கிரிப்டான் இருபுளோரைடு
|
| |||
| பெயர்கள் | |||
|---|---|---|---|
| ஐயூபிஏசி பெயர்
கிரிப்டான்(II) புளோரைடு | |||
| வேறு பெயர்கள்
கிரிப்டான் புளோரைடு | |||
| இனங்காட்டிகள் | |||
| 13773-81-4 | |||
| ChemSpider | 75543 | ||
| யேமல் -3D படிமங்கள் | Image | ||
| பப்கெம் | 83721 | ||
| |||
| பண்புகள் | |||
| F2Kr | |||
| வாய்ப்பாட்டு எடை | 121.79 g·mol−1 | ||
| தோற்றம் | நிறமற்ற படிகங்கள் (திண்மம்) | ||
| அடர்த்தி | 3.24 கி செ.மீ−3 (திண்மம்) | ||
| வினைபுரியும் | |||
| கட்டமைப்பு | |||
| படிக அமைப்பு | Body-centered tetragonal[1] | ||
| புறவெளித் தொகுதி | P42/mnm, No. 136 | ||
| Lattice constant | a = 0.4585 nm, c = 0.5827 nm | ||
| மூலக்கூறு வடிவம் | |||
| இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 0 D | ||
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |||
கிரிப்டான் இருபுளோரைடு (Krypton difluoride) என்பது KrF2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கிரிப்டான் மற்றும் புளோரின் சேர்ந்து உருவாகும் இச்சேர்மமே முதலில் கண்டறியப்பட்ட கிரிப்டான் சேர்மமாகும்.[2] நிறமற்ற திண்மமான இச்சேர்மம் துரிதமாக ஆவியாகும் தன்மை கொண்டதாகும். கிரிப்டான் இருபுளோரைடின் மூலக்கூற்று வடிவமைப்பில் மூலக்கூறுகள் நேரியல் வடிவில் காணப்படுகின்றன. Kr−F பிணைப்புகளுக்கு இடையில் 188.9 பை.மீ இடைவெளி உள்ளது. வலிமையான இலூயிக் அமிலங்களுடன் கிரிப்டான் இருபுளோரைடு வினைபுரிந்து KrF+ உப்புகள் மற்றும் Kr2F+3 நேர்மின் அயனிகளை உருவாக்குகிறது.
தயாரிப்பு முறை
[தொகு]மின்கசிவு முறை, ஒளிவேதியியல் முறை, சூட்டுக் கம்பி முறை மற்றும் புரோட்டன் மோதல் முறை உள்ளிட்ட பல்வேறு முறைகளில் கிரிப்டான் இருபுளோரைடைத் தயாரிக்க முடியும். -265 பாகை செல்சியசு வெப்பநிலையில் புளோரின் – ஆர்கான் வாயுக் கலைவையில், கிரிப்டான் புற ஊதாக்கதிர் வீச்சுக்குள்ளாக்கப்பட்டாலும் கிரிப்டான் இருபுளோரைடைத் தயாரிக்க முடியும். விளை பொருளை -78 பாகை வெப்பநிலையில் சிதைவடைதலின்றிச் சேமிக்க முடியும்.
மின்கசிவு முறை
[தொகு]கிரிப்டான் இருபுளோரைடைத் தயாரிப்பதற்காக முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட முறை மின்கசிவு முறையாகும். கிரிப்டான் நான்குபுளோரைடு தயாரிப்பதற்கான முறையாக மின்கசிவு முறை கருதப்பட்டு, உற்பத்தி செய்யப்பட்டச் சேர்மம் கிரிப்டான் நான்குபுளோரைடு எனத் தவறுதலாக அடையாளம் காணப்பட்டது எனப் பின்னர் உணரப்பட்டது. இம்முறையில் 1:1 முதல் 2:1 வரையிலான F2 , Kr வாயுக்கலவை 40 முதல் 60 டோர் அழுத்தத்தில் உண்டாகும் மின்வில்லுக்கு இடையில் அதிகமான ஆற்றல் உண்டாகிறது. கிட்டத்தட்ட 0.25 கி/ம விளைபொருள் உருவாகிறது. உருவாகும் விளைபொருளின் அளவு உறுதியாக நம்புவதற்கில்லை என்பதுதான் இம்முறையில் உள்ள குறைபாடாகும்.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ R. D. Burbank, W. E. Falconer and W. A. Sunder (1972). "Crystal Structure of Krypton Difluoride at −80 °C". Science 178 (4067): 1285–1286. doi:10.1126/science.178.4067.1285. பப்மெட்:17792123. https://archive.org/details/sim_science_science_1972-12-22_178_4067/page/n59.
- ↑ Grosse, A. V.; Kirshenbaum, A. D.; Streng, A. G.; Streng, L. V. (1963). "Krypton Tetrafluoride: Preparation and Some Properties". Science 139 (3559): 1047–8. doi:10.1126/science.139.3559.1047. பப்மெட்:17812982. https://archive.org/details/sim_science_1963-03-15_139_3559/page/1046.
- ↑ Lehmann, J (2002). "The chemistry of krypton". Coordination Chemistry Reviews 233-234: 1. doi:10.1016/S0010-8545(02)00202-3.
- ↑ Kinkead, S. A.; Fitzpatrick, J. R.; Foropoulos, J. Jr.; Kissane, R. J.; Purson, D. (1994). "3. Photochemical and thermal Dissociation Synthesis of Krypton Difluoride". Inorganic Fluorine Chemistry: Toward the 21st Century. San Francisco, California: American Chemical Society. pp. 40–54. doi:10.1021/bk-1994-0555.ch003. ISBN 978-0-8412-2869-6.
புற இணைப்புகள்
[தொகு]உசாத்துணை
[தொகு]- Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. ISBN 0080379419.

