நைட்ரசோனியம் ஆக்டாபுளோரோசெனேட்டு(VI)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நைட்ரசோனியம் ஆக்டாபுளோரோசெனேட்டு(VI)
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
நைட்ரசோனியம் ஆக்டாபுளோரோசெனேட்டு (VI)
இனங்காட்டிகள்
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • N[O+].N[O+].F[Xe](F)(F)(F)(F)(F)(F)[F-2]
பண்புகள்
(NO)
2
XeF
8
அடர்த்தி 3.354 கி/செ.மீ³
வினைபுரியும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

நைட்ரசோனியம் ஆக்டாபுளோரோசெனேட்டு (VI) (Nitrosonium octafluoroxenate(VI)) என்பது (NO)
2
XeF
8
வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செனானுடன் நைட்ரசன், ஆக்சிசன் மற்றும் புளோரின் ஆகிய தனிமங்கள் வினைபுரிந்து இச்சேர்மம் தோன்றுகிறது. நைட்ரசோனியம் நேர்மின் அயனிகள்,(NO+) மற்றும் ஆக்டாபுளோரோசெனேட்டு (VI) எதிர்மின் அயனிகள், (XeF2−8) நன்றாக பிரிக்கப்பட்டதொரு அயனச்சேர்மமாக நைட்ரசோனியம் ஆக்டாபுளோரோசெனேட்டு (VI) விளங்குகிறது. ஆக்டாபுளோரோசெனேட்டு (VI) அயனி சதுரயெதிர் பட்டக மூலக்கூற்று வடிவியல் அமைப்பைக் கொண்டுள்ளது. இவ்வடிவில் உள்ள Xe-F பிணைப்புகளின் பிணைப்பு நீளங்கள் 1.971 Å, 1.946 Å, 1.958 Å, 2.052 Å, மற்றும் 2.099 ஆகும[1]

தயாரிப்பு[தொகு]

செனான் அறுபுளோரைடுடன்(XeF6) நைட்ரோசில் புளோரைடுடன் (NOF) சேர்த்து வினைபுரியச் செய்யும் தொகுப்பு முறையில் நைட்ரசோனியம் ஆக்டாபுளோரோசெனேட்டு தயாரிக்கப்படுகிறத:[2]

XeF
6
+ 2 NOF → (NO)
2
XeF
8

ஆக்டாபுளோரோசெனேட்டு அயனிகளை பகுதிப்பொருளாகக் கொண்டுள்ள மற்ற சேர்மங்கள் கார உலோக உப்புகளையும் உள்ளடக்கியுள்ளன. இவற்றில் Cs2XeF8 மற்றும் Rb2XeF8 ஆகியனவும் உள்ளடங்கும். இவை 400 °செ வெப்பநிலை வரையிலும் [3][4] நிலைப்புத் தன்மையுடன் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Peterson, W.; Holloway, H.; Coyle, A.; Williams, M. (Sep 1971). "Antiprismatic Coordination about Xenon: the Structure of Nitrosonium Octafluoroxenate(VI)". Science 173 (4003): 1238–1239. doi:10.1126/science.173.4003.1238. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-8075. பப்மெட்:17775218. Bibcode: 1971Sci...173.1238P. 
  2. Cotton (2007). Advanced Inorganic Chemistry (6th ). Wiley-India. பக். 588. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-265-1338-1. 
  3. Chandra, Sulekh (2004). Comprehensive Inorganic Chemistry. New Age International. பக். 308. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-224-1512-1. 
  4. Holleman, A. F.; Wiberg,, E. (2001). Inorganic Chemistry. San Diego: Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-12-352651-5.