பேரியம் குளோரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பேரியம் குளோரேட்டு
Barium chlorate.svg
Bariumchloratepowder.jpg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பேரியம் டைகுளோரேட்டு
வேறு பெயர்கள்
குளோரிக் அமிலத்தின் பேரியம் உப்பு
இனங்காட்டிகள்
13477-00-4 Yes check.svgY
ChemSpider 24273 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 26059
வே.ந.வி.ப எண் FN9770000
பண்புகள்
Ba(ClO3)2
வாய்ப்பாட்டு எடை 304.23 கி/மோல்
தோற்றம் வெண்மையான திண்மம்
அடர்த்தி 3.18 கி/செ.மீ3, திண்மம்
உருகுநிலை
27.5 கி/100 மி.லி (20 °செ)
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Barium Chlorate MSDS
ஈயூ வகைப்பாடு ஆக்சிசனேற்றி (O)
தீங்கானது (Xn)
R-சொற்றொடர்கள் R9, R20/22
S-சொற்றொடர்கள் S13, S27
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

பேரியம் குளோரேட்டு (Barium chlorate) Ba(ClO3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமச் சேர்மம் ஆகும். வெண்மை நிறத்தில் இருக்கும் இச்சேர்மமானது குளோரிக் அமிலத்தினுடைய பேரியம் உப்பாகும். கரையும் தன்மை கொண்ட அனைத்து பேரியம் உப்புகளையும் போல இச்சேர்மமும் நச்சுத்தன்மையும் உறுத்தலையும் அளிக்கிறது. சில சமயங்களில் பச்சை நிற ஒளியை தருவதற்காகப் பட்டாசுத் தொழிலிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் குளோரிக் அமிலத் தயாரிப்பில் பெரும் பங்கும் வகிக்கிறது.

தயாரிப்பு[தொகு]

பேரியம் குளோரைடு கரைசல் மற்றும் சோடியம் குளோரேட்டு கரைசல் ஆகிய கரைசல்கள் இரட்டை இடப்பெயர்ச்சி வினையின் மூலமாக பேரியம் குளோரேட்டை உருவாக்குகின்றன.

BaCl2 + 2 NaClO3 → Ba(ClO3)2 + 2 NaCl

வினையில் உருவாகும் கலவையை அடர்வூட்டல் மற்றும் குளிர்வூட்டலுக்கு உட்படுத்துவதால் பேரியம் குளோரேட்டு வீழ்படிவாகிறது. சோடியம் குளோரேட்டை விட பேரியம் குளோரேட்டு குறைவான கரைதிறன் கொண்டது என்பதை அறிய உதவும் இவ்வினையே பேரியம் குளோரேட்டு தயாரிக்கும் பொதுவான முறையாகும்.

இம்முறையில் தயாரிக்கப்படும் பேரியம் குளோரேட்டில் சிறிதளவு சோடியம் மாசாக கலந்திருக்க வாய்ப்பு உண்டு. இம்மாசு பட்டாசுத் தொழிலில் விரும்பத்தகாத ஒரு மாசாகும். சோடியத்தின் அடர் மஞ்சள் நிறம் பேரியத்தின் பச்சை நிறத்தை மங்கலாக்கி விடுகிறது. எனவே சோடியம் கலக்காத பேரியம் குளோரேட்டை நேரடியாக மின்னாற்பகுப்பு முறையில் தயாரிக்கிறார்கள்.

BaCl2 + 6 H2O → Ba(ClO3)2 + 6 H2

பேரியம் கார்பனேட்டுடன் அமோனியம் குளோரேட்டுக் கரைசலைச் சேர்த்து கொதிக்க வைப்பதாலும் பேரியம் குளோரேட்டு தயாரிக்க முடியும்:[1]

2 NH4ClO3 + BaCO3 + Q → Ba(ClO3)2 + 2 NH3 + H2O + CO2

வினையில் முதலில் பேரியம் குளோரேட்டும் அமோனியம் கார்பனேட்டும் உருவாகின்றன. கலவையைக் கொதிக்க வைப்பதால் அமோனியம் கார்பனேட்டு சிதைவடைந்து அமோனியா மற்றும் கார்பன் டைஆக்சைடாக வெளியேறுகிறது. தூய்மையான பேரியம் குளோரேட்டு கரைசல் கிடைக்கிறது.

