புரோமின் ஐம்புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புரோமின் பென்டாபுளோரைடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
புரோமின் ஐம்புளோரைடு
Bromine pentafluoride
Structure and dimensions of the bromine pentafluoride molecule in the gas phase
Ball-and-stick model of bromine pentafluoride
Space-filling model of bromine pentafluoride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
புரோமின் பென்டாபுளோரைடு
இனங்காட்டிகள்
7789-30-2 Yes check.svgY
ChemSpider 23008 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24606
வே.ந.வி.ப எண் EF9350000
பண்புகள்
BrF5
வாய்ப்பாட்டு எடை 174.894 கி.மோல்−1
தோற்றம் வெளிர் மஞ்சள் நீர்மம்
அடர்த்தி 2.466 கி/செ.மீ3
உருகுநிலை
கொதிநிலை 40.25 °C (104.45 °F; 313.40 K)
வினைபுரியும்
கட்டமைப்பு
மூலக்கூறு வடிவம்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் தண்ணீருடன் தீவிரமாக வினைபுரிகிறது, வலிமையான ஆக்சிசனேற்றி[1]
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாது.
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
none[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 0.1 ppm (0.7 மி.கி/மீ3)[1]
உடனடி அபாயம்
N.D.[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் புரோமின் ஒருகுளோரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் குளோரின் ஐம்புளோரைடு
அயோடின் ஐம்புளோரைடு
சேர்மங்கள்
தொடர்புடையவை
புரோமின் ஒருபுளோரைடு
புரோமின் முப்புளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

புரோமின் பென்டாபுளோரைடு (Bromine pentafluoride)என்பது BrF5, என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் உள்ள ஒரு வேதிச் சேர்மமாகும். புரோமின் ஐம்புளோரைடு என்றழைக்கப்படும் இது புளோரின் மற்றும் புரோமின் தனிமங்கள் சேர்ந்து உருவாகும் புரோமினுடைய புளோரைடு ஆகும். இச்சேர்மம் வலுவான புளோரினேற்றம் செய்யும் செயலியாகும்.

ஆக்சிசன் ஒரிடத்தனிம ஆய்வுகளில் இச்சேர்மம் பயனாகிறது. தொடர் ஆய்வுகளுக்குத் தேவையான ஆக்சிசனை , புரோமின் பென்டாபுளோரைடு முன்னிலையில் சீரொளியிழந்த திடநிலை சிலிக்கேட்டுகள் வெளியிடுகின்றன[2]. இராக்கெட்டுகளின் திரவ உந்துபொருள்களில் ஆக்சிசனேற்றியாகவும் இது சோதிக்கப்பட்டது. யுரேனியம் தயாரித்தல் செயல்முறையில் புளோரினேற்றம் செய்யும் செயலியாக இது உபயோகமாகிறது.

தயாரிப்பு[தொகு]

முதன்முதலாக 1931 ஆம் ஆண்டில் புரோமின் மற்றும் புளோரின் இரண்டும் நேரடியாக வினைபுரிவதன் மூலம் புரோமின் ஐம்புளோரைடு தயாரிக்கப்பட்டது. இம்முறையின் அடிப்படையில் 150 பாகை செல்சியசு வெப்பநிலையில் கூடுதலான புளோரினைப் பயன்படுத்தி பெருமளவில் இச்சேர்மத்தைத் தயாரிப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள்.

Br2 + 5 F2 → 2 BrF5

சிறிய அளவுத் தேவைகளுக்காகத் தயாரிக்க முற்படும்போது பொட்டாசியம் புரோமைடைப் பயன்படுத்துகிறார்கள்.

KBr + 3 F2 → KF + BrF5

இந்த வழிமுறையில் தயாரிக்கப்படும் புரோமின் பென்டாபுளோரைடு முற்றிலும் முப்புளோரைடுகள் மற்றும் இதர மாசுக்கள் யாவும் நீக்கப்பட்டத் தூய்மையான சேர்மமாகக் காணப்படுகிறது.

வினைகள்[தொகு]

புரோமின் ஐம்புளோரைடு தண்ணீருடன் வெடிக்குமியல்புடன் வினைபுரிகிறது. ஆனால் அசிட்டோ நைட்ரைலுடன் சேர்ந்த நீர்த்தக் கரைசலில் இவ்வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது. புரோமிக் அமிலம் மற்றும் ஐதரோபுளோரிக் அமிலம் போன்ற எளிய நீராற்பகுப்பு பொருட்கள் உருவாகின்றன:[3]

BrF5 + 3 H2O → HBrO3 + 5 HF

மிகச்சிறந்த புளோரினேற்றியாக செயல்படும் இச்சேர்மம் பெரும்பாலான யுரேனியம் சேர்மங்களை அறைவெப்பநிலையில் அறுபுளோரைடுகளாக மாற்றுகிறது.

தீங்குகள்[தொகு]

தோலின் மீது பட்டால் புரோமின் ஐம்புளோரைடு கடுமையான அரிப்புத்தன்மையை ஏற்படுத்துகிறது. மற்றும் இதனுடைய ஆவி கண்களில், சளிச்சவ்வுகளில் படநேர்ந்தால் எரிச்சலை உண்டாக்குகிறது. மில்லியனுக்கு நூறு பங்களவு புரோமின் ஐம்புளோரைடை பெரும்பாலான சோதனை விலங்குகளுக்கு சிலநிமிடங்கள் காட்சிப்படுத்தியதில் அவற்றைக் கொல்லும் அளவுக்கு போதுமானதாக அதுவிருந்தது. நீடித்த தொடர்பில் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்புகள் உண்டாகின்றன[4].

கரிமப் பொருட்கள் அல்லது தூளாக உள்ள உலோகங்களுடன் தொடர்பு கொள்ள நேரிட்டால் இது தன்னிச்சையாகப் வெடிக்கவோ அல்லது தீப்பிடிக்கவோ வாய்ப்புகள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0065". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. எஆசு:10.1016/0016-7037(63)90071-1
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  3. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth–Heinemann. பக். 834. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
  4. Patnaik, Pradyot (2007). A comprehensive guide to the hazardous properties of chemical substances (3rd ). Wiley-Interscience. பக். 480. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-471-71458-5. 

வெளி இணைப்புகள்[தொகு]