பேரியம் புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேரியம் புளோரைடு
Barium fluoride
இனங்காட்டிகள்
7787-32-8 Y
ChemSpider 56421 Y
InChI
 • InChI=1S/Ba.2FH/h;2*1H/q+2;;/p-2 Y
  Key: OYLGJCQECKOTOL-UHFFFAOYSA-L Y
 • InChI=1/Ba.2FH/h;2*1H/q+2;;/p-2
  Key: OYLGJCQECKOTOL-NUQVWONBAV
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 62670
வே.ந.வி.ப எண் CQ9100000
SMILES
 • [Ba+2].[F-].[F-]
பண்புகள்
BaF2
வாய்ப்பாட்டு எடை 175.34 கி/மோல்
தோற்றம் வெண்ணிற கனசதுரப் படிகங்கள்
அடர்த்தி 4.893 கி/செமீ3
உருகுநிலை 1,368 °C (2,494 °F; 1,641 K)
கொதிநிலை 2,260 °C (4,100 °F; 2,530 K)
0.16 கி/100 மிலி (20 °செ)
கரைதிறன் மெத்தனால், எத்தனால் ஆகியவற்றில் கரையும்
-51.0·10−6 செமீ3/மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.455
கட்டமைப்பு
படிக அமைப்பு புளோரைட்டு (கனசதுரம்), cF12
புறவெளித் தொகுதி Fm3m, No. 225
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு Harmful (Xn)
R-சொற்றொடர்கள் R20/22
S-சொற்றொடர்கள் (S2), S28
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாதது
Lethal dose or concentration (LD, LC):
250 மிகி/கிகி, வாய்வழி (எலி)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பேரியம் குளோரைடு
பேரியம் புரோமைடு
பேரியம் அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் பெரிலியம் புளோரைடு
மெக்னீசியம் புளோரைடு
கால்சியம் புளோரைடு
இசுட்ரோன்சியம் புளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

பேரியம் புளோரைடு (Barium fluoride) (BaF2) பேரியம் மற்றும் புளோரின் ஆகிய தனிமங்கள் இணைந்த வேதிச் சேர்மம் ஆகும். இது ஒளி ஊடுருவக்கூடிய திண்மம் ஆகும். இது இயற்கையில் பிரான்க்டிக்சோனைட்டு கனிமூலமாக இயற்கையில் காணப்படுகிறது.[1]

அமைப்பு[தொகு]

இத்திண்மம் புளோரைட்டின் அமைப்பையும் உயர் அழுத்தத்தில் காரீய குளோரைடு அமைப்பையும் கொண்டுள்ளது.[2] ஆவி நிலையில் BaF2 மூலக்கூறானது தோராயமாக F-Ba-F  108° கோண அளவைக் கொண்ட நேர்கோடல்லாத அமைப்பைக் கொண்டுள்ளது.[3] இது வலுவளவு ஒட்டு இலத்திரன் சோடிகளின் தள்ளுகைக் கொள்கையின்படி நேர்கோட்டு வடிவத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு மாறாக விதிவிலக்கான அமைப்பைக் கொண்டுள்ளது.  தொடக்கத்திலிருந்து வந்த கணிப்புக்கள், இணைதிறன் கூடுகளுக்கு உட்புறமாக உள்ள d ஆர்பிட்டால்களிலிருந்து வந்த பங்களிப்புகளைச் சார்ந்ததாக முன்மொழியப்பட்டுள்ளது.[4] மற்றொரு கோட்பாடானது பேரியம் அணுவின் இலத்திரன் கருவின் முனைவுறு தன்மையானது Ba-F பிணைப்புகளுடன் இடைவினைபுரிந்து மின்சுமையானது தோராயமாக நான்முகி வடிவ பகிர்வை உருவாக்கலாம் என்கிறது.[5]

பயன்கள்[தொகு]

அலுமினிய சுத்திகரிப்பு செயல்முறையில் ஒரு சேர்க்கைப் பொருளாகப் பயன்படுகிறது. பூச்சுக்களிலும், பற்றவைப்புக்கான உலோகப்பொடிகள் மற்றும் உலோகக்கம்பிகளிலும் பகுதிப்பொருளாகப் பயன்படுகிறது. ஒரு இளக்கியாகவும், ஒளிபுகாத்தன்மையை உருவாக்கும் காரணியாகவும் பயன்படுகிறது.[6]

மேற்கோள்கள்[தொகு]

 1. Radtke A.S., Brown G.E. (1974). "Frankdicksonite, BaF2, a New Mineral from Nevada". American Mineralogist 59: 885–888. http://www.minsocam.org/ammin/AM59/AM59_885.pdf. 
 2. A.F Wells (1984). Structural inorganic chemistry -5th Edition. Oxford: Clarendon Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-855370-6. https://archive.org/details/structuralinorga0000well_m8i1. 
 3. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
 4. Seijo, Luis; Barandiarán, Zoila; Huzinaga, Sigeru (1991). "Ab initio model potential study of the equilibrium geometry of alkaline earth dihalides: MX2 (M=Mg, Ca, Sr, Ba; X=F, Cl, Br, I)". The Journal of Chemical Physics 94 (5): 3762. doi:10.1063/1.459748. 
 5. Bytheway, Ian; Gillespie, Ronald J.; Tang, Ting-Hua; Bader, Richard F. W. (1995). "Core Distortions and Geometries of the Difluorides and Dihydrides of Ca, Sr, and Ba". Inorganic Chemistry 34 (9): 2407. doi:10.1021/ic00113a023. 
 6. https://www.solvay.com/en/markets-and-products/featured-products/Barium-fluoride.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரியம்_புளோரைடு&oldid=3849192" இலிருந்து மீள்விக்கப்பட்டது