பேரியம் குளோரேட்டு மற்றும் பேரியம் நைட்ரேட்டுகள் தருகின்ற பச்சைநிற ஒளி.

சிதைவடைதல்[தொகு]

வெப்பத்தில் காட்டப்பட்டால் பேரியம் குளோரேட்டு, பேரியம் குளோரைடு மற்றும் ஆக்சிசனாகச் சிதைவடைகிறது.

Ba(ClO3)2 → BaCl2 + 3O2

குளோரிக் அமிலம்[தொகு]

அனைத்து குளோரேட்டு உப்புகளையும் தயாரிப்பதற்கு முன்னோடியான குளோரிக் அமிலம் தயாரிப்பதற்கு பேரியம் குளோரேட்டு பயன்படுகிறது. பேரியம் குளோரேட்டுடன் நீர்த்த கந்தக அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் குளோரிக் அமிலம் உருவாகிறது. கரையாத பேரியம் சல்பேட்டு வீழ்படிவாக அடியில் தங்குகிறது.

Ba(ClO3)2 + H2SO4 → 2HClO3 + BaSO4

குளோரேட்டு மற்றும் குளோரிக் அமிலம் இரண்டுமே நீர்த்த நிலையிலேயே தயாரிக்கப்படுகின்றன. 30 சதவீதத்திற்கு மேற்பட்ட அடர்த்தியைக் கொண்ட குளோரிக் அமிலம் நிலைப்புத்தன்மை அற்றதாக உள்ளது. சிலசமயங்களில் வெடித்தலுடன் சிதைவடைதலும் உண்டு.

பயன்கள்[தொகு]

ஒரு எரிபொருளுடன் சேர்ந்து எரியும் பொழுது பேரியம் குளோரேட்டு அதிர்வுகளுடனான பச்சைநிற ஒளியைத் தருகிறது. ஏனெனில் இதுவொரு வலிமையான ஆக்சிசனேற்றி, குளோரின் வழங்கி மற்றும் ஒரு உலோகத்தையும் கொண்டிருக்கிறது.

குளோரேட்டுகள் எளிதாகச் சிதைவடைந்து கந்தகம், அமோனியம் மற்றும் அமிலங்களைத் தருவதால், பட்டாசுத் தொழிலில் இதைப் பயன்படுத்துவது அமெரிக்காவில் தடை செய்யப்ப்பட்டுள்ளது. நிலைப்புத்தன்மை கொண்ட பேரியம் நைட்ரேட்டு மற்றும் பேரியம் கார்பனேட்டு போன்ற சேர்மங்கள் அங்கு பயன்படுகின்றன[2]

சுற்றுச்சூழல் தீங்கு[தொகு]

மனிதர்களுக்கு நச்சுத்தன்மையானது என்பதோடு மட்டுமின்றி பேரியம் குளோரேட்டு சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கிறது. தண்ணீரில் இச்சேர்மம் கலக்க நேர்ந்தால் நீர்வாழ் உயிரினங்களைப் பெரிதும் பாதிக்கிறது. பேரியம் குளோரேட்டு சிதறல் சூழல் மண்டலத்தை ஒட்டு மொத்தமாக பாதிக்கும் என்பதால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் இதனை அபாயகரமான வேதிப்பொருட்கள் என வகைப்படுத்துகின்றன.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Perigrin, Tom. "Barium Chlorate". GeoCities. 2007-10-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-02-22 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=live (உதவி)
  2. Wilson, Elizabeth. "C&EN: SCIENCE & TECHNOLOGY - WHAT'S THAT STUFF? FIREWORKS." WHAT'S THAT STUFF? FIREWORKS. Chemical and Engineering News, 2 July 2001. Web. 28 Jan. 2013.
  3. http://www.inchem.org/documents/icsc/icsc/eics0613.htm
  4. http://nj.gov/health/eoh/rtkweb/documents/fs/0183.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரியம்_குளோரேட்டு&oldid=3222786" இருந்து மீள்விக்கப்பட்டது