.pdf. பார்த்த நாள்: 2024-04-16.
- ↑ Ovshinsky, S.R.; Fetcenko, M.A.; Ross, J. (1993). "A nickel metal hydride battery for electric vehicles". Science 260 (5105): 176–181. doi:10.1126/science.260.5105.176. பப்மெட்:17807176. Bibcode: 1993Sci...260..176O.
- ↑ Young, Kwo (2016). Nickel Metal Hydride Batteries (in ஆங்கிலம்). MDPI. எண்ணிம ஆவணச் சுட்டி:10.3390/books978-3-03842-303-4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-03842-303-4.
- ↑ Glemser, O. (1963) "Nickel(II) Hydroxide" in ""Handbook of Preparative Inorganic Chemistry, 2nd ed. G. Brauer (ed.), Academic Press, NY. Vol. 1. p. 1549.