கிரிப்டான் இருபுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரிப்டான் இருபுளோரைடு
Skeletal formula of krypton difluoride with a dimension
Skeletal formula of krypton difluoride with a dimension
Spacefill model of krypton difluoride
Spacefill model of krypton difluoride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கிரிப்டான்(II) புளோரைடு
வேறு பெயர்கள்
கிரிப்டான் புளோரைடு
இனங்காட்டிகள்
13773-81-4 N
ChemSpider 75543 Y
InChI
  • InChI=1S/F2Kr/c1-3-2 Y
    Key: QGOSZQZQVQAYFS-UHFFFAOYSA-N Y
  • InChI=1/F2Kr/c1-3-2
    Key: QGOSZQZQVQAYFS-UHFFFAOYAJ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83721
SMILES
  • F[Kr]F
பண்புகள்
F2Kr
வாய்ப்பாட்டு எடை 121.79 g·mol−1
தோற்றம் நிறமற்ற படிகங்கள் (திண்மம்)
அடர்த்தி 3.24 கி செ.மீ−3 (திண்மம்)
வினைபுரியும்
கட்டமைப்பு
படிக அமைப்பு Body-centered tetragonal[1]
புறவெளித் தொகுதி P42/mnm, No. 136
Lattice constant a = 0.4585 nm, c = 0.5827 nm
மூலக்கூறு வடிவம்
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 0 D
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

கிரிப்டான் இருபுளோரைடு (Krypton difluoride) என்பது KrF2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கிரிப்டான் மற்றும் புளோரின் சேர்ந்து உருவாகும் இச்சேர்மமே முதலில் கண்டறியப்பட்ட கிரிப்டான் சேர்மமாகும்.[2] நிறமற்ற திண்மமான இச்சேர்மம் துரிதமாக ஆவியாகும் தன்மை கொண்டதாகும். கிரிப்டான் இருபுளோரைடின் மூலக்கூற்று வடிவமைப்பில் மூலக்கூறுகள் நேரியல் வடிவில் காணப்படுகின்றன. Kr−F பிணைப்புகளுக்கு இடையில் 188.9 பை.மீ இடைவெளி உள்ளது. வலிமையான இலூயிக் அமிலங்களுடன் கிரிப்டான் இருபுளோரைடு வினைபுரிந்து KrF+ உப்புகள் மற்றும் Kr2F+3 நேர்மின் அயனிகளை உருவாக்குகிறது.

தயாரிப்பு முறை[தொகு]

மின்கசிவு முறை, ஒளிவேதியியல் முறை, சூட்டுக் கம்பி முறை மற்றும் புரோட்டன் மோதல் முறை உள்ளிட்ட பல்வேறு முறைகளில் கிரிப்டான் இருபுளோரைடைத் தயாரிக்க முடியும். -265 பாகை செல்சியசு வெப்பநிலையில் புளோரின்ஆர்கான் வாயுக் கலைவையில், கிரிப்டான் புற ஊதாக்கதிர் வீச்சுக்குள்ளாக்கப்பட்டாலும் கிரிப்டான் இருபுளோரைடைத் தயாரிக்க முடியும். விளை பொருளை -78 பாகை வெப்பநிலையில் சிதைவடைதலின்றிச் சேமிக்க முடியும்.

மின்கசிவு முறை[தொகு]

கிரிப்டான் இருபுளோரைடைத் தயாரிப்பதற்காக முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட முறை மின்கசிவு முறையாகும். கிரிப்டான் நான்குபுளோரைடு தயாரிப்பதற்கான முறையாக மின்கசிவு முறை கருதப்பட்டு, உற்பத்தி செய்யப்பட்டச் சேர்மம் கிரிப்டான் நான்குபுளோரைடு எனத் தவறுதலாக அடையாளம் காணப்பட்டது எனப் பின்னர் உணரப்பட்டது. இம்முறையில் 1:1 முதல் 2:1 வரையிலான F2 , Kr வாயுக்கலவை 40 முதல் 60 டோர் அழுத்தத்தில் உண்டாகும் மின்வில்லுக்கு இடையில் அதிகமான ஆற்றல் உண்டாகிறது. கிட்டத்தட்ட 0.25 கி/ம விளைபொருள் உருவாகிறது. உருவாகும் விளைபொருளின் அளவு உறுதியாக நம்புவதற்கில்லை என்பதுதான் இம்முறையில் உள்ள குறைபாடாகும்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. R. D. Burbank, W. E. Falconer and W. A. Sunder (1972). "Crystal Structure of Krypton Difluoride at −80 °C". Science 178 (4067): 1285–1286. doi:10.1126/science.178.4067.1285. பப்மெட்:17792123. 
  2. Grosse, A. V.; Kirshenbaum, A. D.; Streng, A. G.; Streng, L. V. (1963). "Krypton Tetrafluoride: Preparation and Some Properties". Science 139 (3559): 1047–8. doi:10.1126/science.139.3559.1047. பப்மெட்:17812982. 
  3. Lehmann, J (2002). "The chemistry of krypton". Coordination Chemistry Reviews 233-234: 1. doi:10.1016/S0010-8545(02)00202-3. 
  4. Kinkead, S. A.; Fitzpatrick, J. R.; Foropoulos, J. Jr.; Kissane, R. J.; Purson, D. (1994). "3. Photochemical and thermal Dissociation Synthesis of Krypton Difluoride". Inorganic Fluorine Chemistry: Toward the 21st Century. San Francisco, California: American Chemical Society. பக். 40–54. doi:10.1021/bk-1994-0555.ch003. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8412-2869-6. 

புற இணைப்புகள்[தொகு]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிப்டான்_இருபுளோரைடு&oldid=2043404" இலிருந்து மீள்விக்கப்பட்டது