புளுட்டோனியம் எக்சாபுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புளுட்டோனியம் எக்சாபுளோரைடு[1]
Stereo structural formula of plutonium hexafluoride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
புளுட்டோனியம்(VI) புளோரைடு
இனங்காட்டிகள்
13693-06-6 Y
ChemSpider 452599 N
InChI
 • InChI=1S/6FH.Pu/h6*1H;/q;;;;;;+6/p-6 N
  Key: OJSBUHMRXCPOJV-UHFFFAOYSA-H N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 518809
SMILES
 • F[Pu](F)(F)(F)(F)F
பண்புகள்
F6Pu
வாய்ப்பாட்டு எடை 357.99 g·mol−1
தோற்றம் அடர் சிவப்பு, ஒளிபுகா படிகங்கள்
அடர்த்தி 5.08 கிராம்•செ.மீ−3
உருகுநிலை 52 °C (126 °F; 325 K)
கொதிநிலை 62 °C (144 °F; 335 K)
கட்டமைப்பு
படிக அமைப்பு சாய்சதுரம், oP28
புறவெளித் தொகுதி Pnma, No. 62
ஒருங்கிணைவு
வடிவியல்
எண்முகம் (Oh)
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 0 D
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

புளுட்டோனியம் எக்சாபுளோரைடு (Plutonium hexafluoride) என்பது F6Pu என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புளுட்டோனியத்தின் புளோரைடு உப்பான இச்சேர்மத்தை புளுட்டோனியத்தின் சீரொளி செறிவூட்டலுக்காக, குறிப்பாக கதிரியக்க யுரேனியத்திலிருந்து தூய புளுட்டோனியம்-239 உற்பத்தி செய்யப் பயன்படுத்துகிறார்கள். புளூடானியம்-240 இன் தன்னியக்க சிதைவு மூலம் உருவாகும் நியூட்ரான்களால் குறைவு-நிறை அணுக்கரு ஆயுத வடிவமைப்புகளின் முன்கூட்டிய தீப்பற்றலை தவிர்க்க தூய புளுட்டோனியம் தேவைப்படுகிறது.

செம்பழுப்பு நிறத்தில் ஆவியாகக்கூடிய படிகத்திண்மமாக புளுட்டோனியம் எக்சாபுளோரைடு காணப்படுகிறது [1]. இச்சேர்மத்தின் பதங்கமாதல் வெப்பம் 12.1 கிலோகலோரி/மோல் [2] மற்றும் ஆவியாதல் வெப்பம் 7.4 கிலோகலோரி/மோல் என்று மதிப்பிடப்பட்டுள்ளது [2]. அதிகமான அரிப்புத்தன்மையாலும் தன்னிச்சையான கதிரியக்கப் பகுப்பிற்கு வாய்ப்பு இருப்பதாலும் புளுட்டோனியம் எக்சாபுளோரைடை கையாள்வதற்கு கடினமாக இருக்கும் [3][4]. புளுட்டோனியம் டெட்ராபுளோரைடை தனிமநிலை புளோரின் போன்ற வலிமையான புளோரினேற்றும் முகவர்களைப் பயன்படுத்தி புளோரினேற்றம் செய்து புளுட்டோனியம் எக்சாபுளோரைடு தயாரிக்கப்படுகிறது [2][5][6][7].

PuF4 + F2 → PuF6

புளுட்டோனியம்(III) புளோரைடு அல்லது புளுட்டோனியம்(IV) ஆக்சைடை புளோரினேற்றம் செய்தும் புளுட்டோனியம் எக்சாபுளோரைடை தயாரிக்கலாம் [6]

2 PuF3 + 3 F2 → 2 PuF6
PuO2 + 3 F2 → PuF6 + O2

டையாக்சிசன் டைபுளோரைடைப் பயன்படுத்தி 1984 ஆம் ஆண்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் குறைவான வெப்பநிலையில் புளுட்டோனியம் எக்சாபுளோரைடு தயாரிக்கப்பட்டது. முந்தைய தயாரிப்பு நுணுக்கங்கள் அதிக அளவு வெப்ப நிலையில் தயாரிக்கப்பட்டன. மேலும் இம்முறையில் உருவான புளுட்டோனியம் எக்சாபுளோரைடு விரைவில் சிதைவடைவதாகவும் இருந்தது [8]. ஒரு வலிமையான புளோரினேற்றும் முகவராக ஐதரசன் புளோரைடு கருதப்பட்டாலும் புளோரினேற்றத்திற்கு அது போதுமானதாக இல்லை [9].

அலைநீளம் 520 நானோமீட்டருக்கும் குறைவான லேசர் கதிர்வீச்சின் கீழ் புளுட்டோனியம் எக்சாபுளோரைடு புளுட்டோனியம் பெண்டாபுளோரைடு மற்றும் புளோரின் ஆக சிதைவடைகிறது [10]. மேலும் அதிக கதிர்வீச்சுக்குப் பின்னர் இது புளுட்டோனியம் டெட்ராபுளோரைடாகச் சிதைவடைகிறது [11].

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 Lide, David R. (2009). Handbook of Chemistry and Physics (90 ). Boca Raton, FL: CRC Press. பக். 4–81. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4200-9084-0.  (webelements.com)
 2. 2.0 2.1 2.2 Alan E. Florin, Irving R. Tannenbaum, Joe F. Lemons: "Preparation and Properties of Plutonium Hexafluoride and Identification of Plutonium(VI) Oxyfluoride", Journal of Inorganic and Nuclear Chemistry, 1956, 2 (5–6), p. 368–379; எஆசு:10.1016/0022-1902(56)80091-2.
 3. Ned E. Bibler: "α and β Radiolysis of Plutonium Hexafluoride Vapor", J. Phys. Chem., 1979, 83 (17), p. 2179–2186; எஆசு:10.1021/j100480a001.
 4. M. J. Steindler, D. V. Steidl, J. Fischer: "The Decomposition of Plutonium Hexafluoride by Gamma Radiation", Journal of Inorganic and Nuclear Chemistry, 1964, 26 (11), p. 1869–1878; எஆசு:10.1016/0022-1902(64)80011-7.
 5. A. E. Florin (9 November 1950). "Plutonium Hexafluoride: Second Report On The Preparation and Properties (LA-1168)". Los Alamos Scientific Laboratory. http://www.fas.org/sgp/othergov/doe/lanl/lib-www/la-pubs/00419717.pdf. 
 6. 6.0 6.1 C. J. Mandleberg, H. K. Rae, R. Hurst, G. Long, D. Davies, K. E. Francis: "Plutonium Hexafluoride", Journal of Inorganic and Nuclear Chemistry, 1956, 2 (5–6), p. 358–367; எஆசு:10.1016/0022-1902(56)80090-0.
 7. Bernard Weinstock, John G. Malm: "The Properties of Plutonium Hexafluoride", Journal of Inorganic and Nuclear Chemistry, 1956, 2 (5–6), p. 380–394; எஆசு:10.1016/0022-1902(56)80092-4.
 8. Malm, J. G.; Eller, P. G.; Asprey, L. B. (1984). "Low temperature synthesis of plutonium hexafluoride using dioxygen difluoride". Journal of the American Chemical Society 106 (9): 2726–2727. doi:10.1021/ja00321a056. 
 9. "Evaluation of the U.S. Department of Energy's Alternatives for the Removal and Disposition of Molten Salt Reactor Experiment Fluoride Salts". http://books.nap.edu/openbook.php?record_id=5538&page=42. 
 10. http://www.freepatentsonline.com: Photochemical Preparation of Plutonium Pentafluoride; PDF.
 11. E. A. Lobikov, V. N. Prusakov, V. F. Serik: "Plutonium Hexafluoride Decomposition under the Action of Laser Radiation", Journal of Fluorine Chemistry, 1992, 58 (2–3), C 54, p. 277; எஆசு:10.1016/S0022-1139(00)80734-4.